மைசூர் மசாலாதோசை

தேதி: July 19, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (17 votes)

 

தோசை மாவு - 2 கப்
மசாலா செய்ய:
உருளைக்கிழங்கு - 2
பச்சை பட்டாணி - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு + உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்)
இஞ்சி - ஒரு அங்குல துண்டு
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லித்தழை - சிறிது
கறிவேப்பிலை, கடுகு, சீரகம், பெருங்காயம், எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கேற்ப
சட்னி செய்ய:
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
தேங்காய் - கால் மூடி


 

வாணலியில் எண்ணெய் இல்லாமல் தேங்காய் தவிர எல்லாவற்றையும் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும்.
தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து சட்னியாக அரைக்கவும். இந்த வகை தோசையில் உள்ள சட்னி மிகவும் காரமாக இருக்கும். நான் கொடுத்திருப்பது மிதமான காரம் தான். அதிகம் தேவைப்பட்டால் மேலும் மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.
மசாலா செய்ய உருளை, பட்டாணியை வேக வைத்து வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பருப்பு வகைகளை ஊற வைத்து அரைத்து வைக்கவும். மிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக அரிந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, பெருங்காயம், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் சேர்த்து சிறிதளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள பருப்பை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
உருளை, பட்டாணி, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் கிளறி அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லித்தழை தூவி கிளறி வைக்கவும்.
தோசைக்கல்லை சூடாக்கி ஒரு கரண்டி மாவெடுத்து மெல்லிய தோசையாக வார்க்கவும். தோசை ஓரளவு வெந்ததும் சட்னியை பரவலாக தோசை மேல் தடவி இரண்டு நிமிடம் விட்டு தோசையின் ஒரு பாதியில் மசாலாவை வைத்து மடிக்கவும்.
சுவையான மைசூர் மசாலா தோசை ரெடி. தேங்காய் சட்னி, சாம்பாருடன் பரிமாறலாம். அப்படியேயும் சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

தோசை அழகா இருக்கு...
சாப்பிடணும் போல இருக்கு.
சட்னி அரைச்சா சாம்பாரே வைக்க மாட்டேன், மசாலாவுமா?

நான் கொஞ்சம்(ரொம்பவே) சோம்பேறி. அதனால் ஒரு ரெண்டு தோசை போதும், பார்சல் பண்ணிடுங்க.

your recipe looks like hotel mysore masala dosa, so send three dosa for free home delivery.each step by step photos are very nice. keep it up. regards.g.gomathi.

சம சூப்பர் போட்டோஸ், சம சூப்பர் தோசை!!! யம்மி. ப்லேட் எனக்கு தானே!! ;) செய்து பார்க்கிறேன் லாவண்யா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூஸுஸுஸுஸுஸு
சொல்ல வார்த்தையே இல்ல, செமையா இருக்கு. அடடா இன்னைக்கே பண்ணி பாத்துடறேன், நாக்கு இப்ப இருந்தே ஊறுதே!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மசாலா தோசை சூப்பர்ங்க வாழ்த்துக்கள்...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்புள்ள லாவண்யா, எப்படி இருக்கீங்க? உங்க மைசூர் மசால் தோசை சூப்பர். பார்க்கவே ஆசையா இருக்கு. விருப்ப பட்டியலில் சேர்த்து விட்டேன். செய்து பார்த்துட்டு சொல்றேன்.

நன்றி!

எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்!

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

பாக்கவே அழகா இருக்கு!!!!

செய்து பார்க்கிறேன்

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சேம் பின்ச் தேன் மொழி நானும் ரொம்பவே சோம்பேறி தான்... ஆனா தோசை பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு.. :) விருப்பப்பட்டியலில் சேர்த்துட்டேன் .. செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் இடுகிறேன்... வித்தியாசமான குறிப்புக்கு நன்றி லாவண்யா..

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.

தெரேஸ்
இங்கே நாங்க மட்டும் என்ன...சோம்பேறி தான்....இப்படி வித்தியாசமா செய்தால் குழந்தைகள் சாபிடாதா என்ற நப்பாசையில் எல்லாம் செய்கிறேன்....இதனால் ஏன் தொப்பைக்கு தான் கொண்டாட்டம் :) நல்லாயிருக்கு என்று வேற சொல்லியிருக்கீங்க இரண்டு மட்டும் எப்படி பார்சல் பண்ண முடியும்...அதுவும் இல்லாமல் தோசையை சூடாக சாபிட்டால் தான் ருசி...நேரா வீட்டுக்கே கிளம்பி வந்துடுங்க....நன்றி.

