புளிக்குழம்பு

தேதி: July 28, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (12 votes)

 

கத்தரிக்காய் வற்றல் - ஒரு கைப்பிடி
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
புளி - ஒரு எலுமிச்சை அளவு
வரமிளகாய் - ஒன்று
பூண்டு - 5 பல்
கொத்தமல்லி தழை - சிறிது
தாளிக்க:
கடுகு - சிறிது
கடலை பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
அரைக்க:
சீரகம் - 2 மேசைக்கரண்டி
சோம்பு - ஒரு மேசைக்கரண்டி
மிளகு - 1 1/2 மேசைக்கரண்டி
மல்லி - ஒரு மேசைக்கரண்டி
வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
வரமிளகாய் - 2
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - 6 இதழ்


 

வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் மல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வரமிளகாயை இரண்டாக கிள்ளிக் கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் அரைக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து ஆறிய பின் அரைத்துக் கொள்ளவும்.
அதே பாத்திரத்தில் மீண்டும் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும். நன்கு தாளித்ததும், பூண்டு மற்றும் கத்தரிக்காய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
பின்னர் ஒரு வரமிளகாய் மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பு போட்டு நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்
இப்போது தக்காளி சேர்த்து குழைந்து வரும்படி வதக்கவும்.
நன்கு அனைத்தும் ஒன்று சேர்ந்து வதங்கியதும், அரைத்து வைத்துள்ளவற்றை சேர்த்து நன்கு பிரட்டவும்.
ஐந்து நிமிடம் நன்கு வதக்கி, கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
சுவையான கத்தரிக்காய் வற்றல் புளிக்குழம்பு ரெடி. வேண்டுமெனில் மல்லி தழை சேர்த்து இறக்கலாம். கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சம சூப்பர் புளிக்குழம்பு... படமும் அசத்தலா வந்திருக்கு... பார்த்தாலே சாப்பிட தோனுது. செய்துட்டு வாரேன் மேடம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரம்யா புளிக்குழம்பு வத்தக்குழம்பு கலருக்கு சூப்பரா இருக்கு. எண்ணெய் பிரியற வரைக்கும் கொதிக்க விடனும்னா எவ்வளவு எண்ணெய் சேர்க்கனும்.

ரம்யா இப்பதான் பாக்குறேன் ஐய் புளிக்கரி எனக்கு ரெம்ப புடிக்கும் நாலேக்கே செய்துருவேன்
இப்ப விருப்ப பட்டியலிலும் சேக்கபோரேன் பாய்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

பயங்கரமா கலக்குறீங்க சமையல்ல :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரம்யா... இது கத்தரிக்காய் வற்றல் இல்லாம பண்ணலாமா...??? அவர் கத்தரிக்காய் சாப்பிட மாட்டார்... அதே டேஸ்ட் தான் வருமா...??? பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்... மெயில் அனுப்பினேன் பதில் இல்லை... ரொம்ப வேலையா...??

வித்யா பிரவீன்குமார்... :)

இன்னிக்கு தான் புளிக்குழம்பு செய்தேன், நான் வேற மாதிரி செய்வேன் அரைக்காமல். உங்களை மாதிரி செய்றேன். கத்திரிக்காய் அவ்வளவு பிடிக்காது, சுண்டைக்காய் வத்தல் அல்லது வெண்டை வத்தலில் செய்துட்டு சொல்றேன்.

சமையலில் ஒண்ணும் தெரியாம இருந்துட்டு ஒரு 5 ஸ்டார் செஃப் மாதிரி சமைக்க ஆரம்பிச்சாச்சு, வாழ்த்துக்கள் மா

அன்புடன்
பவித்ரா

ரம்யா,
புளிக்குழம்பு அருமை..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நன்றி

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி ;)

வனி
ரொம்ப நன்றி.கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க :)

வினு
எண்ணேய் எப்பவுமே உங்க விருப்பம் தான் .. நான் அதிகம் எண்ணேய் சேர்க்கமாட்டேன். புளிக் குழம்புனாலும். ஆனா ரெண்டு குழி சேர்த்து நல்லா எண்ணேய் மேலே பிரிந்து நின்றால் சுவையாதான் இருக்கும். உங்க அளவுபடி போட்டுக்கோங்க.

