dust deposit in Vertified tiles flooring( டயில்ஸில் அழுக்கு)

அன்புள்ள தோழிகளே,
நாங்கள் புதிய வீட்டிற்க்கு குடி வந்து 3 மாதங்கள் ஆகிறது.
தினமும் வீட்டை துடைக்கிரோம்.ஆனாலும் இரண்டு டைல்ஸ் சேரும் இடங்களில் கருப்பு கோடு போல் இருக்கிறது ஒரு சில இடங்களில். அதுவும் வெள்ளை புளோர் வேரு. பார்க்க நன்றாக இல்லை.
என்ன செய்வதென்று சொல்லுங்கள் தோழிகளே....

எனக்கும் அ தே பிரச்சனைதான் எங்க வீட்டிலும் வெள்ளை ப்ளோர் யாராவது கண்டிப்பாக பதில் கூறுங்கப்பா மிகவும் உதவியாக இருக்கும் இது எனக்கு வெகுநாள் பிர்ச்சனை .

ஹாய் லதா & கீதா நானும் புது வீட்டிற்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது வந்ததும் நன்றாக தான் இருந்தது டைல்ஸ் எல்லாம், உட் வொர்க் ,பெய்ண்டிங் இலக்ற்றிசன் வொர்க் எல்லாம் நேற்றோடு தான் முடிந்தது எனக்கும் உங்களை போல கவலையில் இருந்தேன் பெயிண்டர் அது ஒன்னும் பிரச்னை இல்லை என்று(ஒய்ட் சிமெண்ட் போன இடத்துல எல்லாம் ) ஒய்ட் சிமெண்ட் போட்டு கொடுத்தார் இப்போ வீடு சுத்தமா இருக்கு ,சில நேரத்துல அழுக்கும் படியும் அது துடைக்க துடைக்கத்தான் சரி ஆகும் என்று சொன்னார்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குமாரி உங்க பதிலுக்கு மிக்க நன்றி ஒயிட் சிமெண்ட்லா ஒன்னும் போல ஆனா லைன்ல எல்லாம் கறுப்பா இருக்கு எவ்வளவு துடைத்தாலும் போகமாட்டங்குது அது போறாமாதிரி ஏதாவது லிக்விட் இருந்தால் சொல்லுங்கப்பா

எங்கள் சமையலறைக்கு தரை ஓடுகள் பதித்து 3 மாதங்கள்தான் ஆகிறது. அழுக்கு சேரவில்லை, அதனால் அதிகம் சொல்லத் தெரியவில்லை.

ஆரம்பத்தில் 'ஜனோலா' கலந்த சுடுநீர் கொண்டு 'மொப்' செய்தேன். பிறகு க்றிஸ் அலுவலகத்தில் சொன்னார்கள் என்று ஒரு 'ஸ்டீம் மொப்பர்' வாங்கி வந்தார். வெறும் நீராவியே நன்றாகச் சுத்தம் செய்கிறது.

'க்ரௌட்' சுத்தம் செய்வதற்கு என்று சுத்திகரிப்புப் பொருட்கள் கிடைக்கிறது. 'ஹார்ட் வெயார் ஸ்டோர்' எல்லாவற்றிலும் கிடைக்கும், விசாரித்துப் பாருங்கள். கிடைக்காவிட்டால்... 'மிஸ்டர் மஸில்' / 'ஜிஃப்' (வெண்மையாக பால் போல் இருக்கும் திரவம் மட்டும்) சுடுநீரில் கலந்து துடைத்தால் நிச்சயம் போகும். அப்படியும் பிடிவாதமாகப் போக மாட்டேன் என்றால், அழுக்காக இருக்கும் இடத்தில் மட்டும் செறிவாக சிறிது திரவத்தை விட்டு ஒரு பழைய 'டூத் ப்ரஷ்' கொண்டு தேய்த்து பிறகு ஈரத்துணியால் துடைத்து எடுக்கலாம்.

சிலர் 'டைல்ஸ்' நிறத்தில் இல்லாமல் 'க்ரௌட்' கடுமையா நிறங்களில் போடுவார்கள்; அழுக்கு தெரியாமல் இருக்கும் என்று. எனக்கு அதில் உடன்பாடு இல்லை.

கூடுமானவரை நிலத்தில் சிந்தாமல் சமைத்தால் சுலபம். ஈரமாக ஏதாவது சிந்தினால் உடனே துடைத்து எடுத்து விட வேண்டும்.

‍- இமா க்றிஸ்

//கிச்சன் தரையை சுத்தம் செய்ய, நான் ஒரு புக்கில் படித்ததை பின்பற்றுகிறேன். அரை கப் அளவு வினிகர், கால் கப் அளவு பேக்கிங் சோடா, இரண்டு லிட்டர் அளவு தண்ணீர் (அளக்க வேண்டியது இல்லை, தோராயமாக செய்யலாம்) இது மூன்றையும் கலந்து கொண்டு எப்போதும் போல் தரையை துடைக்கலாம்.//

node/14544

எனது சமையலறை - வானதி (Vinne)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நமது விம்பாரை டைரேக்ட்டாக அழுக்கு உள்ள இடத்தில் தேய்த்து ஸ்க்ரபர் கொண்டு நன்கு தேய்த்தால் போய் விடும் .நான் அப்படித்தான் செய்கிறேன் ...

அன்புள்ள தோழிகளே,
தங்களின் பதில்களுக்கு நன்றி,நானும் sweeper brushல் சோப் போட்டு தேய்த்தேன்...ஒரளவு சுத்தம் ஆனது. மற்ற வழிமுறைகளையும் செய்து பார்க்கிரேன். மீண்டும் thanks

The distance between the earth and the sky is not the measure of altitude its the measure of ATTITUDE!!!!!!!!!!

டைல்ஸ் ஓரம் உள்ள அழுக்கை போக்க ப்ரஸில் மண்ணெண்னைய் தொட்டு அழுக்கு உள்ள இடத்தில் தேய்க்க அழுக்கு நீங்கி விடும்.நான் புத்தகத்தில் படித்தேன்.

மேலும் சில பதிவுகள்