பிரெஞ்சு வெங்காய சூப்

தேதி: June 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெங்காயம் பெரியது - 4
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
க்ரீம் - 50 கிராம்
கார்ன்ஃப்ளார் - 1/2 டேபிள்ஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்


 

வெங்காயத்தை சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெயை விட்டு, உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிறு தீயில் நிறம் மாறாதவாறு நன்கு வதக்கவும்.
இத்துடன் 4 கப் தண்ணீர் விட்டு வெயிட் போட்டு 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
பின்னர் கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீரில் பேஸ்ட் போல் கரைத்து குக்கரில் ஊற்றி மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பிறகு தேவையான உப்பு, மிளகுத்தூள், க்ரீம் சேர்த்து டோஸ்ட் செய்யப்பட்ட ப்ரெட் துண்டுகளோடு பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்