முட்டை வடைகுழம்பு

தேதி: July 7, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.9 (10 votes)

 

முட்டை வடை செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை - 3 அல்லது 4
புழுங்கல் அரிசி - 100 கிராம்
துவரம்பருப்பு - ஒரு கைப்பிடி
பெரிய வெங்காயம் - 2
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
புளி - எலுமிச்சை பழ அளவு
உப்பு - தேவைக்கு
அரைக்க:
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
மல்லிதூள் - 4 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு கப்
சோம்பு - கால் தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - ஒரு கரண்டி
சோம்பு - கால் தேக்கரண்டி
பட்டை - 3 துண்டு
கிராம்பு - 5
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தக்காளி - 1


 

வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும்.
அரிசையையும், பருப்பையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து மிக்சியில் கெட்டியாக அரைக்கவும்.
அரைத்த அரிசி மாவு கலவையில் முட்டை, வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிய வடையாக எடுத்து ஊற்றவும்.
இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும். இந்த வடை சாப்பிட மிருதுவாக இருக்கும்.
ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து ஊற்றி அதில் அரைத்த தேங்காய் விழுது, உப்பு, சேர்த்து நீர்க்க கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளிக்கவும்.
தாளித்து வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
வதங்கியதும் கரைத்து வைத்திருக்கும் குழம்பு கலவையை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கவும்.
குழம்பு ஆறினதும் வடையை சேர்க்கவும். சுவையான முட்டை வடை குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

தேவையான பொருட்கள் பார்த்தே தலை சுத்துது ;( எனக்கு பார்சல் ப்ளீஸ்.... :) ஆனா செய்த விதம் வித்தியாசம், நான் இதுவரை கேட்டதே இல்லை. நிச்சயம் சாப்பிட்டு பார்க்கனும். ட்ரை பண்ண சொல்றேன் அம்மாவை. பார்க்க அழகா இருக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புதுசு ஸ்வர்ணா புதுசு, எப்படி புதுசு புதுசா அதுவும் கேள்விப்படாத ரெசிப்பியா கொடுக்கிறீங்க,வாழ்த்துக்கள் ஸ்வர்ணா.....

முகப்பில் பார்த்ததும் நீங்க தானு எழுதி வெச்ச மாதிரி இருக்கு குறிப்பு ;)
பெரிய வேலை தான். வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

முட்டை சேர்த்து துவரம் பருப்பில் வடை . நான் இது வரையில் கேள்வி பட்டதே இல்லை. பார்த்தால் நாவில் சப்பு கொட்ட வைக்குது. இருந்தாலும் வனி சொல்ற மாதிரி தேவையான பொருட்கள் பார்த்தாலே அப்பாடி என்றிருக்கு. செய்து விட்டு திரும்பவும் வரேன்.

வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஸ்வர்ணா,

ரொம்ப மெனக்கெட்டு அழகா செய்து இருக்கீங்க.பளிச் பளிச் படங்கள்..எங்க வீட்டில் இது கூடவே கடலை பருப்பு,மட்டன் கொத்து கறியும்,கொஞ்சம் மசாலாவும் சேர்த்து வடை செய்து குழம்பு வைப்பாங்க.

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஸ்வர்ணா முட்டை குழம்பு மெனு பார்த்தால் பெரிததான் இருக்கு, செய்து பார்த்துட்டு சொல்கிறேன்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு எனது நன்றிகள்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி வனி... பார்சல் தானே அனுப்பிட்டேங்க சாப்பிட்டு பாத்து சொல்லுங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சங்கீதா..

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்குகளுக்கு மிக்க நன்றி ரம்ஸ் :) அது எப்படி நான்னு கண்டுபிடிச்சீங்க?

