கத்தரிக்காய் கிரேவி

தேதி: June 30, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (5 votes)

 

கத்தரிக்காய் - 8
தக்காளி - 2
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
இஞ்சி - 2 துண்டு
பூண்டு - 1
பச்சை மிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 15
பெரிய வெங்காயம் - 2
நிலக்கடலை - அரை கப்
எள் - கால் கப்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைக்கவும். நிலக்கடலையை வறுத்து தோலுரித்துக் கொள்ளவும். எள்ளையும் தனியாக வறுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாய் அரைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டை ஒன்றாய் அரைக்கவும். தக்காளி, சின்ன வெங்காயம் தனித்தனியாக அரைக்கவும்.
கத்தரிக்காயை நீளவாக்கில் இரண்டாக வெட்டி ஒவ்வொரு துண்டிலும் மேலிருந்து கீழாக பாதி வரை 2 முறை கீறவும் (வேகவும், மசாலா இறங்கவும் வசதியாக இருக்க). கத்தரிக்காயில் எள், நிலக்கடலை விழுது சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும்.
எண்ணெயில் தாளிக்க கொடுத்துள்ளவற்றுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதன் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள் சேர்த்து கிளறி பின்னர் சின்ன வெங்காய விழுது, தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.
கத்தரிக்காய் சேர்த்து புளி கரைசலையும் சேர்த்து மிதமான தீயிலேயே வைத்து வெந்ததும் பரிமாறலாம்.
பிரியாணிக்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் ஆமினா அஸ்ஸலாமு அழைக்கும் எள் கத்தரிக்காய் கிரேவி படத்தோடு வந்து இருக்கு ரொம்ப அருமையா இருக்கு ஆமி வாழ்த்துக்கள் நீங்க எங்க போனிங்க

ஹலோ ஆமினா அஸ்ஸலாமு அலைக்கும் ரொம்ப நாளா தேடிட்டிருந்த கத்தரிக்காய் கிரேவி குரிப்பு படத்துடன் குடுத்துருக்கீங்க ரொம்ப நன்றி

வ அலைக்கும் சலாம் வரஹ்...

மிக்க நன்றி நஸ்ரின். நான் வந்துட்டேன் இப்ப. நீங்க எங்கே போனீங்க :-))

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வ அலைக்கும் சலாம் வரஹ்...
ஹெல்லேல்லோ ராபியாம்மா ஹி...ஹி...ஹி....
மிக்க நன்றி :-))

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா