கொத்து புரோட்டா

தேதி: July 27, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (8 votes)

 

புரோட்டா - 3
சால்னா - கால் கப்
முட்டை - 2
வெங்காயம் - 4
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - சிறிதளவு


 

புரோட்டாவை கையால் உதிர்த்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போடவும்.
பின்னர் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி, உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
இந்த கலவையை ஒரு ஓரத்தில் ஒதுக்கிவிட்டு நடுவில் முட்டையை சேர்த்து கிளறவும்.
முட்டை நன்கு பொரிந்த பின் எல்லாம் சேர்த்து ஒன்றாக கிளறவும். பின் அதில் சால்னா ஊற்றி கிளறவும்
பின்னர் கையால் சிறிய சிறிய துண்டுகளாக உதிர்த்த புரோட்டாவை சேர்த்து மசாலா ஒட்ட பிரட்டி விட்டு இறக்கவும்.
சுவையான கொத்து புரோட்டா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் ஆமினா
இப்பவே செய்து சாப்டனும் போல இருக்கு
பார்க்கவே அழகா இருக்கு ஆமினா
இன்ஷா அல்லாஹ் நாளய்க்கு செய்து பார்த்துட்டு சொல்ரேன் ஆமினா:)

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

நல்ல சுவையான குறிப்பு. எனக்கும் பிடிக்கும்... செய்து பார்த்துட்டு சொல்றேன் :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமினா நான் நல்லாருக்குரது பிடிக்கலை எப்படி வெயிட்ட குறைக்கிறதுன்னு யோசிச்சுக்குட்டு இருந்தா விட மாட்டிங்க போலிருக்கே ஓஹோ இது வெயிட் போடனும்னு கேட்டாங்களே அவங்களுக்கு உள்ள குறிப்பா சரி சரி ஏக்கத்தோட போறேன் நல்லா எல்லரும் பன்னி சாப்புடுங்க வாரேன்

எனக்கு ரொம்ப பிடித்த குறிப்பு பார்க்கவே அருமையா இருக்கு வாழ்த்துக்கள் by Elaya.G

ஆமினா கொத்து பரோட்டா சூப்பர்ங்க என்னவருக்கு பிடிச்ச டிஷ் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஆமினா... சூப்பர் குறிப்பு கொடுத்திருகீங்க... நானும் இதே முறைல தான் செய்வேன்... ஆனா சிக்கன் குழம்பு இருக்கற நாள் மட்டும் தான் செய்வேன்... :) வெஜ் சால்னா-வ விட எனக்கு சிக்கன் குழம்பு சேர்த்தா தான் பிடிக்கும்... கூடவே சிக்கன் பீஸ் சின்னதா கட் பண்ணி போட்டா ரொம்ப சுவையா இருக்கும்...

வாழ்த்துக்கள்....

வித்யா பிரவீன்குமார்... :)

ஆமி,

எளிய முறையில் செய்து இருக்கீங்க
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஆமி,
என்னவருக்கு பிடித்த ரெஸிப்பி.கண்டிப்பா செய்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள்.

yesterday i did ur kothu parotta.its my hubby's favourite food.he said its very tasty.the credit goes to u.thank u for giving this recipe.

எல்லாருக்கும் பிடித்தமான குறிப்பு.. வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சலாம் ஆமி
ந்ல்ல சுவையான குறிப்பு நானும் இப்படித்தான் செய்வேன் சின்ன மாறுதளுடன்
எங்க வீட்டில் அனைவருக்கும் பிடித்தாமனது அடிக்கடி செய்வேன் வாழ்த்துக்கள்

கொத்துபராட்டா வாய்யல்லாம் ஊருது ரெம்ப ஈசியாவும் இருக்கு நான் மீன் கரி ஊத்தி செய்வேன்
ஆமினா நீங்க எங்கே வசிக்கிறிங்க தெருஞ்சுக்கலாமா

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி

@சலாம் ஷிரின் பானு
செய்து பார்த்துட்டு சொல்லுங்க
மிக்க நன்றி

@வனிக்கா
மிக்க நன்றி அக்கா

@பஸரியா
ஒரு நாள் சாப்பிட்டா வெயிட் ஏறாதுங்க... சும்மா பயப்படாம செஞ்சு பாருங்க :)

@இளையா
மிக்க நன்றீ இளையா... பட் நோ அக்கா :)

@ஸ்வர்ணா
செய்து கொடுத்து அசத்துங்க :)

@வித்யா
அது என்னமோ உண்மை தான். சிக்கன் சால்னால பண்ணா தான் கமகன எதிர்பார்க்கலாம் :)
நானும் முயற்சி பண்ணியிருக்கேன் சிக்கனில்.... சால்னாவில் உள்ள சிக்கனை கட் பண்ணி போடுவேன். இறாலில் செய்தாலும் சூப்பரா இருக்கும் :)

@கவிதா
மிக்க நன்றி கவிதா

@அன்பரசி
மிக்க நன்றி அன்பரசி

@சித்ராராமனன்
செய்துட்டு மறக்காம சொன்னதுக்கு மிக்க நன்றி சித்ரா. உங்க கைப்பக்குவம்.. சோ உங்களுக்கு தான் பாராட்டு :)

@ரம்ஸ்
மிக்க நன்றி

@பாத்திமாம்மா
வ அலைக்கும் சலாம் வரஹ்...
மிக்க நன்றி பாத்திமாம்மா

@பல்கீஸ்
சலாம்
சீக்கிரம் செய்து பார்த்துட்டு சொல்லுங்க பல்கீஸ்
நான் லக்னோல இருக்கேன் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா கொத்து பரோட்டா எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் இப்படிதான் செய்வேன் .வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