தாளிச்ச சாதம்

தேதி: July 20, 2011

பரிமாறும் அளவு: 2 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

சாதம்- 2 கப்
தக்காளி- 3
சீரகம்,கடுகு,உளுந்து,கடலைபருப்பு- 2 ஸ்பூன்
பச்சை மிளகாய்- 3
சின்ன வெங்காயம்-10
வர மிளகாய்-3
உப்பு-தேவைக்கு
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி- சிறிதளவு
எண்ணெய்- 2 மேசை கரண்டி


 

தக்காளியை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

எண்ணெயில் கடுகு,உளுந்து,சீரகம்,கடலைபருப்பு சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் பச்சை மிளகாய்,வரமிளகாய்,கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்

பொடியாய் அரிந்த சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் தக்காளி விழுதையும் மஞ்சள் தூள் உப்பும் சேர்த்து கிளறவும்.

தக்காளி விழுதின் பச்சை வாசனை போனதும் சாதத்தை கொட்டி கிளறவும்


மீதமான சாதத்தில் இவ்வாறு செய்து புது உணவாக கொடுக்கலாம். கடலைவடை, கெட்டி சட்னியுடன் அருமையான பொருத்தமாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்