பெங்காலி ஷர்ஷூ பிஸ்

தேதி: July 20, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

 

மீன் - 10 துண்டுகள் (முள் இல்லாத சதை பகுதி)
கடலைமாவு- 2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்
கடுகு பவுடர்- 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது- 1/2 ஸ்பூன்
எண்ணெய்- தேவைக்கு ஏற்ப
உப்பு- தேவைக்கு
எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்


 

கடலைமாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து விழுதாக கலக்கவும்.

அதில் மீன் துண்டுகளை சேர்த்து 1/2 மணி நேரம் ஊற விடவும்

பின் எண்ணெயில் பொரித்து எடுக்கவும் (டீப் ப்ரை)

வாணலியில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு பவுடர், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.

பின் உப்பு , பச்சை மிளகாய் விழுது சேர்த்து 1/2 டம்ளர் நீர் விடவும்.

நன்கு கொதி வந்ததும் (செமி கிரேவியானதும்) பொரித்த மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் உடையாமல் கிளறி பின் பரிமாறவும்.


சாதாரணமான மீன்களை இம்முறையில் உபயோகிக்கலாம். முள் நீக்கி செய்தால் சாப்பிட சிரமம் இல்லாமலும், குழந்தைகளுக்கு கொடுக்க எளிதாகவும் இருக்கும். தாளிக்கும் பொழுது மிதமான தீயில் செய்யவும்

மேலும் சில குறிப்புகள்


Comments

சூப்பரா இருக்கு டிஷ். பேர்... எந்த நாடு/ ஊர்???

‍- இமா க்றிஸ்

அடடா இப்பதான் மீன் சமச்சுட்டு வந்து உட்காருரேன் சற்று முன்பு பாத்திருந்தால் இம்முறையில் செய்துபார்திருக்கலாம் சரி மர்ற்றோரு முறை பாப்போம் குறிப்பு நல்லாருக்கும் போல வித்தியாசமா இருக்கு

அடுத்த முறை செஞ்சு எனக்கு அனுப்பி வச்சுடுங்க ;) மிக்க நன்றி பஸரியா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கல்கத்தா, டாக்கா சைட் நிறையா செய்வாங்க இமா. அக்கா சொல்லி கொடுத்த குறிப்பு. அவ கல்கத்தால இருக்கா ;)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா