தேதி: July 4, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோதுமை மாவு - இரண்டு கப்
காய்ச்சிய பால் பால் - இரண்டு கப்
சீனி - தேவைக்கு ஏற்ப
தண்ணீர் - ஒரு கப்
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய் - மூன்று
கோதுமை மாவை தண்ணீரில் நன்றாக கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும்,அதனுடன் உப்பு , காய்ச்சிய பாலை சேர்க்கவும்.
கஞ்சியை அடுப்பில் வைத்து சிம்மில் காய்ச்சவும் ஏலக்காய்யை பொடி செய்து சர்க்கரையும் பாதி வெந்த பிறக்கு சேர்த்து நன்றாக கிளறவும்.
கோதுமை மாவு வெந்து கஞ்சி வாசம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி மிதமான சூட்டில் குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
சூடான சுவையான கோதுமை கஞ்சி ரெடி.
கஞ்சி தண்ணியாக வேண்டும் என்றால் இன்னும் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக்கலாம்
Comments
very easy to cook thanks
very easy to cook thanks
தேவி
ஹாய் தேவி தாங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
குமாரி,
குமாரி,
கோதுமை கஞ்சி என் குழந்தைக்கு செய்தேன்.உங்க குறிப்புக்கு நன்றி.ரவை கஞ்சி குறிப்பு தெரிந்தால் கொடுங்க.
அன்பு
ஹாய் அன்பு குழந்தைக்கு பிடித்ததா? செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததற்கு நன்றி.
ரவா கஞ்சியும் இதே முறைப்படி செய்ங்க பா நல்லா வரும்.
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