ரெக்கார்ட் வாஸ்

தேதி: July 1, 2011

4
Average: 3.9 (11 votes)

 

பழைய ரெக்கார்ட் - ஒன்று
வெற்றுப் ப்ளாஸ்டிக் போத்தல்கள் (மூடியுடன்) - 2
ஆயில் பெயிண்ட் – வெள்ளை & கருப்பு
ப்ரஷ் (no 9)
சிறிய ப்ரஷ்கள் (no 00 & no 3)
டுத்பிக்
க்ராஃப்ட் நைஃப்
ட்ரில்லிங் மெஷின் & பிட்
ரப்பர் கையுறைகள் (டிஸ்போசபிள் வேண்டாம்)
சுப்பர் க்ளூ (தேவை எனில்)
பழைய நியூஸ் பேப்பர்

 

முதலில் ஒரு போத்தலையும் அதன் மூடியையும் கழுவிக் காய வைக்கவும். மற்ற அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
சமையலறைத் தொட்டியில் கொதி நீரை நிரப்பி ரெக்கார்டை அமிழ்த்தவும். கையுறை அணிந்து கொண்டு ரெக்கார்ட் கூம்பு போல் வருமாறு சுருட்டி எடுக்கவும். கழுவி எடுத்து வைத்துள்ள போத்தல் அமைப்புக்கேற்றவாறு கூம்பு வரவேண்டும். தேவையான அமைப்புக் கிடைக்குமுன் நீர் சூடு ஆறிவிட்டால் மீண்டும் தொட்டியில் புதிதாக கொதிநீர் நிரப்பிக் கொள்ளவும். இதே நேரம் லேபிளும் நன்கு ஊறி இருக்கும். முடிந்தவரை உரித்து எடுக்கவும்.
ஈரம் நன்கு காய்ந்த பின்னால் அகலமான ப்ரஷ் கொண்டு கருப்பு பெயிண்ட் அடித்துக் காய விடவும். மேசையில் நியூஸ்பேப்பர் விரித்து வைத்து வேலை செய்யவும். முதலில் ரெக்கார்ட் உட்பக்கம் பெயிண்ட் செய்யவும். அது காய்ந்த பின்பு வெளிப்பக்கம் பெயிண்ட் செய்யவும். (இரண்டாவது போத்தலில் நீர் நிரப்பி மூடிக் கொண்டு அதன் மேல் ரெக்கார்ட்டைக் கவிழ்த்துக் கொண்டால் கை படாமல் பெயிண்ட் செய்து உலரவிடலாம். வெற்றுப் போத்தலானால் பாரம் தாங்காமல் சரிந்து விடும்.) ப்ரஷ்ஷை மேலிருந்து கீழாக ஒரே நேர்கோட்டில் இழுக்கவும். தேவைக்கேற்ப 2 அல்லது மூன்று கோர்ட்டிங் கொடுக்கவும். ஒவ்வொரு கோர்ட்டிங் நடுவிலும் நன்கு காய விட வேண்டும்.
கருப்பு பெயிண்ட் உலர்ந்ததும் ரெக்கார்டின் வளைவுகள் இணையும் பகுதியில் வெள்ளை நிறத்தில் 3ம் நம்பர் ப்ரஷ் கொண்டு பூக்களும் 00 ப்ரஷ் கொண்டு சிறிய இலைகளும் பெயிண்ட் செய்து கொள்ளவும். இடைவெளிகளில் டுத்பிக்கினால் சிறிய புள்ளிகள் இட்டு நிரப்பி விடவும்.
மற்றொரு பக்கத்திலும் இந்த டிசைனை வரைந்துக் கொள்ளவும்.
பெயிண்ட் காய்ந்த பின்பு ஆணியில் கொழுவுவதற்கு ஏற்றவாறு ரெக்கார்ட்டில் துளை ஒன்று போட்டுக் கொள்ளவும்.
கழுவிக் காய வைத்து இருக்கும் போத்தலை, அதன் கழுத்தோடு வெட்டி எடுக்கவும். இது வாஸின் வெளியே தெரியாமல் இருப்பது போல் உயரம் இருக்க வேண்டும். (மூடி இறுக்கமாக இல்லாவிடில் உள்பக்கம் சுப்பர் க்ளூ தடவி இறுக்கமாக மூடிக் காயவிட்டால் நீர் கசியாமல் இருக்கும்.)
இதனை ரெக்கார்டின் உள்ளே வைத்து பூக்கள் சொருகி அழகாக சுவரில் மாட்டி வைக்கலாம்.
பூக்களை அடுக்கிய பின்பே வாஸில் நீர் விடவும். அழகான ரெக்கார்ட் வாஸ் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

