ஈரல் வறுவல்

தேதி: June 11, 2006

பரிமாறும் அளவு: ஐந்து நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

ஆட்டு ஈரல் - அரை கிலோ
வெங்காயம் - இரண்டு
ப. மிளகாய் - இரண்டு
மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் - ஒரு டீ ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
வர மிளகாய் - மூன்று
இஞ்சி & பூண்டு விழுது - ஒரு டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணை - முன்று டேபிள் ஸ்பூன்
பட்டை, இலை - தாளிக்க
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்


 

முதலில் ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி இருநூறு மி.லி தண்ணீர் விட்டு முக்கால் வேக்காடு வேக வைக்கவும். தண்ணீர் முழுவதும் சுண்டி விடும். அப்படியே சிறிது தண்ணீர் இருந்தாலும் பரவாயில்லை.கொட்ட வேண்டாம்.
மிளக, சீரகம்,சோம்பு,வர மிளகாய் நான்கையும் பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் வைக்கவும்.
வெங்காயத்தை நீள நீளமாக வெட்டி வைக்கவும். ப. மிளகாயை சிறிதாக நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பட்டை, இலை தாளிக்கவும்.
வாசனை வந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
சிவந்ததும் ப. மிளகாய், கறிவேப்பிலை போடவும்.
இரண்டு நிமிடம் கழித்து இஞ்சி & பூண்டு விழுது, ம.பொடி, ஒரு டீ ஸ்பூன் உப்பு மூன்றையும் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் ஈரல் கலவையைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்கவும்.
அடிக்கடி திறந்து கிளறி விடவும்.
தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்