பெப்பர் சிக்கன் சமையல் குறிப்பு - படங்களுடன் - 19495 | அறுசுவை


பெப்பர் சிக்கன்

வழங்கியவர் : amina mohammed
தேதி : செவ்வாய், 05/07/2011 - 16:20
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
4.2
5 votes
Your rating: None

 

 • சிக்கன் - அரைக் கிலோ
 • மிளகு - ஒரு தேக்கரண்டி
 • வெங்காயம் - 2
 • தக்காளி - 3
 • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
 • பட்டை - 1
 • ஏலக்காய் - 2
 • கிராம்பு - 3
 • அன்னாசி பூ - 1
 • பட்ட மிளகாய் - 2
 • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

 

சிக்கனை சுத்தம் செய்து தயாராக வைக்கவும். வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்க்கவும். பின்னர் பட்ட மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு பொரிய விடவும்.

மிளகை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்யவும் (அம்மியில் தட்டியது போல)

அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பின் தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.

பின்னர் கோழியை சேர்த்து கிளறி உப்பும் சேர்த்து குக்கரை மூடி விடவும். (தண்ணீர் சேர்க்க தேவையில்லை)

2 விசில் வந்ததும் இறக்கி மிளகை சேர்த்து (அதில் இருக்கும் தண்ணீர் வற்ற) கிளறி இறக்கவும்.

ரசம், சாம்பார் ஆகியவற்றிற்கு அருமையான ஜோடியாக இருக்கும்.வாழ்த்துக்கள்

படங்கள் ரொம்ப நல்லருக்கு நாளைக்கே செய்யலாம் என்று இருக்கிரேன் செய்து பாத்துட்டு சொல்ரன் எப்படி இருந்தது என்று

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

ஆமி

ஆமி நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்டா
எங்க போய்ட்டே ஆளையே காணலை குறிப்பு மட்டும் வருது

ஆமி

நான் பெப்பர் சிக்கனுக்கு தக்காளி சேர்த்து பண்ணினது இல்லை. உங்க முறையும் நல்லா இருக்கு செய்து பாத்துட்டு சொல்றேன். வாழ்த்துக்கள்மா;)

Don't Worry Be Happy.

அன்பு ஆமினா..பெப்பர் சிக்கன்

அன்பு ஆமினா..

ஞாயிற்றுகிழமை உங்க பெப்பர் சிக்கன் செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது.கணவரும் அவரது நண்பரும் ரொம்ப விரும்பி சாப்பிட்டார்கள்.ரசத்திற்கு ரொம்ப நல்லா இருந்தது.சூப்பர் போங்க..

கவிதாசிவகுமார்

anbe sivam

tomato chuntey

tomato,garlic,red chilly,please greading the mixie, after mustard seeds,ureid dal , lg powder,thalibu. than add to salt.

this is using for idly,dosa said dishss.