உருளை-பரங்கிக்காய் கறி

தேதி: June 9, 2006

பரிமாறும் அளவு: 6-8

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பரங்கிக்காய் - 1/2 கிலோ
உருளை - 1/2 கிலோ
பிரிஞ்சி இலை - 2
பட்டை - 1
லவங்கம் - 2
ஏலக்காய் - 2
கலோஞ்சி - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
தனியா-ஜீரா பௌடர் - 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 1
மாங்காய் பொடி - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு


 

நெய் காயவைத்து அதில் பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய், கலோஞ்சி, கடுகு, வெந்தயம், சேர்த்து அது வெடிக்கும் வரை காத்திருக்கவும்.
வெடித்தவுடன் தயிர், பெருங்காயம், மிளகாய் பொடி, தனியா-ஜீரா பொடி, மஞ்சள் பொடி சேர்த்து 2 - 3 நிமிடம் வதக்கவும்.
தக்காளி சேர்த்து மீண்டும் வதக்கவும்.
பிறகு, உருளை, பரங்கிக்காயுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து 10 - 12 நிமிடம் வரை கொதிக்கவிடவும்.
கடைசியில் மாங்காய் பொடி, உப்பு , சர்க்கரை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சப்பாத்தி அல்லது உளுத்தம் பருப்பு பூரியுடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்