மொச்சைகொட்டை கறி | arusuvai


மொச்சைகொட்டை கறி

food image
வழங்கியவர் : kumari.r
தேதி : வியாழன், 14/07/2011 - 11:55
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :

 

 • (பச்சை)மொச்சை - கால் கிலோ
 • பெரிய வெங்காயம் - இரண்டு
 • தக்காளி - இரண்டு
 • தனி தூள் - இரண்டு தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் - ஒரு பின்ச்
 • தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
 • கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
 • கருவேப்பில்லை - ஒரு ஆர்க்கு
 • கொத்தமல்லி-கொஞ்சம்
 • உப்பு - தேவையான அளவு
 • சோம்பு, கடுகு - ஒரு தேக்கரண்டி
 • எண்ணெய் - தேவையான அளவு
 • துருவிய தேங்காய் - இரண்டு தேக்கரண்டி

 

 • வெங்காயம் ,தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்,வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு,கடுகு தாளித்து வெங்காயம் தக்காளியை கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
 • பின் தூள் வகைகளை சேர்த்து மொச்சைகொட்டையை சேர்த்து வதக்கவும் .சிறிது வதங்கியதும் தேவையான அளவு உப்பு , அரை தம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
 • நன்றாக வெந்து வாசம் வரும் போது திறந்து துருவிய தேங்காய் மற்று கொத்தமல்லி சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.
மொச்சைக்காய் வேக நேரம் எடுக்காது அதனால் அப்படியே போடலாம்.இல்லை என்றால் அவிச்சிட்டும் போடலாம்.இந்த கறியை கிரேவி யாகவும் செய்யலாம்.அல்லது ட்ர்ய்யாக வும் செய்யலாம் அவரவர் விருப்பம் போல்..இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..குமாரி...

செய்முறை நன்றாக உள்ளது.செய்து பார்க்கிறேன்..தனி தூள் என்றால் என்ன..!!

radharani

ராதா

ஹாய் ராதா கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க.தனி தூள் என்றால் தனி மிளகாய் தூள்.மல்லி சேர்க்காமல் இருப்பது.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