முட்டை ஓடு பெயிண்டிங் - 1

தேதி: July 5, 2011

4
Average: 3.9 (9 votes)

 

முட்டைகள்
அக்ரிலிக் பெயிண்ட்ஸ்
ஸ்டோன்ஸ் மற்றும் மணிகள்
ப்ரஷ்
க்ளூ
ஊசி
வார்னிஷ்
மெழுகு அல்லது கெமிக்கல் க்ளே
ஏதேனும் மூடி (ஸ்டாண்ட் போல் பயன்படுத்த)

 

முட்டையை மேலே நன்றாக கழுவி துடைத்துவிட்டு ஊசி கொண்டு ஒரு ஓட்டை இடவும்.
இப்போது ஊசியை மெதுவாக உள்ளே இறக்கி கீழ் பக்கமாகவும் ஒரு ஓட்டையை இடவும். மேல் பக்க ஓட்டை வழியாக ஊதி கீழ் பக்க ஓட்டை வழியாக முட்டை உள்ளே இருக்கும் அனைத்தையும் சுத்தம் செய்யவும்.
முட்டை முழுவதும் வெளியே வந்ததும் இதே போல் உள்ளே சோப்பு நீர் விட்டு நன்றாக கழுவி, பின் நல்ல தண்ணீர் கொண்டு நன்றாக கழுவி, நீர் இல்லாமல் ஊதி வெளியே எடுக்கவும். இதை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் முழுக்க நன்றாக காய விடவும். காய்ந்ததும் மெழுகு அல்லது கெமிக்கல் க்ளே கொண்டு அந்த ஓட்டைகளை மூடிவிடவும்.
இவை நன்றாக காய்ந்த பின் முட்டையை மூடி மேல் வைத்து கொண்டு விரும்பிய டார்க் நிறத்தை தீட்டவும்.
இது ஒரு மணி நேரத்துக்கும் மேல் காய வேண்டும். பின் கோல்ட் அல்லது சில்வர் கலர் கொண்டு படத்தில் உள்ளது போல் முட்டையின் நடுவே வரைந்து கொள்ளவும்.
நடுவே வரைந்த கோடுகளை சுற்றி இது போல் வளைவுகள் வரையவும்.
வளைவுகளை சுற்றி படத்தில் உள்ள டிசைனை வரையவும்.
இப்போது முட்டை முழுக்க வரைந்து முடித்து, ஒரு நாள் காயவிட்டு வார்னிஷ் தீட்டவும்.
வார்னிஷ் நன்றாக காய்ந்த பின், முட்டை மேல் விருப்பம் போல் ஸ்டோன்ஸ் மற்றும் மணி வேலை செய்யவும். வண்ணம் தீட்டிய முட்டை தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பர். பாராட்ட வார்த்தைகளே இல்லை. அவ்வளவு அழகு க்ராஃப்ட். படங்கள் எல்லாம் பிரமாதமாக வந்து இருக்கு. உங்க மெஹெந்தி போட்ட கையும் அழகு. க்ரேட். ;)

‍- இமா க்றிஸ்

பாத்த உடனே நினைச்சேன், இந்த அம்முனி வேலையா தான் இருக்கும்ன்னு.
அட போங்க, என்னத்தன்னு சொல்றது. எப்பவும் போல பிரமாதம், சூப்பர்,
பொறாமையா இருக்கு வனி, கலக்கு கலக்குன்னு கலக்கறீங்க....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வனி எக் பெயிண்டிங் அழகாக இருக்கு. கடைசில ஸ்டோன் எல்லாம் ஒட்டி பெயிண்டிங்க் இன்னும் அழகு சேர்த்திருக்கீங்க. கிறிஸ்மஸ் ட்ரீல தொங்கவிடுவதற்கு ஏற்ற க்ராஃப்ட். வாழ்த்துக்கள்.

வனிதா அசத்திட்டிங்கப்பா பைன்ட்டிங்கும் நல்லா இருக்கு கையில் மருதானியும் நல்லா இருக்கு. நா உங்க எல்லோருக்கும் நன்றி சொல்லவே வந்தேன் எங்கப்பா ரேனு அவங்களுக்கு நா தனியா நன்றி சொல்லனும் அன்று இடுப்பு வலியால் கஷ்டப்பட்டப்போ ரொம்ப ஆருதலா பேசினாங்க ஆனா இன்னும் குழந்தை பிறக்கலப்பா 2 நாள் hospitalil இருந்தேன் பனிக்குட நீர் குரைவாக வெளியாகியது சிலருக்கு அப்படி இருக்குமாம் bed rest எடுக்க சொன்னாங்க இன்று தான் ஓரளவு உட்கார முடியுது பா இன்னும் 13 நாள் இருக்கு எனக்காக pray பன்னிக்கங்கப்பா please