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி லாவண்.. கண்டிப்பா செய்து பார்த்துட்டு வந்து சொல்லுங்க :)
பொருட்களை பார்த்து அசந்துடாதீங்க வடை,குழம்பு ரெண்டுக்கும் சேர்த்துதானே சொல்லிருக்கேன் :))
(எனக்கே டைப் பன்னரதுக்குள்ள அப்பாடின்னுதாங்க இருந்துது :))) ) அதுக்காக நீங்க அசந்துடாதீங்க :)))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி கவி.. உங்க வீட்டில் செய்வதை கேட்கும் போதே நல்லாருக்கே அப்ப அதையும் போடுங்க நாங்க தெறிஞ்சுக்குறோம்..

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி குமாரி,கண்டிப்பா செய்து பாத்துட்டு சொல்லுங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா சூப்பர் பா. கண்டிப்பாக செய்து பார்க்கனூம்.

பார்க்கறப்பவே கண்ண கட்டுது.....எப்படிங்க இப்படியெல்லாம்...

மிகவும் புதுமையான அருமையான குறிப்பு...:)
நீங்க செஞ்சீங்களா ?இல்ல படம் மட்டும் பிடிச்சீங்களாங்கற ரகசியத்தை அப்புறம் சொல்லுங்க என்ன :))

வாழ்த்துக்கள்...பாராட்டுக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் ஸ்வர்ணா விஜயகுமார், சூப்பர் குழம்பு;))) ஸ்வர் இந்த குழம்பு அண்ணா சொல்லி கொடுத்து தானே செய்திங்க‌ உண்மைய சொல்லுங்க நான் யார்கிட்டையும் சொல்லமாட்டேன்;))))) சரி விடுங்க நீங்க சொல்லமாட்டிங்க நான் அண்ணாகிட்டயே கேட்டுகிறேன.)))) வாழ்த்துக்கள் செல்லம் ;)

உன்னை போல பிறரையும் நேசி.

உங்க பேர் சரியா சொல்லிருக்கேனா?

நன்றிப்பா,கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப நன்றிங்க இளவரசி......) அய்யோ சத்தியமா நான் செஞ்சதுதாங்க நம்புங்க இல்லன்னா அழுதுடுவேன் :))))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தேவி ரொம்ப ரொம்ப நன்றிடா... உன்னிடம் மட்டும் உண்மையை சொல்லுறேன் சரியா யார்கிட்டயும் சொல்லக்கூடாது :)) நிஜமா நான் செஞ்சதுதான் :))))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவா, ஒரு குறிப்புக்குள்ளயே இவ்ளோ பெரிய கதையை கொண்டு வர முடியும்னா அது உங்களால தான் முடியும் :) என்ன சுவா இந்த குறிப்புக்கான பொருளை தயார் பண்ணவே ஒரு வாரம் ஆயிருக்கும் போல ;)) ஹிஹிஹி.... அடிக்க வராதீங்க சும்மா... நம்ம சுவாவாச்சேன்னு லைட்டா கலாய்ச்சேன்.. அம்புடுதேன்...

சுவா, சும்மா சொல்ல கூடாதுப்பா விளக்கப்படத்தை பார்க்கும் போதே அதனோட டேஸ்ட்டையும் உணர முடிஞ்சது.. உண்மையாவே நல்ல வித்தியாசமான, சுவையான குறிப்பு சுவா... தொடரட்டும் உங்களின் சுவையான பணி :) வாழ்த்துக்கள் பா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்ப்ஸ் இப்படி என் குறிப்பை கதையாக்கிட்டீங்களே அய்யகோ :))

லைட்டா கலாய்ச்சீங்களா அதுக்கே இப்படின்னா அப்ப ஸ்டாராங்கான்னா எப்படி இருக்கும் அச்சச்சோ நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு :))

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கல்ப்ஸ்...... உங்க வாழ்த்து கிடைச்சதில் ரொம்ப சந்தோசம்ப்பா :))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

CORRECT PA. ETHU EN SON NAME

Dear swarna,
your receipe is too good. Tommorrow i tried this receipe to my home. All the best for ur new innovation.

ur frd,
Divyaramesh.

