தால் பஞ்சாரி

தேதி: June 9, 2006

பரிமாறும் அளவு: 4 - 6

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கருப்பு உளுந்து - 1 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
லவங்கம் - 2
பட்டை - 1
சிகப்பு மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
நன்கு அரிந்த பச்சை மிளகாய் - 1டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி நன்கு அரிந்தது - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன்


 

பருப்புகளை நன்றாக அலம்பி, பின்பு களைந்து குக்கரில் மஞ்சள்பொடி, உப்பு மற்றும் 3 கப் தண்ணீர் சேர்த்து 4 - 5 விசில்கள் வரை வேக வைக்கவும்.
கடாயில் நெய் ஊற்றி காய வைக்கவும்.
பிறகு வெங்காயம், லவங்கம், பட்டை, சிகப்பு மிளகாய், சேர்த்து வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.
பிறகு இஞ்சி-பூண்டு விழுது, நன்கு அரிந்த பச்சை மிளகாய், மிளகாய் பொடி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
வேகவைத்த பருப்புகளை லேசாக மசித்து, பிறகு இந்த நெய் கலவையில் சேர்த்து 4 - 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி அரிந்த மல்லித்தழை மற்றும் இஞ்சி துண்டுகளுடன் பரிமாறவும்.


சப்பாத்தி அல்லது சாதத்துடன் சாப்பிடுவதற்கு ஏற்றது.

மேலும் சில குறிப்புகள்