நன்றி :)

பல்கீஸ்
ரொம்ப நன்றி.செய்துட்டு எப்படி இருந்ததுனு சொல்லுங்க ;)

ஆமி
ரொம்ப நன்றி ;)

விது
கத்தரிக்காய் வற்றல் இல்லாமலும் செய்யலாம் டா..
பூண்டு கொஞ்சம் அதிகமா தாளிச்சுக்கோங்க.. மெயில் பார்த்தேன்டா.. ஆனா ஆன்லைனில் வருவீங்களானு பார்த்தேன் ;).. வேலை கொஞ்சம் அதிகம் தான் ;( நன்றி

பவி
ரொம்ப நன்றி பவி.. கண்டிப்பா செய்து பாருங்க.. எந்த வேலையும் முன்னமே கத்துக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஆனா எந்த வேலையும் செய்யும் போது டெடிகெஷனா செய்தா போதும்.. அப்படி தான் நான் என்னுடை அலுவலக பணியிலும். ;)

நன்றி டா...

கவி
ரொம்ப நன்றி கவி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்ஸ்,
புளிக்குழம்பு என்னோட எவர்க்ரீன் ஃபேவரிட்.சூப்பரா இருக்கு.கத்தரிக்காய் வற்றல் இப்போதான் கேள்விபடுறேன்.செய்முறையும் நல்லா இருக்கு.வழக்கம்போல படங்களும் அசத்தல்.வாழ்த்துக்கள்.

அசத்தலான புளி குழம்பு.....கத்திரிக்காய் வற்றல் நம்மூர் சரக்கா? இல்லை அங்கே உங்களுக்கு கிடைக்குதா?இதற்க்கு பெயர் வற்ற குழம்பு இல்லையா?

வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கலரே சூப்பரா இருக்கு. கத்திரிக்காய் வற்றல் இங்க கிடைக்குதான்னு பார்த்து இந்த வாரமே செய்து பார்த்திடுறேன்.

அன்புடன்,
இஷானி

புளிகுழம்பு சூப்பர் நல்லா இருக்கு ரம்யா வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

புளிகுழப்பு வாசம் அங்கே வருதா ரம்யா அடுப்பில் இருக்கு இன்னம் அடைக்கல நல்ல வாசமா இருக்கு நீங்க சொன்னது போலவே எல்லாம் செய்துட்டேன்
கத்திக்காய் வத்தல் இல்லை கொத்தோரங்காய் சுன்டல் மிளகாய் வத்தல்கள் தான் இருந்தது
அதனால் கத்தரிக்காயே லேசா மிளகாய்த்தூள் உப்பு போட்டு நல்லா பொரித்து கரியில் சேத்து விட்டேன்
ரம்யா விருப்ப பட்டியலிலும் சேர்த்துவிட்டேன் சுவைய் சூப்பர்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

ரொம்பா சூப்பெரான கலர் புல் குறிப்பு கொடுத்து இருக்கீங்க படங்கள் அருமை வாழ்த்துக்கள் அக்கா by Elaya.G

எனக்கும் ரொம்ப பிடிக்கும் பா.. இப்ப தான் கேள்விபடறீங்களா? ஒன்னுமில்லை கத்தரிக்காயை சன்னமா அறிந்து காய வெச்சுடுங்க.. நன்றி :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நம்ம ஊரு சரக்கு இல்லை.. ஹீஹீஹீ.. இங்கே எக் ப்லாண்ட் வாங்கி வாடிடுச்சு.. உடனே சன்னமா நறுக்கி வெயிலில் சுக்கா காய வெச்சு டப்பாவில் போட்டு வெச்சுட்டேன்.. சூப்பரான வாசத்தோட அருமையா இருக்கு.. கத்தரிக்கா வற்றல் புளி குழம்புனு தான் பேரு கொடுத்து இருந்தேன்.. ரொம்ப நீளமா இருக்குனு சுருக்கி வெளியிட்டாங்க போல. நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

டிக்கடி அறுசுவையில் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி.. லாவண்யாக்கு கொடுத்து இருக்கும் பதிவை பாருங்க.. அப்படி தான் நான் செய்தேன். நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றி :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

செய்து பார்த்து பதிவும் மறக்காமல் போட்டதற்கு மிக்க நன்றி ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரொம்ப நன்றி டா ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா சூப்பர் புளிக்குழம்பு வாழ்த்துக்கள்

சூப்பரான கத்திரிவத்தல் புளிக்குழம்பு வாழ்த்துக்கள் ரம்ஸ்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

Hi US la enga irukeenga, I am living in Toronto...