ஸ்வர்ணாதேவையான பொருட்கள்ன்னு படிக்கும்போதே மூச்சுவாங்குது அப்பாடி முடியலை அட்ரஸ் சொல்லுங்கள் வீட்டுக்கேவாறேன் சூடா சாப்பிட பார்சல் வேண்டாம் ஆறிடும் நல்ல அழ்காசெய்து இருக்கீங்க வித்தியாசமான குறிப்பு வாழ்த்துக்கள் விருப்பபட்டியில் சேர்த்தாச்சு நேரம்கிடைக்கும் பொழுது கண்டிப்பாக செய்துபார்க்கணும்

ஹாய் ஸ்வர்,அசத்தறீங்க ஸ்வர்,போட்டோஸ் சூப்பராயிருக்கு தங்கம்.

எப்படி ஸ்வர் இவ்வளவு பொறுமையா செய்யறீங்க??படிக்கவே இவ்வளவு நேரம்

ஆகுதே!!முட்டை வடை குழம்பு,வித்தியாசமான,புதுமையான குறிப்பு ஸ்வர்.மீண்டும்

ஒரு அற்புதமான குறிப்பு தந்திருக்கீங்க ஸ்வர்.என் ஸ்வர்,சமையல் ராணினு

மறுபடியும் நிரூபிச்சிருக்காங்க.என் தங்கத்துக்கு ஸ்பெஷல்

வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.ரொம்ப ரொம்ப சாரி ஸ்வர்,நான்தான்

கடைசியா வந்திருக்கேன்.சாரி தங்கப்பெண்ணே.

அன்புடன்
நித்திலா

அடடா.....! எல்லாரும் சொன்னமாதிரி எனக்கும் குறிப்புகள் பாத்ததுமே தலை சுத்துச்சு...ஆனா ..செய்முறை விளக்கம் படிச்சதுமே (பார்த்ததுமே) மனசுல நச்சுனு பதிஞ்சிருச்சு;) உறவினர் வரும்போது அசத்தரதவிட உறவினர் வீட்டுக்கே போய்கூட சமைச்சு அசத்திரலாம்;) வாழ்த்துக்கள்மா;)

Don't Worry Be Happy.

மிக்க நன்றி திவ்யா இப்பதான் பார்க்கிறேன் உங்க பதிவ சாரிங்க :(

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பாத்திமா புரப்பட்டுட்டீங்களா இன்னும் வரக்கானுமே சீக்கிரமா வாங்க நான் காத்துகொண்டு இருக்கேன் என் கையால செஞ்சு சூடா தரேன் :))
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பாத்திமா...

சாரிங்க தாமதமான நன்றிக்கு:(

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நித்தி ரொம்ப ரொம்ப நன்றிப்பா கடைசியா வந்தாலும் முதலில் வந்தமாதிரிதான் இருக்கு எனக்கு :)) எதுக்கு சாரிலாம் இப்ப நாந்தான் லேட்டா நன்றி சொல்றேன் :( வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜெய்.. அப்பாடா நீங்களாவது
//.செய்முறை விளக்கம் படிச்சதுமே (பார்த்ததுமே) மனசுல நச்சுனு பதிஞ்சிருச்சு;)// சொன்னீங்களே சந்தோசம் :))தாமதமான நன்றிக்கு சாரிப்பா :(

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

புதுமையான குறிப்பு !

வாழ்த்துக்கள்!!

மிக்க நன்றி மலர்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா மதியம் செய்து சாப்பிட்டு பதிவு போடுவோம்னு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன் ரொம்ப நல்லா இருந்துச்சுங்க. வித்தியாசமா இருந்துச்சு நான் இதுப் போல் செய்தது இல்லங்க. நன்றி

சுவர்ணா நேற்று மதியம் முட்டை வடைகுழம்பு செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது. வித்யாசமான குறிப்பிற்கு வாழ்த்துக்கள்

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

ஸ்வர் முட்டை வடைகுழம்பு செய்தேன்.ரொம்ப நல்லா இருந்துச்சு.சுவை அருமை.நல்ல குறிப்புக்கு நன்றி :)

Kalai