மாசிக் கருவாட்டு சம்பால்

தேதி: June 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

மாசிக் கருவாடு (இடித்து, பொடி பண்ணியது) - 2 கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - 5 அல்லது 6
முழு மிளகு - ஒரு ஸ்பூன்
நாட்டு வெங்காயம் - 6 அல்லது 7
உப்பு - தேவையான அளவு


 

காய்ந்த மிளகாயை நெருப்பில் சுட்டு எடுத்துக் கொண்டு, அத்துடன் இடித்து பொடியாக்கிய மாசி கருவாட்டை வைத்து (மிளகாய் பொடியாகும்வரை) மிக்ஸியில் அரைக்கவும்.
பிறகு முழு மிளகை சேர்த்து ஒன்றிரண்டாக பொடியாக்கி, தேங்காய் துருவலை சேர்த்து லேசாக ஒரு சுற்று விட்டு, கடைசியாக நாட்டு வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து (வெங்காயம் முழுமையாக அரைந்துவிடாமல்) எடுத்துவிடவேண்டும்.
காரம் அதிகம் தேவைப்பட்டால், மிளகாயை அதிகமாக்கிக் கொள்ளலாம்.


மாசிக் கருவாடு பார்ப்பதற்கு மரக்கட்டை போல் இருந்தாலும், அதை உடைத்து பொடி செய்து, செய்யக்கூடிய முறைப்படி செய்தால், அதுவும் ரசம் வைத்து சாப்பிடும்போது இதை கறியாக சேர்த்துக் கொண்டால் மிகவும் அருமையாக இருக்கும். இது தஞ்சை, நாகை வட்டார இஸ்லாமியர்கள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு கறி வகை. பச்சை மிளகாய் விரும்புபவர்கள் காய்ந்த மிளகாய்க்கு பதிலாக அதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதை கடைசியாக வெங்காயத்தோடு சேர்த்துதான் வைக்க வேண்டும். பொடி பண்ணி ரெடிமேடாக இருப்பதைவிட, வெயிட்டாக இருக்கக்கூடிய மாசிக்கருவாடாக பார்த்து வாங்கி, இடித்து, தூள் பண்ணி செய்வதுதான் ருசி கூடுதலாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நன்றி அஸ்மா!
செய்து பார்க்கிறேன்.

Vazhga Tamil!!!

dear asma
மாசிக்கருவாடு_ஆங்கிலத்தில் என்ன பெயர்

sajuna