பரங்கிக்காய் கூட்டு

தேதி: July 12, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

 

பரங்கிக்காய் - ஒரு துண்டு
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
துவரம் பருப்பு - கால் கப்
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க
கொத்தமல்லி - சிறிதளவு


 

வெங்காயம் மற்றும் பரங்கிக்காயை நறுக்கி வைக்கவும். துவரம் பருப்பை ஊற வைக்கவும்.
குக்கரில் பரங்கிக்காய், வெங்காயம், பூண்டு சேர்த்து நீர் விட்டு வேக விடவும்.
ஊற வைத்த பருப்பை இஞ்சி, தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைக்கவும்.
பாதி வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
தாளித்தவற்றை வேக வைத்த பருப்பில் சேர்க்கவும். உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். கடைசியாக கொத்தமல்லி சேர்க்கவும். சுவையான பரங்கிக்காய் கூட்டு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பரங்கிகாயில் நான் கூட்டு செய்தது இல்லை செய்துபார்கிறேன் கவி .

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சம சூப்பரா இருக்கு கலர்... அவசியம் செய்துட்டு சொல்றேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வழக்கம் போல சூப்பரான வெஜ் குறிப்பு..
இதுவரை நான் இதில் செய்தது இல்லை..செய்து பார்த்துட்டு சொல்றேன்
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

முகப்பில் பார்த்ததுமே நீங்க தான்னு கண்டுபிடிச்சிட்டேன்:)

பருப்பை வேகவைக்காமல் கூட்டா....நல்லாயிருக்கே....

வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கும்,குழுவினர்க்கும் நன்றி

வனிதா மேடம் ,
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

ரம்யா,
ட்ரை பண்ணுங்க..வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

லாவண்யா,
அம்மா ரெடியாக துவரம் பருப்பு,கடலை பருப்பு ஒன்றும் பாதியுமாக உடைத்து வைத்து அவசரத்திற்கு சுடு தண்ணீரில் போட்டு செய்வாங்க..

என்றும் அன்புடன்,
கவிதா

கவி நான் வேறமாதிரி செய்வேன் இது மாதிரியும் செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்

கவிதா,
பருப்பை அரைத்து சேர்ப்பதால் வேகும் நேரம் குறையும்.விரைவில் செய்துடலாம் இல்லையா?நல்ல சத்தான ரெசிப்பி.வாழ்த்துக்கள்.

பரங்கிக்காய் லா கூட்டா? வித்தியாசமா இருக்கே. பரங்கிக்காய் கிடைக்கும் போது, நியாபகம் வெச்சு பண்ணி பாத்துடறேன். வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

பரங்கிக்காயில் கூட்டா இதுவரை நான் செய்தது இல்லை..செய்து பார்த்துட்டு சொல்றேன் வாழ்த்துக்கள் கவி...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹமீதாம்மா,
வருகைக்கும்,வாழ்த்திற்கும் ரொம்ப நன்றி

அன்பரசி,
நீங்க சொல்றது சரிதான்..
வருகைக்கும்,வாழ்த்திற்கும் ரொம்ப நன்றி

சுகி,
ட்ரை பண்ணுங்க
வருகைக்கும்,வாழ்த்திற்கும் ரொம்ப நன்றி

ஸ்வர்ணா,
செய்து பாருங்க ..
பரங்கிக்காயில் நிறைய குறிப்பு அறுசுவையிலேயே இருக்கு பாருங்க..வருகைக்கும்,வாழ்த்திற்கும் ரொம்ப நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

unga recepie paka alagarku.ithe methodla cho cho vachu panlama..........pl sollunga............

நல்ல குறிப்பு

செய்து பார்த்துட்டு சொல்றேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா