கோஸ் கூட்டு

தேதி: July 18, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (7 votes)

 

கோஸ் - ஒரு கப்
கடலை பருப்பு - அரை கப்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - பாதி
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் துள் - ஒரு சிட்டிகை
அரைக்க:
தேங்காய் - 2 அல்லது 3 பத்தை
சோம்பு - அரை தேக்கரண்டி
தாளிக்க:
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - 2 அல்லது 3
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப


 

தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் சிறிதளவு எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் தாளித்து கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், அதனுடன் மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி குழைந்ததும் நறுக்கி வைத்துள்ள கோஸ் சேர்த்து, மிளகாய் தூள், தனியா தூள் சேர்க்கவும்.
அதனுடன் கடலைப்பருப்பு சேர்க்கவும். (விரும்பினால் கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளலாம்.)
தேவையான தண்ணீர் சேர்த்து, உப்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்க்கவும். (விரும்பினால் தேங்காய் விழுதை கடைசியிலும் சேர்க்கலாம்.)
குக்கரை மூடி போட்டு, 3 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும். உப்பு சரிப்பார்க்கவும்.
சுவையான கோஸ் கூட்டு தயார். இது சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல குறிப்பு வாழ்த்துக்கள் அன்பரசி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹர்சா நல்ல அருமையான குறிப்பு வாழ்த்துக்கள்

உங்க குறிப்பு நல்லா இருக்கு...அழக செய்து இருக்கிங்க..என் விருப்ப பட்டியல சேர்த்துட்டேன். செய்து பார்த்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள்....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

அருமையான குறிப்பு வாழ்த்துக்கள்... நானும் இதேபோலதான் செய்வேன் பா ஆனால் இஞ்சி பூண்டு விழுது சேர்த்ததில்லை.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஆமி,
எப்படி இருக்கீங்க?திரும்பவும் உங்க பதிவுகள் பார்க்க மகிழ்ச்சியா இருக்கு.பதிவுக்கு நன்றி.

ஃபாத்திமா அம்மா,
உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

சங்கீதா,
உங்க பதிவுக்கும்,குறிப்பை விருப்ப பட்டியலில் சேர்த்ததுக்கும் ரொம்ப நன்றிங்க.

ஸ்வர்ணா,
எங்க அம்மா எப்போதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து தான் கோஸ் கூட்டு செய்வாங்க.பதிவுக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.

நல்ல ஒரு குறிப்பு. உங்களுக்கு தெரியுமா? இதே குறிப்பை நானும் செய்யனும்னு நினைத்து விட்டுட்டேன்... சோம்பேறித்தனம் தான். வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நாங்களூம் கூட்டு இப்படி தான் செய்வோம்... ஆனா அதென்ன பட்டை லவங்கம் போட்டு தாளிக்குறது... புது ஸ்டைல். ட்ரை பண்ணிடுவோம் :) ஹர்ஷா சமையலை சமைக்காம விட முடியுமா??? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் இன்னைக்கு உங்க குறிப்பை சமைச்சுட்டேங்க..அருமையா இருக்கு :-) பட்டை , இலங்கம் சேர்த்ததுனால கூடுதல் சுவை...

கோஸ் கூட்டு நான் இதுவரை செய்தது இல்லை..செய்துட்டு சொல்றேன் வாழ்த்துக்கள் அன்பரசி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அன்பரசி,

மசாலா சேர்த்து கூட்டு!!!!புதுமையா இருக்குங்க..வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நாங்களும் இஞ்சி பூண்டு சேர்த்து தான் செய்வோம். இருந்தாலும் கச கசா மற்றும் பட்டை லவங்கம் போட்டு தாளிப்பது புதுசா இருக்கு. ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்றேன். வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரம்ஸ்,
நீங்க நினைக்கும் குறிப்புகள் எல்லாம் நான் அனுப்பிடுறேன்.எனக்காக கோஸ் கூட்டு செய்து சாப்பிடுங்க.சரியா?வாழ்த்துக்கு நன்றி.

வனிதா,
பட்டை,லவங்கம் வாசனை பிடிச்சதுனா சேருங்க.இன்னும் வாசனையா நல்லா இருக்கும்.என் சமையல்னா நீங்க கண்டிப்பா செய்துடுவீங்கனு எனக்கு தெரியும்.உங்க அன்புக்கு நன்றி,வனிதா.

காமேஸ்வரி,
கோஸ் கூட்டு செய்துட்டீங்களா?உங்களுக்கு பிடிச்சதுல ரொம்ப சந்தோஷம்.ரொம்ப நன்றிங்க.

குமாரி,
கண்டிப்பா செய்து பாருங்க.வாழ்த்துக்களுக்கு நன்றி,குமாரி.

கவிதா,
புதுமைல்லாம் இல்லைங்க.பட்டை,லவங்கம்,இஞ்சி பூண்டு சேர்த்து இருக்கேன்.அவ்வளவு தான்.உங்க பதிவுக்கு நன்றி.

லாவண்யா,
கசகசா நான் சேர்க்கல.(கைவசம் இல்லை.)சேர்க்கணும்னா,தேங்காய் கூட அரைச்சு சேருங்க.பட்டை,லவங்கம் போட்டா வாசனை சூப்பரா இருக்கும்.உங்க பதிவுக்கு நன்றி.

ஹர்ஷா, உங்களுடைய குறிப்பை பார்த்து செய்த கூட்டு மிகவும் நன்றாக இருந்தது. மூன்று முறை செய்துவிட்டேன். நன்றி. வாழ்த்துக்கள்.

சுபா,
உங்க பதிவை இப்போ தான் பார்க்கிறேன்.அதனால் தான் இவ்வளவு தாமதமான பதில் பதிவு.இந்த குறிப்பு உங்களுக்கு பிடிச்சதில் மகிழ்ச்சி.கூட்டு செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்து சந்தோஷப்படுத்திட்டீங்க.மிக்க நன்றி சுபா.

அன்பு, இன்று உங்களின் கோஸ் கூட்டு செய்தேன். அதில் சேர்க்கும் பொருள் ஏறக்குறைய நாங்கள் சேர்ப்பது போல இருந்தாலும், சமைக்கும் விதத்தில் மாற்றம் இருந்தது. இந்த முறைப்படி செய்தேன். பட்டை,கிராம்பு வாசத்தோடு மிகவும் வித்தியாசமாக இருந்தது. தக்காளி - எலுமிச்சை ரசத்தோடு அட்டகாசமான சுவையில்.. வாழ்த்துக்கள் அன்பு :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

My father is having Kidney Problem. He is have 2nd stage. Now he want diet food. So, Please i need the diet food tips.