ஆனியன் பக்கோடா

தேதி: July 6, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (12 votes)

 

பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
மல்லித் தழை - கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி, மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை நீளமாகவும், மெல்லியதாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
பின் மேலே கூறிய பொருட்களை வெங்காயத்தில் போட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும்.
சிறிது எண்ணெய் ஊற்றி பிரட்டிக் கொள்ளவும். நன்றாக கலக்கி 5 நிமிடம் கழித்து மீண்டும் பிரட்டி எடுக்கவும்.
பின் சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரிக்கவும்.
க்ரிஸ்பியான சுவை மிகுந்த பக்கோடா ரெடி.

கடலை மாவில் தண்ணீர் ஊற்றி பின் வெங்காயத்தை போட்டு தான் கலக்கி செய்வோம். ஆனால் இந்த முறையில் தண்ணீரே பயன்படுத்தக் கூடாது. நன்கு ட்ரையாக கலந்து சிறிது எண்ணெய் மட்டும் சேர்க்க வேண்டும். வெங்காயத்தில் இருக்கும் நீரும், எண்ணெயுமே மாவு நன்கு ஒட்ட போதுமானதாக இருக்கும். நன்கு உதிரியாக பொரித்து எடுக்கும் போது வெங்காயம் நன்கு பொரிந்து கடையில் கிடைப்பதை விட சுவையாக இருக்கும். மாவும் அதிகம் சேர்க்க தேவையில்லை. எண்ணெயும் அதிகம் இழுக்காது. இம்முறையில் ஒரு முறை செய்தால் இனி எப்போது செய்தாலும் இம்முறையை தான் பின்பற்ற தோன்றும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சம சூப்பர்... நானும் இப்படி தான் செய்வேன், நீர் சேர்க்க மாட்டேன். இஞ்சி மட்டும் சேர்ப்பதில்லை, இனி இஞ்சும் சேர்க்குறேன். :) சுவையான குறிப்பு ரம்யா இன்னைக்கே செய்துடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லாருக்குமே பிடிச்ச ஐடம் ஆச்சே.... அப்படியே வைங்க இதோ டீக்கு கொஞ்சம் எடுத்துக்கறேன்;) பிரசண்டேசன் சூப்பர்பா......வாழ்த்துக்கள்;)

Don't Worry Be Happy.

குறிப்பு சூப்பரா இருக்கு ரம்யா.

‍- இமா க்றிஸ்

என் கனவருக்கு இது போன்ற டிஷ் ரொம்ப பிடிக்கும் பார்க்கவே சூப்பர் நாளைக்கே செய்கிறேன்

கிரிஸ்பி கிரிஸ்பி பகோடா !!!இதே முறை டிட்டோ எண்ணெய்க்கு பதில் வெண்ணெய்,கூட கொஞ்சம் முந்திரியும்,கறிவேப்பிலையும் சேர்ப்பேன்

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரம்ஸ்,
சூப்பர் குறிப்பு.இதை நான் ஓரிரு முறை செய்து இருக்கேன்.சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு.கண்டிப்பா திரும்பவும் செய்துடுறேன்.படங்கள் சூப்பரா இருக்கு.வாழ்த்துக்கள்.

ரம்மி நானும் இப்படி தான் செய்வேன்...என்ன ஒன்னு இஞ்சி சேர்த்ததில்லை....சேர்த்தா நல்லா இருக்கும் போல தெரியுது....பக்கோடா பார்க்கவே சம கலரில் மொறு மொறுவென்று இருக்கு....கூடவே ஒரு டீயும் கிடைக்குமா??

வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

யம்மி யம்மி ரம்யா கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்றேன் உங்க எல்லா ரெசிபியும் சூப்பர் கிட்ட தட்ட 4 ரெசிபி ட்ரை பண்ணியிருக்கேன் ரொம்ப நல்லா வந்தது ஆனால் பதிவு போட தான் நேரம் இல்லை இதையும் ட்ரை பண்ணிட்டு சொல்றேன்

ரம்யா அக்கா ரொம்ப சுவையான பக்கோடா செய்து அசத்திட்டிங்க நானும் செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுறேன் போட்டோஸ் ரொம்ப சூப்பர் by Elaya.G

ரம்யா குறிப்பு சூப்பரா இருக்கு செய்து பார்த்துட்டு சொல்லுறேன் .