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி. :)

கூடவே இந்த குறிப்பை செய்ய காரணமா இருந்த என் தோழி ரம்யா கார்த்திக்’கு ஸ்பெஷல் நன்றிகள்.... அவங்க தான் செய்ய சொன்னாங்க, ஐடியாஸ் கொடுத்தாங்க... அதுக்காக ரொம்ப ரொம்ப ரொம்ப தேன்க்ஸ் ரம்யா. நீங்க சொன்ன அளவுக்கு என்னால் செய்ய முடியாம போச்சு, அதுக்காக ரொம்ப சாரிங்க... இருந்த நேரத்தில் எவ்வளவு செய்ய முடிந்ததோ செய்ய முயற்சி செய்தேன். கோவிச்சுக்காதீங்க ரம்யா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப நன்றி இமா... உங்க அளவுக்குலாம் நம்மால் முடியாது... இருந்தாலும் ரம்யா செய்ய சொன்னாங்க, செய்ய முயற்சி செய்தேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதே அம்முனி தான்... இது தான் ரம்யா கொடுத்த வேலைன்னு சொன்னேன்... இப்போ புரிஞ்சுதா?? :) மிக்க நன்றி சுகி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி வினோ... உங்களை போல் தோழிகள் செய்ய சொல்லியே நிறைய குறிப்பை செய்து அனுப்பறேன்... உங்களுக்குலாம் தான் நன்றி சொல்லனும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடா... இன்னும் குழந்தை பிறக்கலயா??? கவலைபடாதீங்க நல்லபடியாக பிள்லை பெற்றெடுப்பீங்க... அடுத்த நாள் ஜெய், ரேணு சொல்லி தான் தெரியும், முதல் நாள் வலி இருந்தது உங்களுக்குன்னு. எல்லாம் சரியா நடக்கும்... எங்க பிராத்தனைகள் எப்பவும் உண்டு. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி உங்களுக்காக வெயிட் பன்னிகிட்டு இருந்தேன் பா எங்கப்பா ரேனு இன்று வருவாங்களா? முதல் 2 குழந்தைக்கு இப்படி நா கஷ்டபடலப்பா நடக்க ரொம்ப கஷ்டமா இருக்கு உட்காரவும் முடியல ரேனுவருவதற்குள் நா போயிட்டா என் நன்றியையும் குழந்தை பிறக்காத விஷயத்தையும் சொல்லிடுங்க ப்ளீஸ்

வனி வழக்கம்போல கலக்கீட்டிங்க சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்

கைய்யில் ஏகப்பட்ட வித்தைகள் வச்சிருக்கீங்க போலிருக்கே!முட்டையின் கலர் ரொம்ப சூப்பர் & டிசைனும் நல்லா இருக்கு,நீங்க முட்டையின் ஒரு பக்கம் மட்டும் தானே டிசைன் செஞ்சிருக்கீங்க,பின் புறம் செய்யலையே! பெண்வாத்து (வனிதா) இட்ட இந்த பொன்முட்டையை பத்திரமாக பாதுகாக்கனும்,குழந்தைகள் கைய்யில் கொடுத்தால்..............அவ்வளவுதான்!!!

Eat healthy

வனி.. சூப்பரோ சூப்பர்...அழகான கிரீன் கலர்ல ட்ரடிசனல் டிசைன்..ஸ்டோன்ஸ் வச்சு இன்னும் கிராண்டா ... ஆஹா சூப்பர் வனி;)

இப்போதைக்கு கையிருப்பு வாட்டர் கலர்தான்... சும்மா ட்ரை பண்ணிப்பாக்கறேன்;)

அழகான கிராப்ட் செஞ்சு காட்டியதற்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்;-)

Don't Worry Be Happy.

அன்பு வனிதா,

என்னவென்று சொல்ல!! எப்படி பாராட்ட!!:) முட்டை ஓடு எவ்வளவு மெலிசானது, அதுல இப்படி நுணுக்கமான கிராஃப்ட் வொர்க் செய்யணும்னா, எவ்வளவு பொறுமையாக, நிதானமாக, ஜாக்கிரதையாக செய்திருப்பீங்க! சிம்ப்ளி கிரேட்! அற்புதம், அபாரம்!! பிரமாதம்!!!

