சாம்பார் வெங்காயம் கறி

தேதி: June 12, 2006

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சாம்பார் வெங்காயம் - 12 - 15
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
தனியா பொடி - 1 டீஸ்பூன்
சோம்பு பொடி - 1 டீஸ்பூன்
மாங்காய் பொடி - 3/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 

எல்லாப் பொடிகளையும், உப்போடு சேர்த்து கலக்கவும்.
வெங்காயத்தை பாதியாக அரிந்து, இந்த மசாலாக் கலவையை அதில் திணிக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை அதில் சேர்த்து சிறிய தணலில் 7 - 8 நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கிய பின் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சூடாக சப்பாத்தியுடன் பரிமாறவும்


மேலும் சில குறிப்புகள்


Comments

எப்படி இது சாப்பிட முடியும் தனித்தனியா இருக்காதா, வேற எதுவும் சேர்க்க வேண்டாமா மேடம். இது இப்படி தான் சாப்பிட வேண்டுமா வித்தியாசமா இருக்கே, ப்ளீஸ் கொஞ்சம் பதில் சொல்லுங்களேன்.இது எந்த ஊர் சாப்பாடு மேடம்.