Hb லெவல் அதிகரிக்க என்ன சாப்பிடலாம் ?

ஹாய் தோழிகளே, நான் இப்போது 48 நாள் கர்ப்பம். இன்னும் ஒரு வாரத்தில் ஸ்கேன் செய்ய போக வேண்டும். blood டெஸ்ட் எடுத்து விட்டேன். TSH லெவல் நார்மலாக உள்ளது. அனால் ஹேமோக்லோபின் லெவல் 9 . 2 ஆக உள்ளது. இப்போது iron tablet , போலிக் அசிட் தப்ளேட் , வைட்டமின் அண்ட் ஜின்க் tablet எடுத்து கொண்டிருக்கிறேன். இயற்கையான முறையில் என் Hb லெவல் அதிகரிக்க ஏதேனும் வழிகள் உள்ளதா?
சொல்லுங்களேன் plz . அத்துடன் எனக்கு அடிக்கடி அடி வயிறில் வலி இருக்கிறது, சாப்பிட்டவுடனே இந்த வலி தெரிகிறது. மருத்துவரிடம் கேட்டதுக்கு இந்த மருந்துகளை எடுத்து கொள்ளுமாறு சொன்னார், மற்றபடி
காரணங்கள் என்ன என்பதை சொல்லவே இல்லை, இதனால் எதுவும் பிரச்சினைகள் வருமா?
எனக்கு மீன், மற்றும் முட்டை மிகவும் பிடிக்கும் , தினந்தோறும் ஒரு முட்டை எடுத்து கொள்ளலாமா? தற்போது தினமும் ஒரு கீரை சாப்பிட்டு வருகிறேன். இதை நான் தொடர்ந்து சாப்பிடலாமா?

உங்களுடைய பதிலுக்காக காத்திருக்கிறேன்.
நன்றியுடன்,
மகாசங்கர்

அன்புத் தோழி மஹாசங்கர், தாயான உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :) உங்கள் கேள்விக்கான பதில் http://www.arusuvai.com/tamil/node/19374 இந்த இழையில் உள்ளது.

தோழியே, இன்னொரு முக்கிய வேண்டுகோள். நீங்கள் இழை தொடங்குவதற்கு முன்பு உங்களுக்கு வேண்டிய தகவல் உள்ள தலைப்பில் சென்று பார்த்து விட்டு தொடங்குங்கள். கர்ப்பிணிகள் சம்பந்தப்பட்ட இழையில் இது போன்ற சந்தேகங்களுக்குரிய ஆலோசனைகள் கண்டிப்பாக இருக்கும். ஒரே தலைப்பில் பலரும் இழைகளை தொடங்குவதால், ஒரே பதிலை சொல்லி சொல்லி தோழிகள் அலுத்து போயிருப்பார்கள். முக்கியமாக பதில் தெரிந்தவர்கள் கூட தர முன்வர மாட்டார்கள். நீங்கள் புதியவராக இருப்பின் உங்களுக்கு இந்த பதில் பொருந்தும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் கல்பனா,
தங்களுடைய பதிலுக்கு மிகவும் நன்றி. நான் இப்போது தான் அறுசுவையில் இணைந்துள்ளேன். ஆனால் மன்றத்தால் விவாதிக்கப்பட்ட அனைத்து கருத்துகளையும் படித்து பார்த்தேன். ஆனால் முட்டை சாப்பிடலாமா என்ற சந்தேகத்துக்கு யாருமே பதில் தரவில்லை, தயவு செய்து இந்த கேள்விக்கு மட்டும் தோழிகள் யாரவது பதில் தர முடியுமா?

நட்புடன்,
மகாசங்கர்

மஹா, கர்ப்பமாக இருக்கும் சமயம் கட்டாயம் முட்டை உண்ண வேண்டும். இதை உங்களை பரிசோதிக்கும் மருத்துவரும் பரிந்துரை செய்வார். முதல் மூன்று மாதங்கள் கொஞ்சம் உடல் சூடு தரும் உணவுகளை தவிர்க்கும் பொருட்டு முட்டையின் அளவை குறைத்துக் கொள்ளலாம். ஆனால் 3 மாதத்திற்கு பிறகு தினசரி உணவில் ஒரு முட்டையாவது சேர்த்துக் கொள்ளுங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நீங்க தாராளமாக முட்டை சாப்பிடலாம், ஆனால் மஞ்சள் நீக்கி விட்டு வெள்ளை மட்டும் சாப்பிடவும்.மீன் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய ஒன்று, அளவுடன் எடுத்து கொள்வது நல்லது.

ராஜி

மேலும் சில பதிவுகள்