KFC சிக்கன்

தேதி: July 13, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (20 votes)

 

கோழி தொடைப்பகுதி - 10
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
முட்டை - 3
ப்ரட் க்ரம்ஸ் - தே.அளவு
எண்ணெய் - பொரிக்க
உப்பு - 1/2 ஸ்பூன்


 

கோழித் தொடைகளை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.
பின் கோழியில் மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,இஞ்சி பூண்டு,எலுமிச்சை சாறு,உப்பு போட்டு பிரட்டி 1 மணி நேரம் வைக்கவும்.
முட்டைகளை உடைத்து ஒரு கோப்பையில் ஊற்றி கலக்கி வைக்கவும்.
ப்ரட் க்ரம்ஸை ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைக்கவும்.
கோழிகளை ஒவ்வொன்றாக எடுத்து முட்டையில் நனைத்து பின் ப்ரட் க்ரம்ஸில் பிரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


கோழியின் தொடைப்பகுதியாக இருந்தால் குழந்தைகள் பிடித்து சாப்பிட வசதியாக இருக்கும்.கோழியின் மற்ற சதைப் பகுதியிலும் செய்யலாம்.எலும்பில்லாத வெறும் சதைத் துண்டிலும் இவ்வாறு செய்தால் நன்றாக இருக்கும்.கோழியில் மசாலாக்களை பிரட்டி ஊற வைப்பதால் சுவை கோழியில் நன்றாக ஊறி இருக்கும்.கோழியை சூடாக சாப்பிடனும்.அப்போதான் க்ரிஸ்பியாக இருக்கும்.இதை உணவுடனும் பரிமாறலாம் & வெறுமனே சாப்பிடலாம்.இதை எண்ணெயில் மூழ்கும்படியும் பொரிக்கலாம் அல்லது மீன் பொரிப்பது போலும் எல்லா பக்கமும் திருப்பிவிட்டு பொரிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நல்ல குறிப்பு ரஸியா;)

KFC சிக்கன் மாதிரியே வருமா ... நாளைக்கு ட்ரை பண்ணிப்பாத்துட்டு எப்படி வந்ததுன்னு சொல்றேன்மா.

Don't Worry Be Happy.

நல்லா வரும்,ஆனால் KFC யில் நம் நாட்டு மசாலாக்களெல்லாம் சேர்க்க மாட்டாங்க,என்ன செய்வது நம்ம நாக்குக்கு கொஞ்சம் உப்புச்சப்புடன் தானே எல்லா உணவும் கேக்குது,அதான் கொஞ்சம் நம்ம மசாலாக்களும் சேர்த்துள்ளேன்,செய்து பாருங்க,இது வித்தியாசமான சுவையில்தான் இருக்கும்.

Eat healthy

ருசிகரமான குறிப்பு வாழ்த்துக்கள்.

எனக்கு கே எப் சி சிக்கன் ரொம்ப ரொம்ப பிடிக்கும். பெரும்பாலும் வீக் எண்டு என் கணவர் வாங்கிட்டு வந்து கொடுப்பார். அதன் ருசியே ம்ஆ. வீட்டில் செய்து பார்க்க ஆவலாக இருக்கின்றது. நான் செய்துபார்த்துவிட்டு வந்து உங்களுக்கு பதிவிடுகிறேன். அருமையான குறிப்பு கொடுத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வணக்கம் ரேவதி! பாராட்டுக்கு ரொம்ப நன்றி,எனக்கும் கே எஃப் சினா ரொம்ப பிடிக்கும்,நம்ம நாட்டில் அதை சுவைச்சது கிடையாது,அடுத்தமுறை ஊருக்கு வரும்போது சுவைச்சிட வேண்டியதுதான்,இது மாதிரி செய்து பாருங்க,மசாலாக்கள் போடாமல் உப்பு,மிளகுதூள்,பூண்டு பேஸ்ட் இவைகளை மட்டும் சேர்த்து பிரட்டி பின் முட்டையில் நனைத்து ரொட்டித்தூளில் பிரட்டியும் செய்யலாம்,செய்து பார்த்துட்டு சொல்லுங்க!
அப்புறம் என்னோட ஒரு கால எடுத்துட்டீங்களே ரேவதி,என் மேல அப்படி என்ன கோவம்,அடுத்தமுறை என் காலை என்னோட வச்சிடுங்க ப்ளீஸ்!

Eat healthy

i tried this da!!!!!!!!!! enjoyed well!

VALGHA VALAMUDAN!

thank u so much for ur comment

Eat healthy

ப்ரட் கிரைம்ஸ்இற்கு பதில் மைதா சேர்க்கலாமா?

bread crimes aptina enna please konjam sollunga

ப்ரெட் க்ரெம்ப்ஸ் னா ப்ரெட் தூள். ப்ரெட் ஐ மிக்சியில் பொடித்து கொள்ளலாம். அல்லது கடைகளில் ப்ரெட் க்ரெம்ப்ஸ் என கேட்டே வாங்கிக் கொள்ளலாம்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ப்ரட் க்ரம்ஸ் ரெஸ்க் ரொட்டியில் தான் செய்வேன்,மிக்ஸியில் ரொட்டியை பொடித்தால் ரெடியாகிவிடும்.
பதில் சொன்னதுக்கு நன்றி கவிசிவா.

Eat healthy

மைதா சேர்த்து செய்தால் வேறுவித சுவையில் இருக்கும்,மைதாவும் சேர்த்து செய்வதுண்டு.

Eat healthy