கலக்கல்.... எப்படிங்க இப்படிலாம் சுடு நீரில் போட்டு ரிஸ்க் எடுத்து பண்றீங்க??? நானா இருந்தா பயப்பிடுவேன் ;(

வாஸை விட அதில் வரைந்து இருக்கும் பூ என்னை ரொம்ப கவர்ந்தது... அத்தனை அழகு. சூப்பர் இமா. நல்ல க்ரியேட்டிவிட்டி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடேகப்பா ரொம்ப ரிஸ்க் எடுத்து பண்ணுனா மாதிரி இருக்கு, பாக்கவே வித்தியாசமா அழகா இருக்கு. ரொம்ப பிரமாதமா யோசுச்சு இருக்கீங்க. :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரொம்ப அழகா இருக்கு, தேவை இல்லை என்று என்னோட பழைய ரிக்கார்ட் தட்டுகளை உடைத்து போட்டுவிட்டேன். அதில் இப்படியெல்லாம் செய்யலாம் என்று இப்பொழுதுதானே தெரிகிறது.

அன்புடன்
THAVAM

சூப்பர்! கண்டிப்பா என்னால இப்படி யோசிக்கக் கூட முடியாது..... நீங்க மேல வச்சிருக்குர ஃப்ளவ்வர விட நீங்களா வரைந்தது ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள்......

ரொம்ப அழகா இருக்கு இமா !!!!

ரொம்ப அழகா இருக்குங்க இமா...வாழ்த்துக்கள்....

அன்பு இமா,

அசத்தலாக இருக்கு. பிரமாதமான கற்பனைத் திறன். ரொம்ப சிரமம் எடுத்து, பொறுமையாக செய்திருக்கீங்க. சொல்லிக் கொடுத்திருப்பதும், பொறுமையாக, ஒவ்வொரு ஸ்டெப்பிலும், விளக்கியிருப்பதும் மிகவும் அருமை.

வாழ்த்துக்களும், நன்றியும்

அன்புடன்

சீதாலஷ்மி

இமா மேடம்,

எப்படி இப்படியெல்லாம் உங்களுக்கு ஐடியா கிடைக்குது?

வாழ்த்துக்கள்!!!

என்றும் அன்புடன்,
கவிதா

இமா உண்மையிலேயே மிகவும் அழகாக இருக்குதுப்பா பழைய ரெக்கார்ட்ன்னா என்ன

பழைய ரெக்கார்ட் இல்லை.எக்ஸ்ரே பிலிமில் முயன்று பார்க்கிறேன். வாஸ் நன்றாக உள்ளது.வெண்ணீரில் போடாமல் பிலிமில் முயற்சி செய்து சொல்கிறேன்.

radharani

முதலில் குறிப்பை வெளியிட்ட அட்மின் & டீமுக்கு என் நன்றி.

கருத்து சொல்லிப் போன வனி, சுகந்தி, தவமணி, சங்கீதா, ஏஞ்சலின், சுமதி, கவிதா, சீதாலக்ஷ்மி, பஸாரியா, ராதாராணி அனைவருக்கும் நன்றிகள்.

பஸாரியா - //பழைய ரெக்கார்ட்ன்னா// காசட், CD வர முன்னால இருந்த க்ராமபோன் தட்டு. இப்போதும் பாவனைல இருக்கு. ஆனால் முன்பு போல அதிகம் இல்லை.