அன்புடன்

சீதாலஷ்மி

ஆஹா..அழகான முட்டை..அந்த ஓடுக்கு வந்த வாழ்வு.
கலர் காம்பினேஷன் அருமையா இருக்கு வனி..
அதனுடன் மெஹந்தி போட்ட கையும், நெயில் பாளிஷ் அடிச்ச நகமும் அழகு தான் :)

கோல்ட் பெயிண்ட் கூட ஸ்டோன் வொர்க் ரொம்ப சூப்பரா இருக்கு ;)
நான் சும்மா ஏதோ வாயில் வந்ததை தான் சொன்னேன்..ஆனால் அதை இத்தனை தூரம் எடுத்து வந்து அழகுபடுத்தியது நீங்க தான்.. எல்லாரும் சொல்லலாம்.. ஆனால் வனி தானே செய்ய முடியும்.. ;)

வாழ்த்துக்கள் வனி.. அத்தனை அழகு

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஒரு முட்டை

பட்டு சேலை

கட்டியிருக்கு!

அடடடே!

சூப்பர் வனிதா.ரொம்ப அசத்தலா இருக்கு.
பாராட்டுக்கள்.

ஐடியா கொடுத்த ரம்யாவுக்கும் வாழ்த்துக்கள்.

அவசியம் சொல்றேன்... அவங்களும் இப்ப கன்ஸீவ் ஆயிருக்குறதால் ஓய்வில் இருக்காங்களோ என்னவோ... பேசும் போது அவசியம் சொல்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றிங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமாம் ஒரே பக்கம் தான் பன்னேன்... இதை நான் ஸ்டாண்டு போல் செய்து வைத்திருப்பதால் ஒரே பக்கம் போதுமென விட்டிருக்கேன். நீங்க இரண்டு பக்கமும் பண்ணுங்க... பாதுகாப்பா தான் வைக்கனும்... இல்லன்னா என்னுடைய பல நாள் வேலை சில நொடியில் காணாம போயிடும் ;) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) வாட்டர் கலரிலும் நல்லாவே வரும்... நான் பல விதம் ட்ரை பண்ணேன்... கறுப்பு ஹென்னா கூட போட்டு விட்டேன் ஒரு முட்டைக்கு... அனுப்பறேன் அப்பறமா... பாருங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கைய கொடுங்க... கீழ இறங்க தான்... அப்படியே உங்க பதிவை படிச்சு நான் பறக்குறேன்... ;) எல்லா புகழும் நம்ம ரம்யாக்கு தான்!!! ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சீதாலஷ்மி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//நான் சும்மா ஏதோ வாயில் வந்ததை தான் சொன்னேன்// - இதெல்லாம் ஓவரா இல்ல??? சின்ன பிள்ளைக்கு சொல்ற மாதிரி அழகா சொன்னீங்க, நான் தான் அந்த அளவுக்கு பண்ணல... ;( நீங்க சொன்ன மாதிரி நிறைய முட்டை செய்து கட்டி தொங்க விட எனக்கு நேரம் போதல... ஐயம் வெரி சாரி ரம்யா.

இருந்தாலும் நீங்க நல்லா இருக்குன்னு சொன்னது எனக்கு சந்தோஷம்... ரொம்ப ரொம்ப நன்றி ரம்யா :) இந்த புகழ் உங்களையே சேரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்புடி இப்புடி???

//ஒரு முட்டை

பட்டு சேலை

கட்டியிருக்கு
// - கலக்குறீங்க போங்க!!! ;)

மிக்க நன்றி ஹர்ஷா... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இருந்தாலும் உங்க முட்டை கவிதை பார்த்து பாராட்டாமல் போக மனமில்லை.. :)
சூப்ப்ர் கவிதை

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அச்சச்சோ ரம்ஸ்,இதையெல்லாம் கூட பாராட்டுவீங்களா? ;-D
இருந்தாலும் உங்களுக்கு பெரிய மனசு.நன்றி... நன்றி. ;-)

லாவண்யா,
// ஒரு பணியாரம் பணியாரம் சாப்பிடுகிறதே ரேஞ்சுக்கு இருக்கு உங்க கவிதை :))) //
அதே!அதே! நன்றி.

எல்லா பாராட்டும் நடிகர் பார்த்திபனுக்கே!

ஹஹஹா... ஆமா ரம்யா படிச்சதும் எனக்கு பார்த்திபன் நியாபகம் வந்துச்சு!!! ;) கலக்குறீங்க ஹர்ஷா. டெலீட்லாம் வேணாம் ஹர்ஷா... தப்பா ஏதும் சொல்லலயே... காமெடி தானே பண்றீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முட்டை எப்போ உருண்டு செண்பக கையிலிருந்து உங்க மருதாணி இட்ட கைக்கு வந்துச்சி??

