urgent please help

hi friends,
ENAKU unga advice thevai. nan ipa conceive ah irukaen. ipa enoda weight 77kg. ana oru 2 weeks munadi weight check panum pothu 75 la irunthaen. udaney 2kg yeruma. online la yarachu iruntha please answer me pa. nan nalaiku doctor kita poraen. manasu romba sagatma iruku. please pa answer....

மஹா,
இர்ண்டு வாரத்தில் அதிகமாக சான்ஸ் இருக்கு நீங்க எதுக்கும் டாக்ட்ர்கிட்ட கேளுங்க... கீழே தமிழ் எழுத்துத்வி பயன்படுத்தி கேளுங்க்ள்...நிறைய பேர் பதில் சொல்வாங்க............

நீங்க இப்போ எத்தனை மாதம், CONCEIVE ஆ இருக்கும் போது வெயிட் ஏறுவது சகஜம் தான், அத பத்தி நீங்க கவலை படாதீங்க, வெயிட் ஏறுவதால் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லது. வெயிட் ஏறினா குழந்தை GROWTH நல்லா இருக்குன்னு அர்த்தம்.

ராஜி

நான் கர்ப்பம் ஆகி 47நாள் முடிந்து விட்டது.

madhu

நன்றி ப்ரியா. enaku tamil ah type pana therila pa. Doctor kita ponanen.onum problem ilanu solitanga. apram nan 77kg ma. athuku nan entha mathiri foods sapdalam? nan conceive agi 47 days complete agi iruku. ipa irunthu walking polama. Please advice pa.

Thanku my friend

madhu

நன்றி ப்ரியா. enaku tamil ah type pana therila pa. Doctor kita ponanen.onum problem ilanu solitanga. apram nan 77kg ma. athuku nan entha mathiri foods sapdalam? nan conceive agi 47 days complete agi iruku. ipa irunthu walking polama. Please advice pa.

Thanku my friend

madhu

தாயாக போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள். சுகப்ப்ரசவமாக அமைய வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்.

கர்ப்பம் தரித்ததிலிருந்து தாயக போகும் வரை எடை கூடிக் கொண்டே தான் இருக்கும். நீங்கள் உங்களின் உயரம் என்னவென்று சொல்லவே இல்லை. அதனால் உங்களுக்கு இந்த எடை அதிகமா இல்லை கம்மியா என்று தெரியவில்லை. இருந்தாலும் இப்பொழுது எடை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. எதுவாக இருந்தாலும் குழந்தை பறந்த ஆறு மாதத்திற்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

அதற்காக நம் வீட்டு பெரியவர்கள் சொல்லுவார்கள்....இரண்டு உசுருக்காக சாப்பிட வேண்டும் என்று....அப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது. எப்பொழுதும் போலவே சாப்பிடனும். இருந்தாலும் தினமும் கீரை, காய்கறிகள், பழங்கள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். பயிர் வகைகளை முளைக் கட்டி சாப்பிட்டால் ரொம்ப நல்லது. ஒரு நாளைக்கு ஆறு முதல் பத்து க்ளாஸ் தண்ணீர் அருந்த வேண்டும். அதிகம் நார் சத்துள்ள காய் பழம் மற்றும் கீரை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வராது.

நீங்கள் ஏற்க்கனவே செய்யும் வேலையில் எந்த மாட்ட்ரமும் செய்ய வேண்டாம். புதிதாக எதையும் ட்ரை பண்ணாதீங்க. நடைப்பயிற்சி என்றால் வேர்க்க விருவிருக்க நடக்க வேண்டாம். தாராளமாக நடக்கலாம். இவையெல்லாம் செய்வதற்கு முன் உங்களின் மகபேறு மருத்துவரையும் ஒரு முறை கலந்தாலோசித்து விட்டு செய்யுங்கள். எங்களால் இங்கே பொதுவாக தான் பதில் கூற முடியும். அதனால் மருத்துவரிடம் கண்டிப்பாக கேட்க வேண்டும். அவருக்கு தான் உங்களின் உடல் நிலை பற்றிய முழு விபரமும் தெரியும்.

தமிழில் பதிவிடுவது ஒன்றும் சிரமமே இல்லை (பாருங்க நானே எவ்வளவு நீள பதிவு போட்டிருக்கேன்......)நீங்கள் இந்த இழையில் ஒரு பதிவு எப்படி தமிழில் போட்டீர்களோ அதே முறையில் போடவும். முதலில் கொஞ்சம் கடினமாக இருக்கும்....போக போக சரியாகி விடும். தமிழில் இருந்தால் தோழிகள் அனேக பேர் வந்து பதில் சொல்லுவார்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்