மசாலா இடியாப்பம்

தேதி: July 29, 2011

பரிமாறும் அளவு: 2 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

இடியாப்பம்-4
முட்டை-2
கடுகு,உளுந்து- 1/2 ஸ்பூன்
சீரகம்- சிறிதளவு
கறிவேப்பிலை- அரை கொத்து
பச்சை மிளகாய்-1
வெங்காயம்-2
தக்காளி-1
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
கொத்தமல்லி- சிறிதளவு


 

இடியாப்பம் உதிர்த்து வைக்கவும்

எண்ணெயில் கடுகு,உளுந்து,சீரகம்,கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளிக்கவும்

பின் வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதில் முட்டையை உடைத்தூற்றி நன்கு வதக்கவும்.

பின்னர் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்

நன்கு தக்காளி குழைந்ததும் இடியாப்பம் சேர்த்து கிளறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஆமினா சலாம் ரெம்ப சூப்பரான சாப்பாட்டை ரெம்ப எழிமையா சொல்லிட்டீங்க நோம்பு வந்துருச்சு செய்துர வேண்டியதுதான் விருப்பட்டியளில் சேர்த்துவிட்டேன் செய்துட்டு மீண்டும் வருவேன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

வ அலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

மிக்க நன்றி பல்கீஸ்... சீக்கிரமா செய்து பார்த்துட்டு சொல்லுங்க :)

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய நோன்பு மற்றும் ரமலான் நல்வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா