yaravathu sollunga pls..........

yennudaya 3 month paapaa cold vanthu romba kastapaduran.doctor syrup koduthaar. yethuvum ketka villai romba alugiraan kastamaga irukkirathu. yenna seyvathu yaravathu sollunga pls

வெற்றிலை எடுத்து அதில் விக்ஸ் தடவி அதை அகல் விலகில் சூடு பன்னி அதை குழந்தைக்கு மார்பு, உடம்பின் இரு பக்கங்கலிலும் தேய்த்து விடுங்கல். தினமும் செய்யவும். என் மகனுக்கு கூட பிரந்தவுடன் இப்படி தான் இருந்தது.இப்படி தினமும் செய்து சரியாகி விட்டது. நீங்க முயற்சி செய்து பாருங்க தோழி.

உங்கள் உள்ளங்கையில் சிறிது விக்ஸ் எடுத்து, நெஞ்சு, பாதம், முதுகுக்கு நல்லா தேய்ச்சு விடுங்க.......பாதத்துக்கு சாக்ஸ் போட்டு விடுங்க(இரவில் இருமல் வருவதை தடுக்க).......

மூக்கடைப்பு இருந்தால் Nasal Spray வாங்கி உபயோகப்படுத்துங்க.

குளிக்க வைக்கும் போது சுடுநீரில் சிறிது யூகலிப்டஸ் ஆயில் ஊற்றி அந்த நீரில் குழந்தையை குளிக்க வைங்க. உடம்பு வலி குறையும்..

நீங்க சிக்கன், மிளகு ரசம் சாப்பிடுங்க...

குழந்தை விரைவில் குணமடைவான்...... கவலைப்படாதிங்க....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

விக்ஸ் குழந்தைக்கு தேய்க்க கூடாது என்று இந்து நியூஸ் பேப்பர்ல ஒரு ஆர்டிக்கல் படிச்சேன்,அதனால நான் விக்ஸ் தேய்ப்பது கிடையாது.ஒரு கரண்டியில கொஞ்சம் தேங்காய் எண்ணெயை லேசா சூடுப் பண்ணிட்டு,அடுப்பை ஆப் பண்ணிட்டு இரண்டு பீஸ்(அம்பிகா கற்பூரம்) கற்பூரம் போட்டு கரைக்கவும்,மிதமான சூட்டில் குழந்தைக்கு நெஞ்சு,உள்ளங்கால்,உள்ளங்கை,சைட்ல விலால,தொண்டை,பின்னாடி முதுகில் தேய்த்து விடவும்.ஒரு நாளைக்கு மூணு தடவை செய்யவும்,தூங்குவதற்கு முண்ணாடி பண்ணால் நல்ல பலன் உண்டு.நெஞ்சு சளிக்கு:ஒமவள்ளி இலையின் சாறெடுத்து ஒரு டீஸ்பூன் வீதம் தாய்பாலில் கலக்கி ஒரு நாளைக்கு மூணு தடவை கொடுக்கவும்.

இதுவும் கடந்துப் போகும்.

3மாதக் குழந்தைக்கு Nasal Spray தேவையற்றது........
குழந்தைக்கு டாக்டர் கொடுத்த சிரப் கொடுங்கள்..எந்த மருந்தும் 5 நாளாவது கொடுத்தால்தான் குணம் தெரியும்..மேலும் குளிர்ச்சி ஆகாமல் பார்த்துக் கொள்ளவும்.நீங்கள் சூடான அயிட்டம்ஸ் சாப்பிடவும்.தேங்காய் தண்ணீர் கூட (நீங்கள் குடிப்பதால் குழந்தைக்கு சளி பிடிக்கும்) தாய்ப்பால் கொடுப்பதால்.கொழிக்கறி குழம்பு,கோழி சூப் சாப்பிடுங்கள்.....சின்னக்குழந்தை ஆகையால் விக்ஸ் கூட வேண்டாம்.....
மேலும் தெரிந்தால் வந்து சொல்கிறேன்........
தலைப்பை மாற்றுங்கள் தோழிகள் வந்து பதில் கொடுப்பார்கள்.....

கர்புரவல்லி இலை 10 எடுது வதக்கி பிழிஞி சாரு கொடுஙக .தே.என்னை + கர்பூரம் பெச்ட் ட்ரெஅட்மென்ட்

mahes priya
கற்பூரவள்ளி மிகவும் காரத்தன்மை கொண்டது...
3மாத குழந்தைக்கு இந்த பரிட்சை வேண்டாமென நினைத்துதான் நான் அதை சொல்லவில்லை......
கற்பூரமும் காரம்தானே....இது வேண்டாம்......தாய்ப்பால் கொடுப்பதால் அவர்கள் உணவை சரிசெய்தாலே போதும்,குழந்தையின் சளி சீக்கிரம் குணமடையும்......

என் குழந்தைக்கு வெற்றிலையில் எண்ணை தடவி இலேசாக சூடு பண்ணி தலையிலும் நெஞ்சிலும் போடுவோம்.அது காய்ந்து விழும்.அதோடு எல்லா நேரமும் தேங்காய் எண்ணையை நெஞ்சில் பூசி விடுவேன்.விரைவாக சுகம் தெரியும்.மற்றது கொஞ்சம் தே.எண்ணையில் வெற்றிலை மூக்கு சிற்து,கற்பூரம்,பூடு ஒரு பல்,சாம்பிராணி,மஞ்சள்,கருஞ்சீரகம் போட்டு சூடு பண்ணி வைத்து ஒவ்வொரு முறை தலைக்கு போடும் போதும் கரண்டியில் லேச சூடு பன்ணி போடுவேன்.சளி பிடிக்காது.

"வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.
ஆனால், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார்"

- ஷிம்றி -

மேலும் சில பதிவுகள்