ரத்னா கபே சாம்பார்

தேதி: June 11, 2006

பரிமாறும் அளவு: 4-6

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

துவரம் பருப்பு - 1 கப்
சாம்பார் வெங்காயம் - 1 கப்
தக்காளி - 2 - 3
பூண்டு - 5 பல்
வெள்ளை பூசணி - 1/2 கப் (சிறிய சதுரங்களாக)
முருங்கைக்காய் - 1/2 கப்
வெல்லம் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - கைப்பிடி
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
புளிச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப் பொடியாக நறுக்கியது
நெய் - 1/2 கப்
எண்ணெயில்லாமல் வறுத்து பொடிக்க:
தனியா - 2 - 4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 - 4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - கைப்பிடி
வெந்தயம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3 - 5
பெருங்காயம் - 1 டீஸ்பூன்


 

குக்கரில் சிறிது நெய் விட்டு, துவரம் பருப்பை லேசாக நெய்யில் பிரட்டி பிறகு 2 - 3 கப் தண்ணீர் சேர்த்து 3 - 4 விசில்கள் வரை வேக வைக்கவும்.
ஒரு வாணலியில், சிறிதளவு நெய் சேர்த்து கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விடவும்.
இதில் வெங்காயம், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
எல்லாக் காய்கறிகளையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
பிறகு மஞ்சள், மிளகாய் பொடிகள், வெல்லம், உப்பு, 1 டீஸ்பூன் அரைத்த சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.
இத்துடன் வேகவைத்த பருப்பை சேர்த்து, தண்ணீரையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
காய்கறிகள் வெந்தவுடன் புளிச் சாறையும் சேர்த்து, மீதமுள்ள அரைத்த சாம்பார் பொடியையும் சேர்த்து கொதிக்க விடவும்.
இறுதியில் சிறிது நெய்யையும், கொத்தமல்லியையும் சேர்த்து இறக்கவும்.


ரத்னா கபே என்ற ஹோட்டல் சென்னை, திருவெல்லிக்கேணியில் உள்ளது. இது மிகவும் பழமையான ஹோட்டல். இவர்களுடைய சாம்பார் மிகவும் பிரபலமானது. எங்களுடைய வடநாட்டு நண்பர்களுக்கு இந்த சாம்பாரை தோசையுடன் பரிமாறினால் மிகவும் ருசித்து சாப்பிடுவர். இதோ அதன் ரகசியம் உங்களுக்காக மட்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

nithya kopaal
ரத்னா கேஃப் சாம்பார் ஒகே சூப்பர் அதற்கு கூட ஒரு பெரிய போண்டா வைப்பார்களே அது தெரிந்தால் சொல்லுங்கள்.
நான் வடை,பஜ்ஜி, நல்ல செய்வேன் ஆனால் போண்டா மட்டும் சிரிய நெல்லிக்காய் அளவு போட்டால் தான் நல்ல வருது பெரிய போண்டா வரவில்லை அது தெரிந்தால் சொல்லவும்.
Jaleela

Jaleelakamal

நித்யா, ரத்னா கஃபே சாம்பார் சூப்பர். மிகவும் நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் தயாரித்த ரத்னா கஃபே சாம்பாரின் படம்

<img src="files/pictures/aa340.jpg" alt="picture" />

thanks for the photo jaleela...

நித்யா எப்படி இருக்கீங்க.

ஏன் அறுசுவைக்கு வரவில்லை

Jaleelakamal

நான் USA இருக்கும் பொழுது நிறைய அறுசுவைக்கு வருவேன், நிறைய ரெசிபி செய்வேன், இப்பொவெல்லாம் வேலை அதிகம் அதனால் வரமுடியல. but i still see all ur recipes and try out those when i get time. now i'm in b'lore.

நான் USA இருக்கும் பொழுது நிறைய அறுசுவைக்கு வருவேன், நிறைய ரெசிபி செய்வேன், இப்பொவெல்லாம் office வேலை அதிகம் அதனால் வரமுடியல. but i still see all ur recipes and try out those when i get time. now i'm in b'lore.

நான் USA இருக்கும் பொழுது நிறைய அறுசுவைக்கு வருவேன், நிறைய ரெசிபி செய்வேன், இப்பொவெல்லாம் office வேலை அதிகம் அதனால் வரமுடியல. but i still see all ur recipes and try out those when i get time. now i'm in b'lore.