உளுத்தம் பருப்பு பூரி

தேதி: June 9, 2006

பரிமாறும் அளவு: 10 பூரிகள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாவு கலப்பதற்கு :
மைதா - 2 கப்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கலோஞ்சி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 2 சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு.
மசாலா பொடி :
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
ஜீரா - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
மிளகு - 8
சிவப்பு மிளகாய் - 4
பூரிக்குள் வைப்பதற்கு:
உளுத்தம்பருப்பு - 3/4 கப்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு


 

மாவு பிசைவதற்கு கொடுத்துள்ள பொருட்களை வைத்து மாவு பிசைந்து கொள்ளவும்.
மசாலா பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு தவாவில் வறுத்து (எண்ணெயில்லாமல்) பொடித்துக் கொள்ளவும்.
உளுத்தம்பருப்பை 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.
எண்ணெயில் இந்த பருப்பு கலவையை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இதில் மசாலா பொடி, உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.
மாவை பூரிக்கு இடுவது போல் இட்டு சிறிது மசாலா கலவையை நடுவில் வைத்து, நன்றாக மூடி பிறகு அதை நன்றாக உருட்டவும்.
அந்த உருண்டையை வட்டமாக பூரி இட்டு எண்ணெய் அல்லது நெய்யில் பொரித்து எடுக்கவும்.


பரங்கிக்காய்-உருளை கறியுடன் பரிமாறவும்.

மேலும் சில குறிப்புகள்