ஆலு மட்டர்

தேதி: June 11, 2006

பரிமாறும் அளவு: 6

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3 (1 vote)

 

உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 6 (மீடியம் சைஸ்)
தக்காளி - 1/4 கிலோ
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மல்லிப் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 1/2 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்


 

வெங்காயத்தைப் பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக் நறுக்கி அவியவைத்து எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும்.
பட்டாணியை அவித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயையும் நெய்யையும் கலந்து, காய்ந்தவுடன் சீரகத்தைப் போட்டு பொரிய விடவும்.
பிறகு இஞ்சி-பூண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
அடுத்து வெங்காய விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளியைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அதன் பிறகு மல்லிப்பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலா பொடி போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
இதனுடன் அவித்த உருளைக்கிழங்கு, பட்டாணி, உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
கெட்டியான பிறகு மல்லித்தழை போட்டு இறக்கவும்.


இது சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ்.

மேலும் சில குறிப்புகள்


Comments

தங்களின் செய்முறை விளக்கம் அருமை.

I tried out this recipe and my husband simply loved it. Thanks for the recipe.

Sangeetha!

I tried ur receipe, but it tasted little bitter. will u pls tell me why it is like that&what mistake i have done,i followed the same as ur receipe.pls tell me.

Kalai

if u've not fried the onion paste properly, in the sense till the raw smell goes out, every dish will taste bitter. try grating onion and making this recipe. many people will get this bitterness if onion is not fried properly. anyway all the best.. and thx for commenting.