அவசரம்.குழந்தைக்கு வயிற்றுவலி

ஹாய் தோழிகளே,என் 1 வயது 3 மாத குழந்தை ஒரே அழுது கொண்டிருக்கிரது.3முறை வாந்தி எடுத்துவிட்டது.வயிற்று வலியோ தெரியாது.க்ரைப் வாட்டர் கொடுத்தேன்.வயிற்ருக்கு எண்னெய் பூசினேன்.வயிற்று நோக்கு என்ன செய்ரது?டொக்டரிடம் போகனுமா?பகல் கருவாடும் பருப்பும் கிழங்கும் கொடுத்தேன்.இரவு உணவாக இலகுவில் செமிக்கக் கூடிய உணவாக என்ன கொடுக்கலாம்.

//கருவாடும் பருப்பும் கிழங்கும் // - ஒரு வயதே ஆன குழந்தைக்கா கருவாடு???!!! முதல்ல டாக்டரை பாருங்க... வாந்தியும் எடுத்திருக்கு பிள்ளைன்னா வீட்டு வைத்தியம் செய்து காத்திருக்காம மருத்துவரை பார்ப்பது நல்லது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு கருவாடெல்லாம் கொடுக்க கூடாது என்று தெரியாதுப்பா.ஒத்துகொள்ளாதா?இரவு கணவர் வர லேட்டாகிட்டு.பிள்ளையும் தூங்கிட்டு.இப்ப பிரச்சினை ஒன்னும் இல்லை.இனி கவனமாக பார்த்து கொல்றேன்.

"வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.
ஆனால், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார்"

- ஷிம்றி -

வயிற்றில் நல்ல எண்ணை தடவி விட்டு சூடானா வெண்ணீரை குடிக்கும் பக்குவத்தில் கொடுங்க,

பெரியவகளே இரவில் லைட்டான உணவு தான் சாப்பிடனும்,
பிள்ளைகளுக்கு எளிதில் ஜீரணமாகும் உணவு தான் கொடுக்கனும்,
இப்போதைக்கு பதில் அதிகமா போட முடியல, எளிதில் ஜீரனமாகும் உணவு என்றால் ரொம்ப ஹார்டாமென்று விழுங்கும் உணவு வேண்டாம்.

Jaleelakamal

kolanthaikku karuvaadu iyo iyo emma namakke athu evalo late aagum saapda hum pappaku eppadi curd rice rasam chip ithu pola lite ha kudunga ckram serikkum nala irukkum

Jaleela medam neenga correcta solringa super eazy method oil and hot water kudukalam romba thanks ellarukum use fulla irukkum aparam en pappa 3 days once tha motion poran enna panalam pls tips kudunga therinjavanga

Gouthamdeva

கீழே தமிழ் எழுத்துதவி பாத்து தமிழ்ல தட்டுங்கபா;-) பதில் சொல்ல எல்லாரும் வருவாங்க ;)

உங்க பாப்பாக்கு எத்தனை மாதம்..?

தாய்ப்பால் மட்டுமே குடிக்கிற பாப்பான்னா ஒன்னும் பண்ண வேண்டாம் .., நல்லா யூரின் போனாலே போதும்பா.

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்