ராதாராணி, //எக்ஸ்ரே பிலிம்// கழுவி எடுத்து சுருட்டி ஸ்டேப்பிள் பண்ணிட்டு பெய்ன்ட் பண்ணினா அழகா வரும். பாரத்துக்கு வாஸ் அமைப்பு ஒழுங்கா இருக்குமா என்று தெரியல. செய்து பார்த்துட்டு எப்படி வந்தது என்று சொல்லுங்க.

‍- இமா க்றிஸ்

இமாம்மா ரொம்ப அழகு, என்னே உங்கள் கற்பனை திறன் எப்படி தான் இப்படிலாம் யோசிக்கறீங்களோ. நேர்த்தியா அழகான வடிவமாய், அதில் வரைந்திருக்கும் பூக்கள் அப்படியே பூத்தது போலவே இருக்குமா.

இமாம்மா ரெக்கார்ட் வாஸ் செம ஐடியா சூப்பரா இருக்கு. வீணாகற சிடி, ரெக்கார்ட் பார்த்துட்டு என்ன க்ராஃப்ட் பண்ணலாமுனு யோசிச்சுட்டு இருக்கீங்களா. அடுத்து என்ன க்ராஃப்ட் செஞ்சு அசத்த போறீங்க தெரியல. வரைந்த பூக்கள் டிசைனும் அருமை. வாழ்த்துக்கள்.

சிடி, ரெக்கார்ட் எல்லாத்தையும் இப்படி செய்துட்டு என்னோட வாய்ப்பாட்டு மட்டும் கேட்குறதுன்னு முடிவெடுத்திருக்கீங்க. மிக்க மகிழ்ச்சி. பாட்டுக்கு பரிசில் பொருளாக இந்த சிடி வேஸ், சிடி தோடு ஸ்டாண்ட்(தோடுகளோடு), ரெக்கார்டு வேஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிறேன்.

நன்றி.

இப்படியெல்லாம் கூட செய்ய முடியுமான்னு வியப்பா இருக்கு இமா!ரொம்ப அழகான வாஸ்!இதில் ஆர்டிஃபிசியல் பூக்கள் கொண்டு அலங்கரிக்கலாம் அல்லவா?அப்படி செய்வதானால் உள்ளே வைக்க வேண்டிய பாட்டில் தேவைபடாதல்லவா?!ஏதோ என் மூளைக்கு தோன்றின ஒரு சின்ன யோசனையை சொன்னேன்,தப்பா எடுத்துக்காதீங்க!உங்க கற்பனைக்கு ஒரு சல்யூட்!!!

Eat healthy

ரொம்ப நல்ல இருக்கு .. எனக்கு இந்த வாஸ் ரொம்ப பிடிச்சு இருக்கு .....

இமா அக்கா ... நீங்க திருகோணமலை யா ? நானும் தான் ... நான் இப்ப துபாய் ல இருக்கன் .... ரொம்ப சந்தோசம் என் ஊர் ஆள இங்க கண்டு பிடிச்சதில ..........எப்பிடி இருக்கிறீங்க ? உங்க ஆக்கம் எல்லாம் சூப்பர் ......

நன்றி வினோஜா & தேன் ;))))

யாழினி & நிஸ்ரினா, ஸ்கூல்ல இரண்டு வருடங்கள் முன்பு 'Blacked Eyed Pee Wee' தொடர்பாக ஒரு வாசிப்புப் பாடம் வந்தது. (பசங்க மார்பிள் விளையாடுவாங்க இல்ல, முன்னால நியூசிலாந்துல ரெக்கார்ட்டை நெருப்பில் காட்டி உருக்கி ஸ்பெஷல் மார்பிள் செய்வாங்களாம்.) அந்தப் பாடம் தான் எனக்கு ரெக்காட் கைவினையில் ஈடுபாட்டை ஏற்படுத்தியது. 'சல்வேஷன் ஆமி ஆப் ஷாப்ல' ரெக்கார்ட்ஸ் கிடைச்சுது.

