ராகி ரொட்டி

தேதி: July 15, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

ராகி மாவு - அரை கிலோ
சாம்பார் வெங்காயம் - 100 கிராம்
முருங்கைக்கீரை - அரை கட்டு (ஒரு கப்)
தேங்காய் - அரை முடி (துருவியது)
பச்சைமிளகாய் - 3
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு


 

கீரையை ஆய்ந்து கழுவி வைக்கவும். வெங்காயம், மிளகாயை நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், மிளகாய் போட்டு தாளிக்கவும்.
அதில் கீரையை போட்டு வதக்கவும்.
அகலமான பாத்திரத்தில் மாவு, வதக்கிய கீரை, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
சப்பாத்தி உருண்டையை விட கொஞ்சம் பெரிதாக எடுத்துக் கொண்டு ஒரு பாலித்தீன் கவரில் சிறிது எண்ணெய் தடவி அதில் வைத்து தட்டவும்.
அடுப்பில் தவாவை வைத்து சூடானதும் தட்டிய ரொட்டியை போட்டு எண்ணெய் விட்டு மிதமான தீயில் இரு புறமும் திருப்பி போட்டு சுடவும். ( ரொட்டியின் நடுவில் தோசை திருப்பியால் லேசாக கீறவும் அப்போது தான் உள்ளேயும் சீக்கிரம் வேகும்)
ரொட்டி வெந்ததும் எடுத்து விடவும். சுவையான முருங்கைக்கீரை ராகி ரொட்டி ரெடி. தேங்காய் சட்னி வைத்து சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எங்க வீட்டிலும் இப்படி தான் செய்வோம் மா, ஆனால் முருங்கை கீரை, தேங்காய் சேர்த்தது இல்லை.

உங்க ஐடியா நல்லா இருக்கு, முருங்கை கீரை உணவில் சேர்த்த மாதிரியும் இருக்கும், சத்து கிடச்ச மாதிரியும் இருக்கும். கண்டிப்பா பண்ணி பாக்கறேன்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

பாத்திமா சத்தான சுவையான ரொட்டி வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

சுகி முதல் ஆளாய் வந்து பதிவிட்டது மகிழ்ச்சி இதுமாதிரியும் செய்து பாருடா நல்லா இருக்கும் வருகைக்கு நன்றி

ஸ்வர்ணா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

ஹமீதா அம்மா,

சத்தான ரொட்டி ..வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ராகி ரொட்டி சூப்பரா இருக்கு.தேங்காய்த்துறுவல் சேர்த்தது வித்தியாசமா இருக்கு.கண்டிப்பாக முருங்கைக்கீரை கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

SUPER PA. IMPORTANT MESSAGE TO ALL ARUSUVAI MEMBERS, THANK YOU FRIEND

இதே முறையில் தான் நானும் செய்வேன் ஆனால் செய்து ரொம்ப நாள் ஆச்சு பார்க்கவே ஆசையா இருக்கு.நல்லா செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள்

ஹாய் பாத்திமா ராகி ரொட்டி சூப்பரா செய்து இருக்கீங்க செய்துட்டு சொல்றேன்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

நாங்களும் இப்படி தான் முருங்கய் சேர்த்து செய்வோம். எங்க பாட்டி சமையல். ஆனால் தேங்காய் துருவல் புதுசு... ட்ரை பண்ணி சொல்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹமிட்ப்ஃத்திமா
நல்ல சத்தான பொருள் என்று எல்லாரும் சொல்லிருக்காங்க

பாக்கயும் நல்லாருக்கு ஆனா.............. ராக்கிமாவுன்டா அது என்ன மாவு அது எதில் செய்ற மாவு சொல்ல முடியுமா

அன்புடன்
பல்கிஸ்

உதவி செய்தாள் உண்மையாக செய்
திருப்த்தி அடைவாய்

உதவி செய்தால் உண்மையாக செய்
திருப்த்திஅடைவாய்

அன்புடன்
பல்கிஸ்

கவி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

அன்பரசி கிடைக்கும் பொழுது செய்து பாருங்கள் வருகைக்கும்வாழ்த்துக்கும் நன்றி

v.jeevish நன்றி

மெர்ஜானா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

குமாரி வருகைக்கு நன்றி

வனி இது எங்க பாட்டிசமையல்தான் (அத்திரி பாச்சா கொலுக்கட்டைன்னு ஒன்னு செய்வாங்க சூப்பரா இருக்கும்) செய்துட்டு சொல்லுங்கள் வருகைக்கு நன்றி

பல்கீஸ் என் தோழியுடைய பெயர் அவள் ஞாபகம் வ்ந்துட்டது
ராகி மாவுன்னா கேள்வரகுல (கேப்பை) செய்வது வருகைக்கு நன்றி

சத்தான சூப்பர் குறிப்பு.. மாலை நேர எளிய உணவு
வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

hi,m new to arusuvai.i tried ur recipe.it was nice n my daughter liked it very much.thanks for ur healthy recipe.

ungal karuthu arumai