பனீர் சுக்கா

தேதி: July 29, 2011

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பனீர்- 100 கிராம்
சோம்பு- கால்ஸ்பூன்
கறிவேப்பிலை- ஒரு கொத்து
வெங்காயம்- 2
இஞ்சி பூண்டு விழுது-3 ஸ்பூன்
வர மிளகாய்-2
உப்பு-தேவைக்கு
மிளகு - 1 ஸ்பூன்


 

மிளகை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்

பனீரை வெட்டி எண்ணெயில் பொரித்தெடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளிக்கவும்

பின் கறிவேப்பிலை மற்றும் வர மிளகாய் வறுக்கவும்

பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு பொரிய விடவும்

பின்னர் இஞ்சி பூண்டு விழுது,உப்பு சேர்த்து பச்சை வாசனை போனதும் பனீர் துண்டுகளை சேர்க்கவும்

கடைசியில் மிளகை சேர்த்து மிளகு வாசனை போக வதக்கி கொத்தமல்லி தூவி இறக்கவும்


ப்ரைட் ரைஸ்க்கும், குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்