பிறகு இங்கே சீதாம்மா ஒரு கமண்ட்ல நினைவு படுத்தி ரெக்கார்ட் ஓரம் வளைக்க புதுசா ஐடியாவும் கொடுத்து இருந்தாங்க. (தாங்ஸ் சீதாலக்ஷ்மி.) திரும்ப ஆரம்பிச்சாச்சு. ;)

வீட்டில் ஒரு கேக் ட்ரே இருந்தது. எங்க அப்பா பண்ணி வச்சு இருந்தாங்க. இப்படி வாஸ் கூட எங்கோ பார்த்த நினைவு. ஒரு ஆசையில் நானும் ட்ரை பண்ணேன். பெய்ன்ட் டிசைன்... என் கைக்கு வந்ததைப் போட்டு இருக்கிறேன். உள்ளே போத்தலும் என் யோசனைதான். //இதில் ஆர்டிஃபிசியல் பூக்கள் கொண்டு அலங்கரிக்கலாம் அல்லவா?அப்படி செய்வதானால் உள்ளே வைக்க வேண்டிய பாட்டில் தேவைபடாதல்லவா?// ஆமாம், நிச்சயமாக. வீட்டில் இருந்த செயற்கைப் பூக்கள் இந்த வாசுக்கு உயரம் பொருத்தமாக இருக்கவில்லை. அறுசுவை முகப்பில் வரும் படம் அழகாக இருக்க வேணாமா? செடியில ரோஜா இருந்துது. செட் பண்ணியாச்சு. ;) ஆனால் அவை வாடியதன் பின்னால் செயற்கை மலர்கள் தான் இருக்கின்றன இங்கும். //தப்பா எடுத்துக்காதீங்க!// க்ர்ர் ;))) கமண்ட் சொல்றதுக்குத் தானே இந்த த்ரெட் இருக்கு. இப்படி ஒவ்வொருத்தர் கொடுக்கிற கமண்ட்டுலயே புதுசா ஐடியா புடிச்சுரலாம். தாராளமா சொல்லுங்க. ;)

