பிகடா

தேதி: June 9, 2006

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நன்கு பழுத்த வாழைப்பழ கூழ் - 2 கப்
சர்க்கரை - 2 கப்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்ளார் - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம்பழத்தின் சாறு - 1 மூடி
உலர்ந்த திராட்சை, முந்திரி துண்டுகள் - சிறியது


 

அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு உருக்கிவிட்டு, அதில் கார்ன்ஃப்ளார் போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்.
பிறகு அதில் மசித்த வாழைப்பழம், சர்க்கரை சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறவும்.
கடைசியாக இதில் எலுமிச்சைச் சாறு பிழிந்து கலவைப் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்திற்கு கிளறுங்கள்.
கலவை ரெடியானது நெய் தடவிய தட்டில் ஊற்றுங்கள்.
கலவை ஆறியதும் கிஸ்மிஸ், முந்திரி தூவி, விருப்பம்போல் துண்டு போடவும்.


மேலும் சில குறிப்புகள்