உருளைக்கிழங்கு கொண்டைக்கடலை மசாலா

தேதி: June 12, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 2
கொண்டைக்கடலை - ஒரு கப்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
நீளமாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி இலை - கால் கப்
வெல்லம் - சிறிய துண்டு
நெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
அரைத்துக் கொள்ளவும்:
தேங்காய் - கால் கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பொட்டுக்கடலை - சிறிதளவு
பூண்டு - 7 பல்
பட்டை - சிறிய துண்டு
சோம்பு - அரை தேக்கரண்டி
ஏலக்காய் - ஒன்று
கிராம்பு - 2


 

கொண்டைக்கடலையை கழுவி 7 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
பின் சதுரமாக நறுக்கிய உருளைக்கிழங்கு, ஊறவைத்த கடலை சேர்த்து குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
வாணலியில் தேவையான அளவு எண்ணைய் விட்டு சூடானதும் நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளாகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் அரைத்த விழுது, மிளகாய் தூள், தனியாத்தூள் போட்டு கொதிக்கவிடவும்.
நன்கு வதங்கியவுடன் வேகவைத்த கடலை, உருளைக்கிழங்கு, உப்பு, கரம் மசாலாத்தூள், சிறிய துண்டு வெல்லம், தண்ணீர் விடவும்.
மசாலா கெட்டியானவுடன் சிறிது நெய், கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்