அழகா இருக்கு வனி....ரொம்ப கஷ்டம் போல தெரியுதே......எப்படிங்க உங்களுக்கு நேரம் கிடைக்குது.....முதலில் எனக்கு இந்த மாதிரி நாசூக்கா முட்டையை உடைக்க தெரியுமா என்றே தெரியலை....அப்படி நான் செய்து வைத்து அதை என் வீடு வாலுங்க கிட்டேயிருந்து இரண்டு நாள் பாதுக்காக முடியுமா.....ரொம்ப கஷ்டம்.....எப்படியாவது உடையாமல் எனக்கு பார்சல் பண்ணிடுங்க....(இது வரை சாப்பாடு தான் பார்சல் கேட்டேன் )....

ரம்மி அவங்களுக்கு மட்டும் தான் ஐடியா கொடுப்பீங்களா :(

அன்பரசி கவிதை சூப்பர்......வனி சொன்ன மாதிரி.....ஒரு பணியாரம் பணியாரம் சாப்பிடுகிறதே ரேஞ்சுக்கு இருக்கு உங்க கவிதை :)))

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வனிக்கா சூப்பரோ சூப்பர். அதுவும் அந்த கலர் காம்பினேஷனும் அந்த ஸ்டோன் வொர்க்கும். நிஜமாவே அந்த முட்டைக்கு வந்த வாழ்வுதான் இது. என்ன அழகு எத்தனை அழகு. அந்த மருதாணி போட்ட கையால முட்டைக்கு அழகா இல்ல முட்டையால மருதாணி போட்ட கைக்கு அழகானும் தெரியல ஆக மொத்தம் இரண்டுமே செம அழகு. ரம்ஸ் ஐடியா கொடுத்ததுக்கு பாராட்டுக்கள்பா. அதை ரொம்ப அழகா செய்ததுக்கு வனிக்காக்கு பாராட்டுக்கள்.

ஹாய் வனி சூப்பரா இருக்கு நல்ல கலர் தேர்ந்து எடுத்து இருக்கீங்க வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஆமா நம்ம செண்பகா தான் போனா போது ரம்யாக்காக தரேன்னு தந்துட்டாங்க ;)

நானும் முட்டையை ஊசியால் குத்தி சின்னதா ஓட்டை போட முடியுமன்னு பயந்தேன்... ஆனா ஒடைச்சிருக்கேன்ல... இது தான் நான் இது போல் உடைத்த முதல் முட்டை... அதனால் பயப்படாம ஒடைங்க.. பிள்ளைகள் கிட்டவே கலர் பண்ண கொடுங்க... அப்போ பாதுகாக்கும் வேலை நமக்கில்லை. இதை பார்சல் அனுப்பிடுறேன் உங்களுக்காக. :)

மிக்க நன்றி லாவண்யா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றிங்க.

//மருதாணி போட்ட கையால முட்டைக்கு அழகா இல்ல முட்டையால மருதாணி போட்ட கைக்கு அழகானும் தெரியல ஆக மொத்தம் இரண்டுமே செம அழகு// - வர வர எல்லாரும் ஹர்ஷா ரேஞ்சுக்கு போறீங்க... ;)

நடத்துங்க, நடத்துங்க... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி குமாரி. இருந்தாலும் கலர் அடிக்குறதுல நம்ம ரேவதி, பத்மா போல் வராது :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மேடம்,

ரொம்ப பொறுமை உங்களுக்கு!!!! ரொம்ப அழகா இருக்கு

என்றும் அன்புடன்,
கவிதா

ஒரு முட்டை..பட்டு சட்டை...

மற்ற இருவர்?(நமக்கு கணக்குப் போடறதே வேலையாப் போச்சு)

அவர்களையும் பார்க்க ஆசையா இருக்கு.

வெயிட்டுங்கு.

சரி சராசரி எவ்வளவு நேரம் ஆகும் இப்படி ஊதி எடுக்க...

தண்ணீர் உள்ளே நிரப்ப...அதுவும் சோப்பு போட்டு...

யாழினியும் குமரனும் வசுவின் குழந்தையும் தூங்கினவுடன் முட்டையும் கையுமா உட்கார்ந்துடுவீங்களோ...

அப்புறம் அரட்டையெல்லாம் எப்படி முடியும். ஓ.கே. இன்னும் நிறைய முட்டைகளுக்கு சட்டை போட்டு, மரத்தை ரெடி பண்ணுங்க...

