யாவுமானாய் என்னவனே - ஆமினா - அறுசுவை கவிதை பகுதி - 19667

Kavithai Poonga

யாவுமானாய் என்னவனே - ஆமினா

யாவுமானாய் என்னவனே

புன்னகை உதிர்க்கும் நொடிபொழுதையும்
கண்ணீர் வடிக்கும் தருணங்களையும்
உன்னிடம் உன்னிடம் மட்டுமே
சொல்ல நினைப்பது ஏனடா?

வார்த்தைகள் மட்டும்
என் வாழ்க்கைக்கு வழிகாட்டாது
என தெரிந்தும் நீ
நீ மட்டுமே வழிகாட்டியாய் இருக்க
மனம் துடித்ததடா……..

சந்தோஷங்கள் என்னை சூழ்ந்தும்
மகிழ்ச்சி மட்டுமே முகத்தில் தங்கியும்
உன்னுடன் பேசாத
வினாடிகள் வியாதியாகி போகுதேனடா?

புல்வெளி போர்வையின் மேல்
தென்றலும் சொல்லாமல் கொள்ளாமல்
என் மேனியை தடவியதாலும்
என் அன்னையின் மடியின் கதகதப்பிலும் மயங்கியதால்
உன்னை நினைக்காத நொடிகள் நோய்களாகி
நரகத்தில் அழைத்திட்டதடா?

என் அதிகாலை தனிமை நடைபயணத்தில்
துணையாய் வருவது
நேற்று நீ சிரிக்க வைத்த பேச்சுக்கள் தான்
விழி நீரும் சர்க்கரையாய் தித்திக்கும் என
நான் உணர்ந்தது உன் மடியில் சாய்ந்த பின்பு தான்

சாப்பிட மறந்தாலும்
மறக்காமல் நினைவூட்டும்
என் அன்னையோ நீ

என் தவறுகளையும் நியாயப்படுத்தி
என் சந்தோஷத்தை ரசிக்கும்
என் தந்தையோ நீ

தடுக்கி கீழே விழும் போதெல்லாம்
என் கரங்களை இறுக்கப்பற்றி தூக்கிவிட்டாய்
என் தோழனா நீ

தாயிடம் மறைத்த ரகசியத்தை
உன்னிடம் சொன்னால்
மறு நொடியே
பெட்டியில் பூட்டி
சாவியை தொலைக்கும்
என் நம்பிக்கையான தோழியா நீ?

பாதைகளில் பக்குவமாய்
நெருஞ்சிகளை அகற்றி
மலரில் இன்று நடக்க வைத்தாய்
என் சகோதரனா நீ

எனக்காய் எனக்காய் மட்டுமே
அனுதினமும் துடிக்கின்றாய்
என் சகோதரியா நீ?

சொடுக்கிட்டு அழைத்திட்டால்
மறுகனமே கட்டளை நிறைவேற்றுகிறாய்
என் சேவகனா நீ?

துணையின்றி எங்கும் சென்றால்
பின்னாடியே வருகிறாய்
என் பாதுகாவலனா நீ?

வருவாயா என நீ கேட்ட நொடிபொழுதிலேயே
உனக்காகவே எல்லா உறவுகளையும்
தூக்கியெறிந்துவிட துணிந்துவிட்டேன்
யார் தான் நீ?

இப்படியொருவன் கிடைக்க வேண்டும் என்று
தவமேதும் கிடக்கவில்லையே

இப்படியொருவன் எனக்காய் உருக வேண்டும் என
வரம் வாங்கியதாய் நினைவேதுமில்லையே

தவமிருக்காமல் வரம் வேண்டாமல்
கடவுளாய் அனுப்பிய பரிசே…

என்றென்றும்
என் நிழலாய்
என் உடலின் உயிராய்
என் உணர்வாய்
என் கணவனாய்
என் பாதையில்
நீ பயணிப்பாய் என்ற தைரியத்தில் தான்
என் கால்களும் பயணிக்கின்றன
மரணிக்காமல்!!!

- ஆமினா

 
 ஆமி

வழக்கம் போல அழகான கவிதை ;)
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆமினா

ஆமினா அருமையான கவிதை வாழ்த்துக்கள்.....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

யாவுமானாய்...

அழகான கவிதை ஆமினா.

‍- இமா க்றிஸ்

ஆமி

சூப்பர் கவிதை ஆமி. வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

ஹாய் ஆமினா

ஹாய் ஆமினா, ரொம்ப ரொம்ப அழகு உங்க கவிதை வாழ்த்துக்கள்;))

உன்னை போல பிறரையும் நேசி.

ஆமினா

காதலுள்ள உள்ளத்தில் பிறக்கும் கவிதை கொள்ளை அழகு..

உங்கள் உள்ளமும் உணர்வுகளும்..கவிதையில் பொங்கி வழிகிறது.....

ஒவ்வொரு வரியும் அருமை....!!
வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஆமினா உங்கள் கவிதை அருமை

ஆமினா உங்கள் கவிதை அருமை ஒவ்வொரு வரிகளும் அற்புதம்

பானுகமால்

நன்றி

கவிதையை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி....!!!

@ரம்யா
உங்க அளவுக்கு முடியலன்னாலும் ஏதோ என் அளவுக்கு :)
மிக்க நன்றி ரம்ஸ்

@ஸ்வர்ணா
ரொம்ப தேங்க்ஸ் ஸ்வர்ணா

@இமா
மிக்க நன்றி இமா

@பவி
நன்றி பவி

@தேவி
ரசிச்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி :)

@இளவரசி
//உங்கள் உள்ளமும் உணர்வுகளும்..கவிதையில் பொங்கி வழிகிறது.....//
மிக்க நன்றி இளவரசி

@பானுகமால்
மிக்க நன்றி பானு :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா

ஹாய் ஆமினா
கவிதை எலுதுவீங்களா நான் இப்ப தாங்க பாக்ரென்
சூப்பரா இருந்தது ஆமினா என்னா சொல்றது தெரியல வார்தைலாம் அழகா இருக்கு:)

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

ஷிரின் பானு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஹாய் ஷரின் நல்லா இருக்கீங்களா? :)

//கவிதை எலுதுவீங்களா// எனக்கே தெரியல ஷரின் :))

//ஆமினா என்னா சொல்றது தெரியல///
திட்டாம இருக்குற வரைக்கும் சந்தோஷம் தான் :))

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா