தக்காளி தோசை (எளிய முறை)

தேதி: July 16, 2011

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.1 (7 votes)

 

இட்லி அரிசி - ஒரு கப்
தக்காளி - 3
சிவப்பு மிளகாய் - 5 அல்லது 6 (காரத்திக்கேற்ப)
தனியா - 2 மேஜைக் கரண்டி
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைகேற்ப


 

இட்லி அரிசியைக் கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் தனியா, சிவப்பு மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து அரைக்கவும்.
அடுத்ததாக ஊறிய இட்லி அரிசியையும் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து சிறிது நீர்க்க கரைத்து 10 நிமிடம் அப்படியே வைத்து விட்டு, பின்னர் தோசையாக ஊற்றி எடுக்கவும்.


இதற்கு அரிசி ஊறவைக்கும் வைக்கும் நேரம் மட்டுமே, புளிக்க வேண்டியதில்லை. இதில் தனியா சேர்ப்பதால் நறுமணம், சுவை தருவதோடு மட்டுமில்லாமல் எளிதில் சீரணமாகவும் உதவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சுபா.. தக்காளி தோசை செய்முறை மிகச் சுலபமாக இருந்தது.. குழந்தைகளுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்.. விரைவில் செய்துபார்த்துவிட்டு பின்னூட்டம் எழுதுகிறேன்..

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

sumaraga ullathu