மட்டன் குழம்பு | arusuvai


மட்டன் குழம்பு

வழங்கியவர் : swarna vijayakumaar
தேதி : வியாழன், 23/06/2011 - 13:37
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
4.25
8 votes
Your rating: None

 

 • மட்டன் - அரைக் கிலோ
 • பெரிய வெங்காயம் - ஒன்று
 • சின்ன வெங்காயம் - பத்து
 • பூண்டு - 12
 • இஞ்சி - ஒரு துண்டு
 • தக்காளி - ஒன்று
 • அரைக்க:
 • தேங்காய் - ஒரு கப் (முக்கால் தேங்காய் )
 • மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி (அல்லது காரத்திற்கேற்ப)
 • மல்லித் தூள் - 4 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
 • சோம்பு - ஒரு தேக்கரண்டி
 • தாளிக்க:
 • எண்ணெய் - தேவைக்கு
 • சோம்பு - அரை தேக்கரண்டி
 • பட்டை - 4 துண்டு
 • கிராம்பு - ஐந்து
 • கறிவேப்பிலை - ஒரு கொத்து

 

கறியை சுத்தமாக கழுவி குக்கரில் போட்டு நான்கு டம்ளர் தண்ணீர், ஒரு தேக்கரண்டி எண்ணெய், மஞ்சள் தூள் சிறிதளவு, மிளகாய் தூள் சிறிது, சின்ன வெங்காயம், பூண்டு சிறிது, இஞ்சி தட்டியது, உப்பு கொஞ்சம் சேர்த்து நான்கு விசில் வைத்து வேக வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.

அதில் பெரிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

வேக வைத்த கறி தண்ணீரில் அரைத்த தேங்காய் விழுது, தாளித்த பொருளை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வைக்கவும். (தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம் )

சுவையான மட்டன் குழம்பு தயார். இது சுடு சாதம், சப்பாத்தி, பரோட்டா, இட்லிக்கு பொருத்தமாக இருக்கும்.


சுவர்ணா

சம சூப்பர் மட்டன் குழம்பு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ஸ்வர்

ஹாய் ஸ்வர், எனக்கு கொஞ்சம் போல சுடு சாதம் தாங்க சாப்பிட்டு எப்படி இருந்ததுனு சொல்லுரேன் ;)))) கலக்குரிங்க ஸ்வர் வாழ்த்துக்கள்..

உன்னை போல பிறரையும் நேசி.

ஸ்வர்ணா அக்கா

சூப்பரா செய்து இருக்கீங்க ஆனா எனக்கு தான் மட்டன் பிடிக்காது. வாழ்த்துக்கள் by Elaya.G

ஹாய்!ஸ்வர்ணா!

உங்க கூட இப்ப தான் முதல் தடவை பேசுகிரேன்..... மட்டன் குழம்போட கலர் கண்ணப் பரிக்குதுப்பா.....எனக்கு மட்டன்ன்னா ரொம்ப புடிக்கும் கண்டிப்பா செய்து பார்க்கிரேன், வாழ்த்துக்கள் ஸ்வர்ணா....

ஸ்வர்

வாவ்!போட்டோஸ் சூப்பர் ஸ்வர்.

உங்க போட்டோவை பார்த்து மயங்கிட்டேன் ஸ்வர்.மட்டன் சாப்பிடாத என்னை

மட்டன் விசிறி ஆக்கிடுவீங்க போல.தெளிவான விளக்கங்களோட,அழகான

படங்களோட அருமையான குறிப்பு கொடுத்திருக்கீங்க ஸ்வர்.

பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் தங்கப் பெண்ணே.

அன்புடன்
நித்திலா

நன்றி.......

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு நன்றிகள் பல.......

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி

முதல் வருகைக்கு மிக்க நன்றி வனி.........

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தேவி

தேவி சாதம் அனுப்பிருக்கேன் டா சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லு சரியா .

வாழ்த்துக்கு மிக்க நன்றி தேவி.....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இளையா

இளையா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சங்கீதா

சங்கீதா அறுசுவைக்கு அன்புடன் அழைக்கிறேன்.
ஆம் சங்கீதா நானும் இப்பதான் பேசுகிரேன் உங்ககூட நலமா?
உங்களுக்கும் மட்டன் தான் பிடிக்குமா எனக்கும் ரொம்ப இஸ்டம் பா வாழ்த்துக்கு மிக்க நன்றி.....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.