ரெம்பியக் (இந்தோனேசியா)

தேதி: June 9, 2006

பரிமாறும் அளவு: 4 - 6

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 கப்
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
அரிசி மாவு - 1 கப்
கார்ன்ஃப்ளார் - 1
தனியா-ஜீரா பொடி, மிளகாய் பொடி - தலா ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப


 

வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக உடைக்கவும்.
வெங்காயம், பூண்டை மிகச் சிறிய துண்டுகளாக வெட்டவும்.
வெங்காயம், பூண்டு, அரிசி மாவு, கார்ன்ஃப்ளார், வேர்க்கடலை மற்ற பொடிகள் அனைத்தும் சேர்த்து தேவையான வெந்நீர் விட்டு கட்டி தட்டாமல், இட்லிமாவு பதத்திற்குக் கரைக்கவும்.
கொதிக்கும் எண்ணெயில் இந்த கலவையை ஒரு தேக்கரண்டி அளவிற்கு விட்டுப் பொரித்து எடுக்கவும். இதைச் சூடாக, எதாவது ஒரு சாஸுடன் சேர்த்துப் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்