நான் கிங் ஸ்டைல் நூடுல்ஸ் (சைனா)

தேதி: June 7, 2006

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சாதா நூடுல்ஸ் - 1 சிறிய பாக்கெட்
நறுக்கிய வெங்காயத் துண்டுகள் - 1 கப்
முளைகட்டிய பச்சைப்பயறு - 1 கப்
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
அஜினோமோட்டோ - 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப


 

பாக்கெட்டில் போட்டுள்ளபடி நூடுல்ஸ் தயார் செய்து ஆறவைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, நூடுல்ஸை இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும்.
இதை தனியே எடுத்துவைத்துவிட்டு, மீண்டும் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயத்தை லேசாக வதக்கி பிறகு முளைகட்டியப்பயிரையும் சேர்த்து வதக்கவும்.
ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
இத்துடன் தேவையான உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ், அஜினோமோட்டோ சேர்த்து 3 நிமிடங்கள் சமைக்கவும்.
இறுதியில் நூடுல்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்.
பரிமாறும் போது சிவப்பு, பச்சை மிளகாய் சாஸ் சேர்த்துப் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்