கோதுமைரவை கேசரி

தேதி: July 8, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

திருமதி. கோமு அவர்களின் குறிப்பினை பார்த்து செய்தது.

 

கோதுமை ரவை - ஒரு கப்
சர்க்கரை - 1 1/2 கப்
மில்க் மெய்ட் (அ) ப்ளைன் கோவா - கால் கப்
பாதாம் - பத்து
நெய் - அரை கப்
ஏலப்பொடி - அரை தேக்கரண்டி


 

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கப்பில் கொதிநீர் ஊற்றி அதில் பாதாமை போட்டு பத்து நிமிடம் ஊற விட்டு பின் தோல் நீக்கி சிறுத்துண்டுகளாக நீளவாக்கில் சீவிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு கோதுமையை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.
வறுத்ததும் மூன்று கப் நீர் ஊற்றி கொதிக்க விடவும். சிறுத்தீயில் வைத்தால் கோதுமை நன்கு வெந்து இருக்கும்.
இப்போது ஏலப்பொடி சர்க்கரை சேர்த்து கிளறவும்.
பின்னர் மில்க்மெய்டை சேர்த்து கிளறவும்.
சிறிது சிறிதாக நெய்யை விட்டு பாதாமையும் போட்டு பத்து நிமிடம் சிறுத்தீயில் வைத்து கிளறவும்.
நன்கு நெய் முழுவதும் கோதுமையில் கலந்து இருக்கும். இப்போது அடுப்பை அணைக்கவும்.
கோதுமை கேசரி ரெடி. நான் கோவாவிற்கு பதில் மில்க்மெய்ட் சேர்த்து செய்தேன். சுவை அபாரம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

HELLO AMMA,
YOUR RECIPE IS DIFFERENT, EASY TO DO AND YUMMY TOO TASTE ... CONGRATS...ITS HEALTHY TOO ..

ANBUDEN,
HEMA MANIVANNAN

அருமையாக இருக்கு. வாழ்த்துக்கள் கோமு. ருக்ஸானா அழகா ப்ரெசென்ட் பண்ணியிருக்கீங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கோதுமைரவை கேசரி கண்டிப்பா நல்லா இருக்கும்ன்னு நினைக்கிரேன்....செய்துவிட்டு சொல்கிறேன் ருக்ஸ்....வாழ்த்துக்கள்