கிழங்கு அடை

தேதி: June 13, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மரவள்ளிக்கிழங்கு - ஒரு கிலோ
தேங்காய் துருவல் - 4 கப்
சீனி - 3 கப்
டின் பால் - அரை கப்
முந்திரிப்பருப்பு - 10
நெய் - 2 ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை


 

மரவள்ளிக்கிழங்கை பொடியாக துருவி அத்துடன் தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு, பால், சீனி, உப்பு, நெய் அனைத்தையும் போட்டு லேசாக பிசைந்து விடவும்.
ஒரு தட்டில் சிறிது நெய் தடவி, இந்த கலவையை கொட்டி பரப்பி, இட்லி பானையில் வைத்து அவிக்க வேண்டும். வெந்தவுடன் கட்டம் கட்டமாக வெட்டி எடுத்து பரிமாறலாம்.


வேகவைக்கக் கூடிய தட்டை இட்லி பானைக்குள் வைக்கும் அளவுக்கு சரியாக பார்த்துக் கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்