கோமதி
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.....போங்க எனக்கு உங்க மேல ரொம்பவே கோபம்.....ப்ரீ டெலிவரி என்னங்க வீட்டுக்கு வாங்க டேபிள் சர்வீசே பண்ணிடலாம். வாழ்த்துக்களும் பாராட்டிற்கும் நன்றி.

வனி
பிளேட்டா வேண்டும்? இல்லை தோசையா? வீட்டுக்கு கிளம்பி வாங்க....இல்லைனா நான் இந்தியா வரும் வரை காத்திருங்கள். நன்றி.

சுகி
நாமெல்லாம் எப்படி.....கண்ணாலையே ருசியை சொல்ற ஆசாமியாச்சே....நீங்க சொன்ன சரியா தான் இருக்கும். செய்து பார்த்துட்டு கண்டிப்பாக எப்படியிருந்ததுன்னு வந்து சொல்லணும். நன்றி.

வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்வர்ணா.

அன்புள்ள ஆர்த்தி. நலம் நாடுவதும் அதுவே. விசாரிப்பிக்கு நன்றி. வாழ்த்துக்களுக்கு நன்றி. செய்து பார்த்துவிட்டு வந்து சொல்லுங்க.

ஆமினா எங்கே போயிட்டீங்க. உங்கள் குறிப்பில் ஒரு டவுட் கூட கேட்டிருந்தேன். வாழ்த்துக்கும் பாராட்டிற்கும் நன்றி.

சாந்தினி...வாங்க வாங்க... ரொம்ப நாளாச்சு இல்லை....உங்களின் பதிவை பார்ப்பதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்களுக்கும் பாராடிர்க்கும் நன்றி. செய்து பார்த்துட்டு கண்டிப்பாக வந்து சொல்லுங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா,

சூப்பர் போங்க!!
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

லாவண்யா,
உங்க மசாலா தோசை சாப்பிடக் கூப்பிடுது.விரைவில் எங்க வீட்டுலயும் உங்க மசாலா தோசை தான்.வாழ்த்துக்கள்.

கவிதா எங்கங்க போறது :) சும்மா விளையாட்டுக்கு கேட்டேன். வாழ்த்துக்கு நன்றி.

அன்பரசி வாழ்த்துக்கு நன்றி. கூப்பிட்டா உடனே கிளம்பி சாப்பிட வரது தானே? யோசிக்கவே கூடாது. செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நல்லா பொறுமையா செய்து இருக்கிங்க.வாசனை மூக்கை துளைக்குது. எனக்கு வேணும்.. ;( வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வித்தியாசமான செய்து குடுத்தா என் கணவருக்கு ரொம்ப பிடிக்கும் ..செய்து பார்கிறேன். நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் வாழ்த்துக்கள் லாவண்யா

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

தோசையம்மா தோசை
லாவண்யா சுட்ட தோசை
பார்க்க பார்க்க ஆசை

ன்னு பாடத்தோணுது....ரொம்ப டேஸ்டா இருக்கும்னு பார்த்தாலே தெரியுது
இப்படியெல்லாம் யாரும் சுட்டு கொடுத்தா டயட்டாவாது ஒண்ணாவது ஒரு கட்டு கட்டலாம்..:-
முகப்புல படங்கள் இன்னிக்குதான் வருது இப்பதான் பார்க்கிறேன் உங்க ரெசிப்பிய ..நல்லா யிருக்கு ரெசிப்பி வாழ்த்துக்கள் லாவண்யா

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இது எப்ப லாவண்யா பாக்கவே இல்லை சூப்பரா இருக்கும் போல சனிகிழமை காலையில் காண்டிப்பா சுட்டுருவேன் சூப்பாரான குறிப்பு நண்றி லாவண்யா

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

ரம்மி எங்கே கிளம்பி வந்துட்டீங்க ன்னு கதவை திறந்து பார்த்து ஏமாந்து போயிட்டேன்.....உடனே கிளம்பி வாங்க...சுட சுட சுட்டு தரேன். வாழ்த்துக்களுக்கு நன்றி.

என்னவருக்கும் தோசையில் எத்தனை வித்தியாசமாக செய்தாலும் பிடிக்கும். செய்து பார்த்து விட்டு வந்து சொல்லுங்க. கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும் குமாரி. வாழ்த்துக்களுக்கு நன்றி.

இளவரசி பார்க்க மட்டும் தான் ஆசையா.....செய்து சாப்பிட இல்லையா :( இங்கே மட்டும் என்ன வாழுதாம்....டயட் டயட் என்று சொல்லி தான் புது புதுசா ட்ரை பண்றேன் :)) எனக்கும் நீங்கள் சொன்ன அன்னைக்கு வரவே இல்லை. வாழ்த்துக்களுக்கு நன்றி.

இது இப்போ தான் (அறுசுவையில் வருது....முன்னமே வீட்டில் செய்தாகி விட்டது)....போங்க பல்கிஸ் நீங்க ரொம்ப மோசம்.....உங்க பேச்சி டூ....பார்க்கவே இல்லை ன்னு என்னை ரொம்பவே வருத்தப்பட வெச்சிட்டீங்க....இப்போ வந்து செய்து பார்க்கிறேன் ன்னு பதிவை போட்டு என்னை சந்தோஷ படுத்துட்டீங்க....நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

விருப்ப பட்டியல் சேக்குரதுன்னு சொல்ராங்கலே அது எப்படி சேக்குரது

அது தெரிஞ்சா முதலில் சேக்குறச்து லாவண்யா மைசூர்தோசைதான்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

என்னங்க சொல்றீங்க "விருப்ப பட்டியலில்" எப்படி சேர்க்கணும்னு உங்களுக்கு தெரியாதா....சும்மா தானே விளையாடுறீங்க....நீங்க தான் வந்த கொஞ்ச நாளிலே அறுசுவையில் ஆதி முதல் அந்தம் வரையிலும் எல்லாமே உங்களுக்கு அத்துபடி. நீங்க அருசுவையையே கலக்குறீங்க உங்களுக்கு போய் தெரியாதுன்ன....சும்மா விளையாட்டு தானே......சரி கேட்டுட்டீங்க... சொல்றேன்.....எந்த ஒரு ரெசிபியை திறந்தாலும் அந்த செய்முறைக்கு கீழே "கருத்து தெரிவிக்க", "விருப்ப பட்டியலில் சேர்க்க" அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்" என்று இருக்கும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

குறிப்பு பிடித்திருக்கிறது. அழகாக தோசைக்கல்லில் ஃபுல்லாவே வார்த்து இருக்கிறீங்க லாவண்யா. நானும் அடையாளம் செய்து வைக்கிறேன். எப்போ முடியுமோ அப்போ செய்து வந்து சொல்கிறேன்.

‍- இமா க்றிஸ்

ரெம்ப நண்றி இமா உண்மையா எனக்கு தெரியாது லாவண்யா
கற்றது கைய்யளவு கற்க்காதது கடல் அளவு
சின்னவனுக்கு சாப்பாடு குடுத்துட்டு சேத்துருரேன் திருப்பவும் நன்றி இமா

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

மைசூர் மசால் தோசை என் விருப்பட்டியலில் சேத்துட்டேன் லாவண்யா
எனக்கு ரெம்ப ரெம்ப புடுச்ச இமாவுக்கும் என் நன்றி

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

இமா
உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி. முடியும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க. உங்களுக்கு குறிப்பு பிடித்ததில் சந்தோஷம். வாழ்த்துக்கு நன்றி.

பல்கிஸ்
எனக்கு ஒன்றுமே புரியலை....நான் தானே உங்களுக்கு எப்படி என்று சொன்னேன்....இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம் :((

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இல்லைங்க லாவண்யா நீங்க சொன்னது எப்படின்டு யோசிக்கயிலையே இமா விருப்ப பட்டியலை பத்தி ரெம்ப விளக்கமா அனுப்பி இருந்தாங்க அதுக்கு பிறகுதான் எனக்கு புரிந்தது

லாவண்யா இன்று வரை பொருக்க முடியல அதனால் இரவே மைசூர்மசாலைதோசை சுட்டு சாப்புட்டாச்சு நான் பொட்டு கடலை சட்டினி வச்சுக்கிட்டேன் மசால்தோசை சூப்பரா இருந்துச்சு
என் பிள்ளேகள் கேட்ட கேள்வி ;;; அம்மா இது அருசுவையாம்மா என்று
நல்ல ஒரு குரிப்பை தந்தமைக்கு நன்றி லாவண்யா;;;= நானும் என் குடும்பத்தாரும்................

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

உங்கள் குறிப்பு சூப்பர். நேற்று காலை உணவு உங்கள் தோசை தான். சூப்பரா இருந்துச்சு. வாழ்த்துக்கள்.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

யு மேட் மை டே பல்கிஸ்.....உங்களின் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.

சங்கரி செய்து பார்த்து மறக்காமல் வந்து பின்னூட்டம் தந்தற்கு மிக்க நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா இன்னைக்கு காலைல உங்க மசாலா தோசை செய்தேன் சூப்பர். இந்த மசாலா பூரிக்கு கூட சைட்டிஷா வைச்சுக்கலாம் போல. ரொம்ப நல்லா இருந்துச்சு.

உங்க மசாலா தோசை செய்துவிட்டேன். ரொம்ப நல்லா இருந்தது. எங்க வீட்டில் எல்லோரும் ரொம்ப ரசித்து சாபிட்டாங்க.