ஜனனி.. _()_ நல்வரவு. ;) என் சக ஆசிரியை ஒருவரது மகள் பெயரும் ஜனனி... ஜனனி சிவ - - - ன். ;) நீங்கள் அவராக இருக்குமோ என்று தோன்றுகிறது. பெற்றோர் ஆசிரியர்கள். ஆம் / இல்லை மட்டும் சொல்லுங்க. டீடெய்ல் எல்லாம் இங்க சொல்ல வேணாம். ;) நானே விசாரிக்கிறேன். ஊரில் என் பெயர் இமா இல்லை. ;)
~~~~~~~~~~~~~
பி.கு
ஜனனி... அறிமுகம் இழையில் கண்டுகொண்டேன் உங்களை. ;)))

‍- இமா க்றிஸ்

இமா, அட்மின் க்விஸ்1 ஒன்றோடு நின்றுட்டதால இப்டிலாம் அவரைக் குத்தக் கூடாது.

இதுல வேற ஆமாம் இல்லைன்னு மட்டும்தான் சொல்லணும்னு கண்டிஷன் வேற...

மனசு சும்மா இருக்காம கணக்குப் போடத்தான் பார்க்கிறது. ஜனனி சிவனேசன், சிவனாதன்...இப்படியாக..எப்படியும் எனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றபோதும்....

சால்வேஷன் ஆமிக்கு கிளம்ப வேண்டியதுதான்.

நான் இமா இல்லை...நான் மகான் அல்ல...மாதிரி சூப்பர் டைட்டில்.

பி.கு.:
அட்மின் இமாக்காகவாவது ஸ்மைலிஸ் சேர்த்துடுங்க.

எப்படி இப்படி எல்லாம் யோசிச்சு
மிக பொறுமையுடன்
செய்தமைக்கு அழகான பூச்செண்டு பார்சல்
உங்க பொறுமை கொஞ்சம்
அனுப்பி வைக்கவும்...
அழகாய் இருக்கிறது படங்களும் விளக்கமும்

"smile is the way to solve problem..Silent is the Way to Avoid all the Problems"

என்ன இமா உங்களாள் தான் இப்படியெல்லாம் யோசித்து பக்குவமா அடுத்தவங்களுக்கு சந்தேகம் எழாதபடி ஸ்டெப் பை ஸ்டெப்போட கலக்கிட்டிங்க. ப்ளாஸ் பாயிண்ட் காசே குறைந்த செலவில் அசத்தலான ப்ளாவர் வேஸ்.
ஹோம் மேக்கர் ப்ரோக்க்ராமில் நிங்க கலந்துட்டிங்கனா உங்களுக்கு தான் முதல் பரிசு. விஜய் டிவியில் ஹோம் மேக்கர் நிகழ்ச்சி பார்த்தேன். இப்ப இருக்கா தெரியல்லை. ட்ரை பன்னுங்க இமா. யூ ஆர் 8.
அருசுவை அட்மினுக்கும் நன்றி இது போல் நல்ல க்ராப்ட்ஸை எங்களுக்கு இதன் வழி கற்றுக்க ஒரு வாய்ப்பை குடுத்திருக்கிங்க, குடுத்தேட்டே இருங்க.

நன்றி.

இமா மேடம் ......மன்னிக்கவும் .. நீங்கதான்னு தெரியாம அக்கா னு வேற கூப்பிடிடன் ..... நான் அதே ஜனனி தான் ... நீங்க சும்மா கலக்கிறீங்க அறுசுவையில ..நீங்க மட்டுமில்ல அங்கிள் உங்க அம்மா எல்லாரும்தான் .. தொடர்ந்து எழுதுங்க .........அதே நேரம் என்றும் 16 ஆ எப்படி இருக்கிறது எண்டும் சொல்லுங்க .....u look so young.....:))))))))

எல்லா பெயரும் சொன்னிங்க.....ஆனா ஜனனி சிவமைந்தன் எண்டு மட்டும் சொல்லேலையே .....:((((((((((((( நான் ஜனனி ...உங்க அறிமுகம் கிடைச்சதில ரொம்ப சந்தோசம் ........:)))))))))

Take care..

ரொம்பவே அழகாயிருக்கு, கலக்கிட்டீங்க. சிரமம் பார்க்காமல் சுலபமா செய்து இருக்கீங்க, வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

ENAKKU CHICKEN KEBAB SEIVADHU EPPADI NU MAIL PANNUNGA PLS

kv.murugann@gmail.com

vadivel murugan
hosur

please send the chicken kabab procedure to my mail id: kv.murugann@gmail.com

மாமீஈஈஈஈஈஈ.....அழகா பார்க்கவே ரம்மியமா இருக்கு. எவ்வளவு பொருமையா செஞ்சிருக்கீங்கன்னு புரியுது . சூப்பர் :-)

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

ஹா! இத்தனை பேர் கருத்துச் சொல்லி இருக்கிறீர்களா? எப்படிக் கவனிக்காமல் விட்டேன்!!

தேன்... ஜனனியைக் கண்டு பிடிச்சிட்டீங்கள் போல. ;) பாராட்டுக்கு நன்றி.

இங்கு வந்து... பார்த்து... கருத்துச் சொன்னது சந்தோஷம். மிக்க நன்றி சிவா. ;)

விஜி, அட! நம்பவே முடியவில்லையே. ;) எப்போவாவதுதான் உங்களை இந்தப் பக்கம் காணக் கிடைக்கிறது. கருத்துச் சொன்னது சந்தோஷம். மிக்க நன்றி. ;)))

ஹாய் ஜனனி... இது எப்ப போட்ட பதிவு?? ;) அங்கிள்ட்டயும் அம்மாட்டயும் மறக்காமல் சொல்றன். மிக்க நன்றி.

பாராட்டுக்கு மிக்க நன்றி பவி. ரெக்கார்ட் கிடைச்சா செய்து பார்ப்பீங்க இல்லையா? ;)

மிக்க நன்றி ஜெய்லானி. ;)

‍- இமா க்றிஸ்