தோசை மாவு புல்லித்து விட்டால் ....

ஹலோ தோழிகளே ,
உங்க டிப்ஸ் தேவை , வந்து டிப்ஸ் கொடுங்க .. தோசை மாவு புல்லித்து விட்டால் என்ன செய்வது சொல்லுங்க ,,

அன்புடன்
ஹேமா மணிவண்ணன்

புளிச்ச மாவோடு புளிக்காத மாவை கலந்தால் ஒன்றும் தெரியாது அப்போதே உபயோக படுத்தலாம்....

ஹேமலதா, புளித்த மாவோடு வெங்காயம் கலந்து தோசை செய்தால் புளிப்பு சுவை இருக்காது.. தவிர மாவில் பச்சை மிளகாயை போட்டு வைத்தாலும் மாவு புளிக்காது. முயற்சித்து பாருங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வெங்காயம் கலந்து தோசை ஊத்தினாலும் வாயில வைக்க முடியலைப்பா..

உங்கள் டிப்ஸ்க்கு நன்றி , அன்னால் வெங்காயம் ,பச்சை மிளகாயை போட்டு செய்து பார்த்தேன் , இருந்தாலும் அந்த புல்லிப்பு இருக்க தான் செய்து ..

அன்புடன்
ஹேமா மணிவண்ணன்

ஹேமா புளித்தமாவோடு ரவை கலந்து தோசை ஊத்தினா புளிப்பு தெரியாது.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மாவு புளித்து விட்டால் அதனுடன் சிறிது ரவை ஊற வைத்து தோசை வார்த்தால் அதன் புளிப்பு தெரியாது. இல்லையென்றால் கொஞ்சம் மைதா மாவு,கோதுமை மாவு,ஊற வைத்த ரவை,புளித்த மாவுடன் சேர்த்து சிறிது நறுக்கிய வெங்காயம்,ப.மிளகாய்,கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து தோசை சுட்டு பாருங்கள்.

Expectation lead to Disappointment

புளித்த மாவில் நிறைய தண்ணீர் ஊற்றி அப்படியே சிறிது நேரம் வைத்து விட வேண்டும். நன்கு தெளிந்ததும் தெளீந்த நீரை கீழே ஊற்றி விட்டு தோசை வாருங்கள். புளிப்பு போய் விடும்.

ஒரு புத்தகத்தில் படித்தேன். புளித்த மாவுடன் ஒரு டம்ளர் பால் சேர்த்து கலக்கி வார்த்தால் புளிப்பு தெரியாது என்று.

அன்புடன்
ஜெமாமி

தோசை மாவுடன் முட்டையை கலந்தாலும் புளிப்பினை எடுக்கும். அல்லது பால் சேர்க்கலாம். அல்லது ஆப்ப சோடா சிறிது கலக்கலாம் ,அல்லதுகோதுமை மாவு ,கடலை மாவு., கேப்பை மாவு, ரவை, புதிய மாவு, போன்றவைகளைக் தேவைக்கேர்ப கலக்கலாம் அல்லது எல்லாமாவிலும் சிறிதுசிறிது கலக்கலாம்

உங்கள் அனைவரது குரிப்புகல்லுக்கும் நன்றிகள் .. நான் ட்ரை செய்து பார்கிறேன் .. THANKS VERY MUCH SWARNA MAM,RABIA MAM,MEENA MAM,JEYANTHI MAMI,SORRY FOR TYPING IN ENGLISH..

அன்புடன்
ஹேமா மணிவண்ணன்

அன்புத்தோழி ஹேமா,

தோசை மாவு புளித்துவிட்டால், ஒரு சின்ன கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உ.பருப்பு, கடலை பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் அதை தோசை மாவில் சேர்த்து தோசை வார்க்கவும்.

மாவு லேசாக புளித்திருந்தால், மாவில் சிறிது (1/4 ஸ்பூன்) சர்க்கரை சேர்க்கலாம். சர்க்கரை புளிப்பை எடுத்துவிடும்.

மாவு புளித்தால் நான் இந்த முறைகளில் தான் செய்வேன். ட்ரை செய்து பாருங்கள்.

நன்றி,
என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்!

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

மேலும் சில பதிவுகள்