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ரம்ஸ் நேத்து சாயந்திரம் உங்களுடைய ஆனியன் பக்கோடா செய்தேன். உடனே பிளேட் காலி. எல்லோருக்கும் ரொம்ப பிடித்திருந்தது.ஈஸியாகவும் இருந்தது. கடையில் வாங்குவது போல இருக்குது.ரொம்ப தேங்ஸ். வாழ்த்துக்கள். இன்னும் நிறைய குறிப்பு கொடுங்கள்.

Expectation lead to Disappointment

அசத்தீட்டிங்க போங்க, கலர் பார்த்ததுமே நாக்கில் எச்சில் ஊறுது..... செஞ்சு பார்த்துட்டு சொல்ரேம்ப்பா......

பஜ்ஜி போட்டுவிட்டு மீதமான கடைசி மாவில் வெங்காயம் நறுக்கிப்போட்டு நானும் இப்படித்தான் செய்வேன் நன்றாக இருக்கும் அதனுடன் கரிவேப்பிலையும் தட்டியபூண்டும் சேர்த்து தனியாக வறுத்தும் போடலாம்

நன்றி
எனது குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றிகள் பல ;)

வனி
இஞ்சி சேர்த்து செய்து பாருங்க வனி, கடலை மாவு, எண்ணேய் ஐட்டம்னு நிறையா சாப்பிட்டா வயிற்றில் சங்கடப்படுத்தும் சிலருக்கு.. இஞ்சி சேர்ப்பதால் அது இந்த முறையில் இருக்காது.நன்றி ;)

ஜெய்
இதோ நீட்டிட்டு இருக்கேன் எடுத்துக்கோங்க.. வாழ்த்துக்கு நன்றி ஜெய் ;)

இமா
மிக்க நன்றி இமா ;)

மர்ஸி
கண்டிப்பா செய்து பார்த்துட்டு பதிவும் போடுங்க. நன்றி ;)

கவி
அப்பா... எண்ணேய்க்கு பதில் வெண்ணேய்? முழுவதும் வெண்ணேய்யா இல்லை சிறிது மட்டும் எண்ணேய்க் கூட சேர்ப்பீர்களா ? முந்திரி கறிவேப்பிலை அசத்தலா இருக்குமே.. ;) நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்.. நன்றி ;)

ஹர்ஷு
கண்டிப்பா செய்து பாருங்க..வாழ்த்துக்கு மிக்க நன்றி ;)

லாவி
டீ தானே.. சார்லட்டுக்கு ஆவோ ஜீ..
சூப்பரா செய்திடலாம் ;) நன்றி

அனு
என் ரெஸிபியை செய்து பார்த்ததுக்கு ரொம்ப நன்றி.
இதையும் செய்து சமர்த்தா பதிவு போடுங்கோ ;)
வாழ்த்துக்கு நன்றி

இளையா
ரொம்ப நன்றி அன்பு தங்கையே.. செய்து பார்த்துட்டு சொல்லுங்க ;)

குமாரி
கண்டிப்பா வந்து சொல்லுங்க. வாழ்த்துக்கு நன்றி

மீனாள்
வாவ்.. செய்து பார்த்துட்டு சம்ர்த்தா பதில் போட்டு இருக்கும் பொண்ணு.. ரொம்ப நன்றி.. ;)

சங்கி
கண்டிப்பா வந்து சொல்லோனும் சரியா ;)
ரொம்ப நன்றிப்பா

பஸாரி
அடடே..இதிலேயே புது குறிப்பு சொல்லிட்டிங்களே.. பூண்டா சூப்பர் ( அதுவும் தோலுடன் சரியா :) )அப்போ நீங்க கூட்டாஞ்சோறு பகுதியில் இணைந்த எப்படி இருக்கும்... நினைக்கவே சுவைக்குதே சீக்கிரம் வாங்கோ.. உங்க கைவண்ணத்தை காட்டுங்கோ..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா,

அப்பப்பா!!!மொத்தமும் வெண்ணையிலே பொரித்தால் அவ்ளோ தான்..பிரட்டும் போது மட்டும் சிறிது வெண்ணெய் சேர்ப்பேன்..வந்து பார்த்தால் இன்னும் நிறைய ஐடியா கிடைத்து இருக்கு .. (இன்னும் தெளிவா சொல்லணும் என்று தெரிந்து கொண்டேன்:-)) )

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பு ரம்யா,

இந்தப் பக்கோடா ரொம்பப் பிடிக்கும். மதுரையில் ரொம்ப ஃபேமஸ். எனக்கு ஊர் ஞாபகம் வந்துட்டுது.

