ராஜ்மா கிரேவி

தேதி: July 25, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (3 votes)

 

வேக வைத்த ராஜ்மா - ஒரு கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 2 பல்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - ஒரு கீற்று
ஆலிவ் ஆயில் - ஒரு மேசைக்கரண்டி


 

வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். ராஜ்மாவை 8 மணிநேரம் ஊற வைத்து குக்கரில் குழையாமல் வேக வைத்து எடுக்கவும். மற்றவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மைக்ரோவேவ் பெளலில் ஆலிவ் ஆயிலை ஊற்றி அதில் வெங்காயம் மற்றும் பூண்டை போட்டு கலக்கி மைக்ரோ மீடியமில் மூன்று நிமிடங்கள் வைக்கவும்.
இடையில் எடுத்து கிளறி விடவும்.
வெங்காயம் நிறம் மாற வதங்கியதும் தக்காளி, புதினா மற்றும் கொத்தமல்லித் தழைகளை போட்டு கலக்கி மீண்டும் மைக்ரோ மீடியமில் 3 நிமிடங்கள் வதக்கவும்.
பின் அதில் மிளகாய்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கலந்து விட்டு மைக்ரோ மீடியமில் அரை நிமிடம் வைக்கவும்
வதங்கியவற்றை ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுது, வேக வைத்த ராஜ்மா, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கலந்து வைக்கவும்.
மேலும் ஐந்து நிமிடங்கள் மைக்ரோ ஹையில் வைக்கவும். இடையில் ஒருமுறை கிளறவும்.
எண்ணெய் மிதக்கும் வரை கொதித்ததும் இறக்கவும். தேவைப்பட்டால் கூடுதலாக 2 நிமிடங்கள் வைக்கலாம்.
சுவையான மைக்ரோவேவ் ராஜ்மா கிரேவி ரெடி. இது சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி வகைகளுக்கு பொருத்தமாய் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

டேஸ்ட்டை கலரே சொல்லுது :-)
ராஜ்மா ல இது வரைக்கும், நான் ஒண்ணுமே பண்ணி பாத்தது இல்ல. கண்டிப்பா பண்ணி பாத்துட்டு சொல்றேன். கேஸ் ல பண்ணலாம் இல்ல?(இது என்ன கேள்வின்னு நினைக்கறீங்களா?) ஒரு சந்தேகம் தான்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மெத்தெட் வித்தியாசாமா இருக்கு

கண்டிப்பா நல்லா இருக்கும்...

செய்து பார்த்துட்டு சொல்றே இளவரசி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

குறிப்பை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு நன்றி

சுகி,

//ராஜ்மா ல இது வரைக்கும், நான் ஒண்ணுமே பண்ணி பாத்தது இல்ல//

சுண்டல் கூடவா..:)
/
//கேஸ் ல பண்ணலாம் இல்ல//

தாரளமா பண்ணலாம்..:0

நன்றி சுகந்தி

ஆமினா,

பிடிச்சுருக்கா செஞ்சு பாருங்க

தங்கள் பதிவுக்கு நன்றி ஆமினா.:-

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வித்தியாசமான சுவையான குறிப்பு..
சத்தானதும் கூட
செய்மிறையும் விளக்கப்படமும் நல்லா இருக்கு இளா :)
வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சம சூப்பரான சுவையான க்ரேவி. அவசியம் மாலே போனா செய்து பார்க்கிறேன்... பார்ட்டிக்களின் போது செய்ய நல்ல குறிப்பு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இளவரசி,
நானும் இதுவரை ராஜ்மா வாங்கியதில்லை.உங்க குறிப்பு பார்க்கவே நல்லா இருக்கு.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

சூப்பர் இளவரசி. கட்டாயம் ட்ரை பண்றேன்.

‍- இமா க்றிஸ்

இளவரசி மேடம்,
ஸ்மார்ட் குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ராஜ்மா கிரேவி நன்றாக உள்ளது இளவரசி வாழ்த்துக்கள்...நானும் செய்து பார்க்கிறேன்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

பிடிச்சுருக்கா.....அப்ப செஞ்சு பாருங்க மிக்க நன்றி :-

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

கண்டிப்பா செஞ்சு பாருங்க...வனி..நன்றி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹர்ஷா சன்னால/பட்டாணில கூட ட்ரை பண்ணலாம் நல்லாதான் இருக்கும்
செஞ்சு பாருங்க நன்றி

இமா நீங்க ஓவன் சமையல் எக்ஸ்பெர்டாச்சே..நிச்சயம் ட்ரை பண்ணுவீங்கன்னு தெரியும் :) நன்றி இமா

கவிதா ,பிடிச்சுருந்தா செஞ்சு பாருங்க நன்றி

குமாரி ,சப்பாத்திக்கு ரொம்பவே நல்லா இருக்கும்....ட்ரை பண்ணுங்க
அப்புறம் விடவே மாட்டீங்க :) நன்றி குமாரி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி ராஜ்மா செய்ததில்லை செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்

இளவரசி ராஜ்மா கிரேவி பார்க்கவே சூப்பரா இருக்கு ஆனால் நான் இதுவரை ராஜ்மா வைத்து எதுவும் செய்ததே இல்ல இனி செய்துடவேண்டியதுதான் வாழ்த்துக்கள்..

இப்ப என்ன செய்வீங்க இப்ப என்ன செய்வீங்க :))))உங்க காமெடிக்கு அளவே இல்லப்பா i like uuuu.....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பாத்திமா ,மிக்க நன்றிங்க செஞ்சு பாருங்க

ஸ்வர்ணா,ராஜ்மாவை செய்ய வேண்டாம்..கடையிலேயே கிடைக்கும்..க்ரேவிமட்டும்தான் செய்யணும் :)
சரியா?ரொம்ப நன்றி ஸ்வர்ணா செஞ்சு பாருங்க க்ரேவியை:0

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி உங்க ராஜ்மா கிரேவி முழுவதும் ஓவன்லையே செய்தேன்,நன்றாக இருந்தது, முதல் முறை ராஜ்மா முயற்சி செய்தேன் வெற்றி .

வாழ்த்துக்கள் .

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