baby movements

வணக்கம் தோழிகளே
எனக்கு இது முதல் குழந்தை. இப்போ பதினெட்டாவது வாரம் . இன்னும் குழந்தை move பண்ண தொடங்கவில்லை.
முதல் என்பதால் இன்னும் நேரம் இருக்கு என்று சொன்னார்கள். உங்களுக்கும் அப்படியா? சந்தேகம் தீர்த்து சந்தோசம் தாருங்கள்.
நன்றி
அன்புடன் விகாஷி

வாழ்த்துக்கள். ஆரோக்கியமான குழந்தையை சுகப்ரசவத்தின் மூலம் பெற்றெடுக்க வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்.

முதல் குழந்தை என்றால் நமக்கு எல்லாவற்றிற்கும் ஒரு கேள்வி இருக்கும். ஏன் இப்படி, எல்லோருக்கும் இப்படி தான் இருந்ததா, இது எப்போது நடக்கும்...இவையெல்லாம் சுகமான தருணங்கள்....விடாதீர்கள். விஷயத்திற்கு வரேன்....சிலருக்கு நான்கு மாதம் முடியும் முன்னரே கூட தெரியும் சிலருக்கு எட்டு மாதம் ஆகியும் கூட தெரியாது. அதனால் நீங்கள் சந்தோஷமாக எதிர்ப்பார்த்துக் கொண்டே இருங்கள். இந்த எதிர்ப்பார்ப்பும் சுகம் தான்.

நீங்கள் உங்கள் ஏரியாவில் இருக்கும் எதாவது ஒரு ப்ரெஞ்னன்சி வகுப்பு எதாவது இருந்தால் பொய் வாருங்கள். அங்கே உங்களுக்கு உங்களை போல் உள்ள பெண்களின் அறிமுகம் கிடக்கும்...அவர்களிடம் உங்களின் அனுவங்களை பகிர்ந்துக் கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும். கணவருடன் சேர்ந்து செல்லும் வகுப்பாக இருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும். உங்களுக்காக நடப்படும் யோகா வகுப்பிற்கு கூட சென்று வரலாம்.

உங்களுக்கு நேரமிருப்பின் மன்றத்தில் கர்பிணி பெண்கள் பகுதியில் உள்ள மற்ற இழைகளை படித்துப் பாருங்கள். உங்களுக்கு தோன்றும் அனேக கேள்விகளை நம் தோழிகள் முன்னமே பதிவு செய்திருப்பார்கள்...அதற்க்கு தோழிகளின் சுவாரசியமான பதிவுகளும் இருக்கும். அதிலும் உங்களின் சந்தேகம் தீரவில்லைஎன்றால் இதே இழையில் உங்களின் அனைத்து சந்தேகங்களையும் கேட்கவும்.

உங்களின் பெயரே அதானா?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

விகாஷி,,,,,, நலம் தானே.. வாழ்த்துக்கள். எனக்கு ஆறாவது மாதம் ஆனால் இன்னும் அசைவு தெரியவில்லை. எட்டாவது மாதம் வரை வெயிட் பண்ணுங்க பா. மனதை குழப்பிக் கொள்ளாதீர்கள் . All the best be happy

கவலை படாதீங்க. இந்த லின்ங் போய் பாருங்க. பயனுளதாக இருக்கும்.

http://www.babycentre.co.uk/pregnancy/antenatalhealth/physicalhealth/babysmovements/

hai அக்கா! congrats .எனக்கும் இது 1st baby தான்.இது 7th month .எனக்கு 6th month ல தான் movement தெரிசது.no problem wait பண்ணுக சிக்கிரமே movements தெரியும் .
அப்புறம் neega thungurathae கஷ்டம்.பேபி தூங்க விடாது அக்கா.

நன்றி லாவண்யா ,,அன்பான விளக்கமான பதில். இப்போ ஒன்னுமே அசைவு இல்லாததால் நாம் கர்ப்பமாக இருக்கோம என்ற சந்தேகமே வந்துவிடும். ஆனாலும்
nausea வோமிடிங் தான் நம்பிக்கை ஊட்டுகிறது. pregnancy புக்ஸ் நிறைய வாசிக்கிறேன். phd செய்யலாம் போல ஆனாலும் எல்லாருக்கும் ஒரே போல இருகதுதனே.
நன்றி கௌரி ராம் . வாழ்த்துக்கள். .உங்களை போலவே வெயிட் பண்றேன்.

நன்றி ராணி கிரி, கண்டிப்பாக போய் பார்கிறேன்.

வாழ்த்துக்கள் saje .எப்போ வளைகாப்பு ....நன்றி உங்கள் பதிலுக்கு.

அடக்க ஒடுக்கமான பேபி போல அது தான் இன்னும் ஆட்டம் தொடங்கலையோ :)

hi romba santhosum nanum 15weekla iruken konchum wait pannunga ippa yethum theriathu oru sillaruku therium atha pathi kavlapadathinga yennakum ithu than muthal kulanthai

ONLY CLOSE FRIENDS CAN EASILY IDENTIFY SME LITTLE LIES IN UR SMILE & SME MRE TRUTH IN UR TEARS NVR MISS THEM IN UR LIFE

மேலும் சில பதிவுகள்