பா கொழுக்கட்டை

தேதி: July 26, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

புழுங்கல் அரிசி (அ) இட்லி அரிசி - 2 டம்ளர்
தேங்காய் துருவல் - 1 டம்ளர்
வெல்லம் துருவியது - 11/2 டம்ளர்
ஏலப்பொடி - 1 ஸ்பூன்
நெய் - 3 ஸ்பூன்
தேன் குழல் அச்சுவுடன் முறுக்கு பிழியும் குழல்
உப்பு - 1/2 ஸ்பூன்


 

புழுங்கல் அரிசியை ஊரவைத்து நைசாக கட்டியாக அரைக்கவும். ஈரப்பதம் குறைய காட்டன் துணியில் மாவை போட்டு சுற்றி வைத்து எடுக்கவும்

அடி கனமான பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும். மாவை லேசான உப்பு போட்டு பிசைந்து முறுக்கு குழலில் போட்டு கொதிக்கும் தண்ணீரில் பிழியவும். வெந்ததும் தண்ணீரில் மிதக்கும் தேன் குழல்களை எடுத்து ஆற வைக்கவும். எல்லா மாவினையும் பிழிந்து எடுக்கவும். ஆறியதும் குழல்களை உதிர்த்து வைக்கவும்.பாத்திரத்தில் மீதியுள்ள தண்ணீரில் தேங்காய் துருவல், ஏலப்பொடி,வெல்லம் சேர்த்து கிளரவும். பின் அத்துடன் உதிர்த்த குழல்களை போட்டு நெய் சேர்த்து கிளறி இறக்கவும்

சுவையான பா கொழுக்கட்டை ரெடி


மேலும் சில குறிப்புகள்


Comments

நல்ல குறிப்பு

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

முதல் ஆளா வந்து பின்னூட்டம் அளித்தற்கு நன்றி ஆமினா

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு