கணவா கிரேவி

தேதி: July 23, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (10 votes)

 

கணவா - அரை கிலோ
தக்காளி - ஒன்று
வெங்காயம் - ஒன்று
மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி
மிளகாய்பொடி - இரண்டு தேக்கரண்டி
கரம் மசாலா - 1 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - மூன்று
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
மல்லி தழை - சிறிது
தாளிக்க - கறிவேப்பிலை, பட்டை, எண்ணெய்
உப்பு - தேவையானளவு


 

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். கணவாவை நன்கு சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் பொடி சிறிது சேர்த்து பிசைந்து கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு போட்டு நன்கு வதக்கவும்.
பச்சை வாசம் போகும் வரை வதக்கி மஞ்சள் பொடி, மிளகாய் பொடி சேர்த்து தக்காளி சேர்க்கவும்..
தக்காளி குழைய வதங்கியதும், அதில் கணவாவை போட்டு கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து கிளறி பின் உப்பு, மல்லி தழை சேர்த்து அரை டம்ளர் நீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வைக்கவும்.
பின்னர் திறந்து நீர் இருந்தால் அதை அடுப்பில் வைத்து நீர் வற்றும் வரை கிளறி இறக்கவும்.
சுவையான கணவாய் கிரேவி தயார். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். காரம் அதிகம் வேண்டுமென்றால் மிளகாய் பொடி கூடுதலாக சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கணவான்னா மீனா?சரியா?
இங்க கிடைக்காதுன்னு நினைக்கறேன், இருந்தாலும் சிக்கன் வெச்சு செஞ்சுபாக்கறேன். விளக்கங்கள அருமை :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இதை நாங்கள் கடமா என்று சொல்வோம். அம்மா செய்வார்கள் சூப்பரா இருக்கும். அருமையான குறிப்பு வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கணவா கிரேவியா?!!!கணவாவ ஃப்ரை மட்டும்தான் செய்வேன்,ஊரில் கணவா குழம்பு செய்வாங்க,மணம் தூவி,பொறிஅரிசி சேர்த்து செய்வாங்க,நல்லா இருக்கும்,கணவாவை இறால் குழம்பு செய்வது போல் புளி சேர்த்து செய்தால் நல்லா இருக்கும்,அடுத்த முறை உங்க கிரேவிதான் செய்யப்போகிறேன்.

Eat healthy

ருக்சானா கணவாமீனை குக்கரில தான் வேகவைக்கனுமா சட்டியில் வேக எவ்வளவு நேரமாகும் . அது ஏன் ரப்பர் மாதிரி வருது .நான் ஒருதடவை வைத்தேன் ரப்பர் மாதிரி வந்தது. ஆனால் முன்பொருமுறை நண்பர் வீட்டில் இராலுடன் சேர்த்து சமைத்திருந்தார்கள். ரொம்ப அருமையாக இருந்தது.ஆனால் இரால் சீக்கிரம் வெந்துடுமே. ரப்பர் போல வரக்காரணம் என்ன.இது பாக்கவே ரொம்ப நல்லாருக்கு செய்து பாக்கிரேன் . ரசியா கணவா ப்ரை எப்படி செய்வீங்க.

அன்புள்ள ருக்சனா, உங்க குறிப்பு பார்க்க நல்லா இருக்கு. செய்யனும்னு ஆசையா இருக்கு. ஆனா கணவா என்றால் என்ன மீன்? ஆங்கிலத்தில் என்ன பெயர் என்று தெரியுமா? இங்கே கிடைக்குதான்னு தேடி பார்க்குறேன். நன்றி!

எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்!

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

சசி ஆக்டோபஸ் மாதிரி சின்னமா இருக்கும்பா மை கணவா கூந்தல் கணவா என்று இரண்டு வகை இருக்கும் உள்லே இருக்குர பார்ட் எல்லாம் எடுத்துட்டு வெரும் சதைமட்டும் எடுத்து சமைப்பாங்க

அன்புள்ள பசரியா, அதற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர் என்று தெரியுமா? நான் வெஸ்டர்ன் ஆஃபிரிக்காவில் இருக்கிறேன். இங்கே கிடைக்குதான்னு தெரியல. அதான் கேட்டேன். நன்றி!

எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்!

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

http://thabaal.blogspot.com/2007/09/blog-post_17.html
இந்த லின்க் பாருங்க ஓரத்தில் வெள்ளையாக சதை போல இருக்குள்ள அதுதான்
http://en.wikipedia.org/wiki/Squid

அன்புள்ள பசரியா, நன்றி. அந்த லிங்க்கை பார்த்தேன். அதற்கு ஆங்கிலத்தில் ஸ்க்விட்(squid) (அ) கட்டல்ஃபிஷ்(cuttle fish) என்று போட்டிருந்த்தது. நான் அதை சூப்பர் மார்கெட்டில் பார்த்திருக்கிறேன். அடுத்த தடவை வாங்கி செய்து பார்க்கிறேன். குறிப்பை கொடுத்த ருக்சனா அவர்களுக்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்!

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

நம்ம ஊரில் கணவாவை குக்கரில்தான் வேக வைப்போம்,காரணம் அது வேக கொஞ்ச நேரம் ஆகும்,குக்கரில் போட்டால் தான் ரப்பர் போல் ஆகாது,ஆனால்,ப்ரான்ஸில் நான் வாங்கும் கணவாக்களை வெறும் சட்டியில்தான் போட்டு வேக வைப்பேன்,இது நல்லா வெந்துவிடுகிறது,ஆனால் கொஞ்ச நேரம் எடுக்கும்,
கணவா ஃப்ரை இறால் ஃப்ரை செய்வது போலத்தான்,மிளகாய்தூள்,மஞ்சள் தூள்,உப்பு, இதனுடன் கொஞ்சம் தக்காளி பேஸ்ட் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவைத்தப்பின் இறுதியாக எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் அடுப்பில் வைத்து பிரட்டி எடுப்பேன்,ரொம்ப நல்லா இருக்கும்,இது சாம்பார் வைக்கும் போது செய்தால் ரொம்ப சூப்பரா இருக்கும்.

Eat healthy

சலாம் ருக்சானா என்னாச்சு உனக்கு ஆளையே காணோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்டா