காராமணிக் காய் மசாலா

தேதி: July 14, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 2 (1 vote)

 

காராமணி - 250 g
சின்ன வெங்காயம் - 1
பூண்டு - 3
இஞ்சி - 1 அங்குல துண்டு
காய்ந்த மிளகாய் - 4
தேங்காய் துருவல் - 1/4 கப்
மல்லி இலை - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 2 tsp
கடுகு, சீரகம், கருவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 tsp


 

காராமணியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயம், இஞ்சி, பூண்டு, தேங்காய், மிளகாய், மல்லி இலை, எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து அரைத்த மசாலா சேர்க்கவும்.
மசாலா நன்கு பச்சை வாசம் அடங்கியதும் அறிந்து வைத்துள்ள காயை சேர்த்து கிளறவும்.
உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மிதமான தீயில் வேக விடவும்.
அடிக்கடி பார்த்து கிளறி விடவும். தேவையெனில் தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்.
காய் வெந்து மசாலா காயில் ஏறியதும் அடுப்பை அனைத்து சப்பாத்தி அல்லது சாதத்துடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்