க்றிஸ்மஸ் பரிசா எனக்கு அனுப்பிடுங்கோ.

வனி உங்களை பாராட்ட வார்த்தையே இல்லை வழக்கம் போல் சூப்பர் சூப்பர் சூப்பர் எப்படி தான் உங்களுக்கு நேரம் கிடைக்குதோ. மறந்து விட்டேன் வனி மெகந்தி கை கொள்ளை அழகு

மேடம் வேண்டாம் வேண்டாம்னு உங்க பின்னாடியே சுத்துறேன்... ;) விட மாட்டங்கறீங்களே!!!

ரொம்ப ரொம்ப நன்றி கவிதா.... பொறுமையா... உண்மை... இந்த விஷயத்தில் கொஞ்சம் அதிகமாகவே தேவைப்பட்டது ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லாரும் கையில் கவிதையோட சுத்துறீங்க... முதல்ல சேலை இப்போ சட்டை ஆயிடுச்சா... ஏதோ ஒன்னு பட்டா இருந்தா சரி.

கணக்கு போடும் வேலையில் குதிச்சிருக்கீங்க ;) சீக்கிரமே இன்னும் நிறைய முட்டைகள் வரும்... னேரம் எனக்கு சரியா சொல்ல தெஇர்யல தேன்மொழி... ஏன்னா நான் ஒரே நாளில் செய்யவில்லை... இது ஆரம்பிச்சு 1 மாதத்துக்கு மேல் இருக்கும்... நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா செய்தது. இரவில் தான் அதிக நேரம் கிடைக்கும், பிள்ளைகள் தொந்தரவும் இருக்காது... என்ன செய்ய. :)

//க்றிஸ்மஸ் பரிசா எனக்கு அனுப்பிடுங்கோ.// - அதுக்குள்ள முடிச்சு அனுப்பிடுறேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப நன்றி அனுஷா. நேரம் முன் போல் கிடைப்பதில்லை அனுஷா, அதான் குறிப்புகள் இப்போது அதிகம் அனுப்ப முடிவதில்லை. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிக்கா சூப்பர், கலக்குறீங்க போங்க....நீங்க செலக்ட் பண்ணியிருக்க கலரும் ரொம்ப சூப்பரா இருக்கு....ம்ம் கலக்குங்க...

மிக்க நன்றி சுமி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகான ஓவியம் அதும் முட்டையில் கொள்ளை அழகு உங்கள் கை வண்ணம்..

இப்போது தான் முதன் முறை பேசுகிறோம் என நினைக்கிறேன். உங்களிடம் பேசுவதில் மிக்க மகிழ்ச்சி. ரொம்ப நன்றி தோழி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi madam, உங்க படைப்புகள் எல்லாமே ரொம்ப super.........

புதிதாக இணைந்தவரா? வருக வருக. உங்க பதிவை படிச்சு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்படி இருக்கிங்க. நீண்ட நாட்களாக வர இயலவில்லை. முடிந்தவரைக்கும் வருவேன். குழந்தைகள் நலமா? சூப்பர வனி. இங்கு கிறிஸ்மஸுக்கு ஒர்னாம்ண்ட்ஸ் எல்லாம் இதில் செய்து அலங்கரிப்பார்கள், மிக அழகா இருக்கு.

வெகு நாட்களுக்கு பின் நீங்க இங்க வர காரணமா இருந்த ரம்யாக்கு தான் நன்றி சொல்லனும்... அவங்க சொன்ன பெயிண்டிங் தான் இது ;)

நலமாக இருக்கீங்களா? நாங்க நலம். நேரம் கிடைக்கும்போது வாங்க. அவசியம் செய்து பாருங்க. :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

vani akka unga crafts ellamae supera iruku.enakum indha madhiri kathu kudunga. enakum crafts & paintingsla interest adhigam. partha udanae kathukuva bt epadi kathukanumnu therila.

with regards
swe

மிக்க நன்றி. எப்படி கத்துக்குறதுன்னா??? புரியல எனக்கு... :( ஆனா சுலபமா கத்துக்க ஒரு வழி சொல்றேன்... இது சரிய வருமா வராதான்னுலாம் யோசிக்காம உடனடியா தேவையான பொருட்களை வாங்கி ட்ரை பண்ணிடுங்க. ;) இது தான் நான் செய்யும் ஒரே விஷயம். ட்ரை பண்ணி பாருங்க... சீக்கிரமே உங்க கைவினை குறிப்புகளை எங்களூக்கு அனுப்புங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா