பாலக் சப்பாத்தி

தேதி: July 22, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (5 votes)

 

பாலக்கீரை - 2 கைப்பிடி
கோதுமை மாவு - 2 கப்
ரவை - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் அல்லது பட்டர் - தேவைக்கு


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். கீரையை கழுவிக் வைக்கவும்.
கீரையை மிக்ஸியில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கோதுமை மாவில் உப்பு, ரவை சேர்த்து நன்கு கலந்து, அரைத்த கீரையை ஊற்றி சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்துக் கொள்ளவும்.
பிசைந்த மாவில் சிறிது எண்ணெய் தடவி அரைமணி நேரம் வைக்கவும்.
பின் மாவினை நீளவாக்கில் சமமாக உருட்டி, ஒரே அளவாக வெட்டிக் கொள்ளவும்.
வெட்டிய துண்டுகளை இருபுறமும் அழுத்தி வைக்கவும். இதனால் சப்பாத்தி ஒரே மாதிரியாக, வட்டமாக வடிவம் மாறாமல் வரும். தனியாக உருண்டை பிடித்துக் கொண்டிருக்க தேவையில்லை.
சப்பாத்தி மாவை ஒரே சீராக, மேலும் நன்கு உப்பி வருவதற்கு சற்று திக்காக திரட்டிக் கொள்ளவும்.
சப்பாத்தி கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும். இருபுறமும் பட்டர் தடவினால் சுவைக்கூடும்.
சத்தான, கலர்ஃபுல்லான, சுவையான பாலக் சப்பாத்தி ரெடி. பார்ட்டிகளுக்கு செய்ய புதுவிதமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என் மகன் கீரைல்லாம் தொடவே மாட்டான் அவ்னுக்கு செய்துகொடுக்க நல்ல மெதட் நன்றி

ரொம்ப அழகா தெளிவா படங்களோட விளக்கி அசத்திடிங்க வாழ்த்துக்கள் இந்த குறிப்ப கண்டிப்பா நா ட்ரை பண்ணிட்டு வந்து சொல்லுறேன் by Elaya.G

ரம்ஸ்,
பசுமையான,சத்தான சப்பாத்திகள் அழகா இருக்கு.சப்பாத்தியை வட்டமாக தேய்க்க,நீங்க கொடுத்திருக்கும் டிப்ஸ் சூப்பர்.இதுவும் பார்ட்டிக்காக சமைத்ததா? நல்ல குறிப்பு.வாழ்த்துக்கள்.

குறிப்பு.. ஐடியா பிடிச்சு இருக்கு. இந்த ஐடியாவை வச்சு அடுத்த பாட்ரிக்ஸ் டேக்கு ஏதாவது செய்யலாம். ;) பிடித்த குறிப்பு லிஸ்ட்டில் சேர்த்திருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

நல்ல சத்தான மற்றும் எளிதான குறிப்பு.

ஜெயசுதா
"விடா முயற்சிக்கு சொந்தமானது வெற்றி"

பாலக் சப்பாத்தி பார்க்கவே கலக்குது. சத்தானதும் கூட. வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ரவை சேர்த்து செய்ததில்லை. செய்து பார்க்கிறேன்

குறிப்புக்கு வாழ்த்துக்கள் ரம்யா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பச்சை நிறமே, பச்சை நிறமே......

இப்படி பச்சை பசேல் என்று பாலக் சப்பாத்தி பசுமையா இருக்கு. (பச்சை என்பதால் ப்ளேட், பௌல் என்று எல்லாமே பச்சை மயமாக இருக்கு...கிரீன் தீமா ??? ) நான் சிறிது வேகவைத்து தான் சேர்த்திருக்கிறேன்....இந்த முறையிலும் செய்து பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள்

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரம்யா,

ஆரோக்கியம்+அழகு..
வாழ்த்துக்கள் !!!

என்றும் அன்புடன்,
கவிதா

சம கலர், சம சூப்பரான ஹெல்தியான குறிப்பு. எனக்கு இது போல் வெரைஇடி ரொம்ப பிடிக்கும். இதுக்கு முன்னாடி எப்பவோ சிரியாவில் இருந்தபோது இது போல் செய்திருக்கேன்... இங்க இதுவரை செய்யல... உங்க முறையும் ரொம்ப அழகு... அவசியம் செய்துட்டு வரேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கண்ணுக்கு குளுர்ச்சியா இப்படி ஒரு ரெசிபியா, கலக்குங்க.
பாத்தாலே சாப்பிடனும் போல இருக்கு,, பாலக் பதிலா வேற கீரை சேர்க்கலாமா ?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரம்ஸ் பாலக் சப்பாத்தி செம சூப்பர்..... கண்டிப்பா செய்து பக்கணும்.. வாழ்த்துக்கள்:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நல்ல சுவையான சத்தான குறிப்பு தந்து இருக்கீங்க குறிப்புக்கு நன்றி. என் பையனுக்கும் கீரையே பிடிக்காது இந்த முறையில் ட்ரை செய்து பார்க்கிறேன்.

அன்புடன் கதீஜா.

ரம்ஸ், அசத்திட்டீங்க, நானும் கடையில் பாலக் பார்க்கும் போது இதை வாங்கி ஏதாவது பண்ணனும்னு யோசிப்பேன், இப்ப ஒரு டிஷ் கிடைத்திருக்கிறது. கண்டிப்பா ட்ரை பண்றேன், எப்ப’னு தான் தெரியலை:( வாழ்த்துக்கள் ரம்ஸ்

அன்புடன்
பவித்ரா

ரம்யா... ரொம்ப நல்லா இருக்கு... நானும் இப்படி பண்ணுவேன் ஆனா ரவை சேர்த்து பண்ணதில்லை... இதுல ரவை எதுக்கு சேர்க்கணும்...? அழகா ப்ரசண்ட் பண்ணிருக்க... வாழ்த்துக்கள்...

வித்யா பிரவீன்குமார்... :)

ஹாய் ரம்யா பாலக் சப்பாத்தி நான் கூட இப்படி தான் செய்வேன்.உங்க செய்முறை படம் சூப்பர் சாப்பிட தூண்டும் விதமாக உள்ளது.டேஸ்டி அண்ட் ஹெல்தி பாலக் சப்பாத்தி.

மிக மிக அருமை...ஒண்ணுபோல வடிவமா திரட்ட ஐடியா சூப்பர்
பச்சைநிறத்தில இதுவரை டயட் தோசை மட்டும்தான் செஞ்சுருக்கேன்..
இது செஞ்சதில்லை..

ரொம்ப அருமையான படங்கள்......

தொடர்ந்து அசத்துங்க...பாராட்டுக்கள்..

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நன்றி

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

ரபியா
செய்து கொடுங்க கண்டிப்பா.. நன்றி ;) வித்தியாசம் ஒன்னுமே தெரியாது. எப்பவும் சாப்பிடற சப்பாத்தி போல தான் இருக்கும்.. ஆனா ஸ்பெஷல் கலர் தான் அதனால் குழந்தைகள் சாப்பிடுவாங்க.

இளையா
செய்து பார்த்துட்டு மறக்காம பதிவும் போடுங்க .நன்றி ;)

ஹர்ஷு
இந்த சப்பாத்தி பார்ட்டிக்காக செய்தது இல்லை டா.. ஆனா ஒரு முறை செய்தேன். ரொம்ப நன்றி ;)

இமா
ரொம்ப நன்றி இமா.. பட்டியலில் சேர்த்ததுக்கு :)

ஜெயா
மிக்க நன்றி ;)

மஞ்சு
வாழ்த்துக்கு நன்றி :)..ரொம்ப நாளா கானலை ..?

ஆமி
வாழ்த்துக்கு நன்றி டா ;)

லாவி
ஆமா.. க்ரேக்ட்.. நீங்க சொன்னதும் தான் தெரியுது.. சோ க்ரீன் தீம்னு மெயிண்டெய்ன் செய்துக்கறேன். நன்றி ;)

கவி
ரொம்ப நன்றி டா ;)

வனி
ரொம்ப நன்றி வனி.. எனக்கும் கலர் ரொம்ப பிடித்துருந்தது :)
கண்டிப்பா செய்து பாருங்க. வித்தியாசம் ஒன்னுமே தெரியாது. எப்பவும் சாப்பிடற சப்பாத்தி போல தான் இருக்கும்.. ஆனா ஸ்பெஷல் கலர் தான் :)

சுகி
வேற கீரை கண்டிப்பா சேர்க்கலாம் டா. செய்து பார்த்துட்டு சொல்லுங்க. பாலக் பொதுவா சப்பாத்தியோட சுவையை மாற்றாமல் நல்ல கலர் கொடுக்கும் :) நன்றி

ஸ்வரு
செய்துட்டு சொல்லுங்க. ;) நன்றி

கதீஜா
கண்டிப்பா செய்து கொடுங்க.கலர்க்காகவாவது சாப்பிடுவாங்க. நன்றி ;)

பவி
செய்து பாருங்க பவி.. முடி நல்லா வளரும் ;) ஹிஹிஹி இப்ப சீக்கிரம் செய்வீங்கனு தெரியும் ;) நன்றி

விது
ரொம்ப நாளா கானம்..? எப்படி இருக்கிங்க.. கீரை சேர்த்து தேய்க்கும் போது ஒரு மாதிரி பசக்குனு ஒட்டி வர இருக்கமாதிரி இருக்கும்.அதனால் ரவை. இல்லாமலும் செய்யலாம். நன்றி

சுந்தரி
ரொம்ப நன்றி டா.. பாப்பாக்கு செய்து கொடுங்க. வாழ்த்துக்கு நன்றி ;)

இளா
ரொம்ப நன்றி.. ஊருக்கு போகறீங்களா? குட் எஞ்சாய்
பண்ணுங்க.. வாழ்த்துக்கு ரொம்ப நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கலர்புல் சப்பாத்தி நன்றாக உள்ளது ரம்யா செய்து பார்க்கிறேன்...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் ரம்யா! எப்படி இருக்கிங்க? உங்க பாலக் சப்பாத்தி நேற்று செய்தேன். ரொம்ப சூப்பர் . என் ஹஸ்பண்ட் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்ல சொன்னார். இப்பொ தான் கொஞ்சம் கொஞ்சமா சமையல் கத்து கிட்டு வரேன். ரொம்ப நன்றி.

தக்ஷினா

ரொம்ப நன்றி டா ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அப்படியா ரொம்ப நன்றீ ;)
இப்ப தான் கத்துகிட்டு வறீங்களா? நானும் கத்துக்குட்டி தான் அடந்த ஆறு மாதங்களா தான் சமைக்கறேன் ;) அறுசுவை இருக்க கவலையில்லை.. அதெல்லாம் காலம் அருமையா சமைக்க வெச்சிடும் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

6 மாதமா தான் சமைக்கிறீங்களா? சூப்பர். யாரும் சொன்னால் நம்ப மாட்டாங்க. அவ்ளோ நல்லா இருக்கு. நிறைய குறிப்பு எடுத்து வச்சிருக்கேன். சமைத்துப் பார்த்து பதில் போடுகிறேன்.
தக்ஷிணா

ஹாய் ரம்யா உங்க பாலக் சப்பாத்தி செய்தேன் நன்றாக இருந்தது