இதுவரை வீட்டில் செய்ததில்லை. இனி செய்து பார்க்கிறேன். விருப்பப் பட்டியலில் சேர்த்து விட்டேன். நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

கவி..

சரி சரி..எண்ணேய்க்கு பதில் வெண்ணேய் என்றதால் அப்படி நினைத்தேன்.ஆனால் பிரட்டும் போது நன் சேர்க்கும் எண்ணேய்க்கு பதில் என புரிந்துக் கொள்ளாதது என் தவறுதான்.. கண்டிப்பா நானும் அடுத்த முறை சேர்த்து செய்து பார்க்கிறேன்..

சீதாலஷ்மி
ரொம்ப நன்றி.. செய்து பாருங்க.. பதிவும் போடுங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆனியன் பக்கோடா எளிமையான குறிப்பு கொடுத்தூ இருக்கீங்க இன்னைக்கே சுவை பார்த்துவிடுகிறேன் வாழ்த்துக்கள்

என் பொண்ணு இன்னிக்கு திடீரென்று வந்து இப்பவே ஆனியன் பக்கோடா செய்து தாங்கன்னு சொன்னா..
நீதான் காரம் சாப்பிட மாட்டீயேன்னு கேட்டா ,என்ன கூட்டி வந்து அறுசுவை முகப்ப காட்டி இத மாதிரி கலர்ல செஞ்சுதாங்கன்னு கேட்டா..யாரு குறிப்புன்னு உள்ள வந்து பார்த்தா நீங்க இருக்கீங்க :)

நானும் இதுமாதிரிதான் செய்வேன்...ஆனா செஞ்சு நிறைய நாள் ஆச்சு..:)

குறிப்பும் படங்களும் அருமை..நீங்க வெங்காயம் வெட்டற அழகே தனி போங்க

வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ரம்ஸ் சூப்பர்டா... நான் இஞ்சி சேர்த்து செய்ததில்லை பா லேசா தண்ணீர் தெளித்துதான் செய்வேன் ..

இன்னிக்கு உங்க முறையில் செய்தேன் ரொம்ப சூப்பரா இருந்துது...
வாழ்த்துக்கள் ரம்ஸ்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ரம்ஸ், ஆனியன் பக்கோடா எனக்கு ரொம்ப பிடிக்கும்;) கண்டிப்பா நான் சண்டே செய்ரேன். வாழ்த்துக்கள் ரம்ஸ்;)

உன்னை போல பிறரையும் நேசி.

தேவி கண்டிப்பா செய்து பார்த்து பதிவு ஓடுங்க. நன்றி

ஸ்வரு
செய்து பார்த்திங்களா?
ரொம்ப நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஜானு கண்டிப்பா செய்து பார்த்து மறக்காம பதிவும் போடுங்க நன்றி ;)

இளா
அப்படியா.. குட்டி பொண்ணும் அறுசுவை முகப்பை பார்க்குதா? சுஷாக்குட்டிக்கு கண்டிப்பா செய்து குடுங்க. எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்களை.. சீ இஸ் சோ க்யூட் & ப்ரிலியண்ட் கேர்ல் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சூப்பரான கிரிஸ்பி பக்கோடா நன்றாக இருக்கு. பார்க்கும் போதே உடனே சாப்பிடனும் போல் இருக்கு.

செய்து பாருங்க. ரொம்ப ஈஸி
பதிவிற்கு நன்றீ ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்றே செய்ய நினைத்தேன், நேரம் இல்லை.. நேற்று செய்தோம்... இஞ்சி சேர்த்ததால் வாசமும் சூப்பரா இருந்தது. ரொம்ப சுவையான வாசமான குறிப்புக்கு மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா