கொத்தமல்லி சப்பாத்தி - 1

தேதி: July 27, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. கோதுமை மாவு
2. கொத்தமல்லி இலை - 1 கட்டு
3. சாம்பார் தூள் (அ) மிளகாய், தனியா தூள் - 2 தேக்கரண்டி
4. கடலை மாவு - 1 மேஜைக்கரண்டி
5. உப்பு
6. எண்ணெய்
7. நெய்
8. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி


 

கோதுமை மாவை உப்பு சேர்த்து வழக்கம் போல் சப்பாத்தி மாவு பதத்தில் தயார் செய்யவும்.
கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சாம்பார் தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து கொத்தமல்லி இலை சேர்த்து லேசாக வதக்கி எடுத்து கடைசியாக கடலை மாவு கலந்து கையில் பிடிக்கும் பதத்தில் வைக்கவும்.
கோதுமை மாவை தேய்த்து அதில் கொத்தமல்லி கலவை வைத்து மூடி மீண்டும் சப்பாத்தியாக தேய்த்து கல்லில் போடவும்.
இரண்டு பக்கமும் ஒரு முறை திருப்பி போட்ட பின் தேக்கரண்டியால் நெய் தேய்த்து விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.


இந்த சப்பாத்தி பக்க உணவு ஏதும் இல்லாமலே சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நல்ல குறிப்பு அக்கா

வாழ்த்துக்கள்...

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பு சூப்பர். இப்போ தொத்துமல்லி ஸ்டாக் இல்ல. ;( வாங்கிட்டு செய்து சாப்பிடணும்.

‍- இமா க்றிஸ்

அவசியம் செய்து பார்த்து பிடிச்சுதான்னும் சொல்லுங்க. :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

nice

மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா